Header Ads

 


சற்று முன்ஜெயிலர் ஒரு உண்மையான பான் இந்தியா திரைப்படம் !ஜெயிலர் ஒரு உண்மையான பான் இந்தியா திரைப்படம்; திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர்கள் மற்றும் அவர்களது பிராந்தியத்தின் விவரங்கள் இதோ !

சென்னை Aug 8,ஷாருக் கானின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பதான் மற்றும் டாம் குரூஸின் ஹை ஆக்டேன் திரில்லர் மிஷன் இம்பாசிபிள்: டெட் ரெக்கனிங் - பாகம் ஒன்று ஆகியவற்றின் அற்புதமான முடிவுகளுடன் 2023 ஆம் ஆண்டு சினிமா உலகில் ஆக்‌ஷன் படங்கள் முன்னணியில் உள்ளன. நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள பான்-இந்தியத் திரைப்படமான ஜெயிலர் இந்த வரிசையில் அடுத்ததாக வெளியாகவுள்ள அதிரடி பிளாக்பஸ்டர் திரைப்படமாகும். ரஜினிகாந்த், ஷிவ ராஜ்குமார், தமன்னா பாட்டியா, மோகன்லால் மற்றும் பலர் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் முத்துவேல் பாண்டியன் என்னும் கண்டிப்பான அதே நேரத்தில் இரக்க மனதுள்ள ஜெயிலரின் கதையாகும். ஒரு கும்பல் தங்கள் தலைவனை சிறையில் இருந்து மீட்க முயற்சிப்பதை அறிந்து, அவர்களைத் தடுக்க அவர் களமிறங்குவதே இதன் கதையாகும். ரசிகர்கள் தங்களுக்கு அருகிலுள்ள PVR INOX திரையரங்குகளில் 10 ஆகஸ்ட் 2023 அன்று படத்தைப் பார்க்கலாம். அதன் வெளியீட்டிற்கு முன்னதாக, படத்தின் நட்சத்திர நடிகர்கள் எவ்வாறு உண்மையான பான்-இந்திய இணைப்பைப் பெற்றுள்ளனர் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்!

ரஜினிகாந்த் - தமிழ் சினிமா

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான தொழில் வாழ்க்கையைக் கொண்ட ரஜினிகாந்த் சந்தேகத்திற்கு இடமின்றி தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆவார். தெலுங்கு, பெங்காலி, மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் அவர் பணியாற்றியுள்ளார். ரஜினிகாந்த் வரவிருக்கும் படத்தில் ஜெயிலர் முத்துவேல் பாண்டியன் என்னும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார், மேலும் அவரது மிகச்சிறந்த நடிப்புத் திறமையால் படத்தை வேறு உயரத்திற்கு கொண்டுசெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷிவ ராஜ்குமார் - கன்னட சினிமா

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு இந்திய மொழிகளில் பணியாற்றி வரும் ஷிவ ராஜ்குமார் 125க்கும் மேற்பட்ட கன்னட படங்களில் பணியாற்றியுள்ளார். ஜெயிலர் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். ரஜினிகாந்துடன் அவர் இணைந்து நடிக்கும் முதல் படம் இது. இப்படத்தில் சிவராஜ்குமார் வில்லனாக நடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோஹன்லால் - மலையாள சினிமா

மோஹன்லால், ரஜினிகாந்தின் இந்த மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கிடைத்த தகவல்களின்படி, மோகன்லால் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது கிளைமாக்ஸில் ஒரு முக்கியப் பகுதியாக இருக்கும்.சுனில் - தெலுங்கு சினிமா

தெலுங்கு திரைப்படங்களில் தனது அற்புதமான நடிப்பிற்காக அறியப்பட்ட பன்முகத்தன்மை வாய்ந்த நடிகரான சுனில், ரஜினிகாந்தின் இந்த் தததிரில்லர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில், இவர் ரெட்ரோ லுக்கில் தோன்றியுள்ளார். சுனில் நடிக்கும் கதாபாத்திரம் குறித்த தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை, இது பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் தொடரும்.

ஜாக்கி ஷெராஃப் - இந்தி சினிமா

ஜெயிலரில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் ஜாக்கி ஷெராஃப் மீண்டும் இணையவுள்ளார். இப்படத்தில் அவர் வில்லனாகவும், ஜெயிலராகவும் நடிப்பார் என்று கூறப்படுகிறது. நாற்பது ஆண்டுகளுக்கும் மேலான அவரது திரை வாழ்க்கையில், ஜாக்கி 13 மொழிகளில் 220 க்கும் மேற்பட்ட படங்களில் தோன்றியுள்ள ஒரு உண்மையான இந்திய நட்சத்திரமாவார்.

~இந்த செய்திக் கட்டுரையைப் படிப்பது, ஜெயிலர் குறித்த உங்கள் குதூகலத்தை அதிகமாக்குகிறது என்றால், உங்கள் அருகாமையிலுள்ள PVR INOX திரையரங்குகளில் 10 ஆகஸ்ட் 2023 அன்று வெளியாகவுள்ள இந்த பான்-இந்தியா திரைப்படத்தை தவறவிடாதீர்கள்~

PVR INOX குறித்து:

PVR லிமிடெட், பிப்ரவரி 06, 2023 முதல் INOX லெஷர் லிமிடெட் உடனான தனது இணைப்பை நிறைவு செய்தது. இணைக்கப்பட்ட நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய திரைப்படக் காட்சி நிறுவனமாகத் திகழ்கிறது. 114 நகரங்களில் (இந்தியா மற்றும் இலங்கை) 358 பிராப்பர்ட்டிகளில் 1682 திரைகளைக் கொண்டுள்ளன. துவக்கம் முதல், PVR மற்றும் INOX திரைப்படக் காட்சித் துறையில் குறிப்பிடத்தக்க மைல்கற்களை அடைவதற்கும் அளவுகோல்களை அமைப்பதற்கும் தொடர் கதைகளைக் கொண்ட பிரபலமான சினிமா பிராண்டுகளை உருவாக்கியுள்ளன. நாட்டிற்கு வெளியே உள்ள பொழுதுபோக்கை மாற்றும் ஒரு கூட்டுப் பாரம்பரியத்துடன், இணைக்கப்பட்ட இந்நிறுவனம் குழந்தைகளுக்கு நட்பார்ந்த ஆடிகள், சமீபத்திய திரையிடல் தொழில்நுட்பம், சிறந்த ஒலி அமைப்புகள், பரந்த அளவிலான F&B சலுகைகள், திரைப்படம் மற்றும் திரைப்படம் அல்லாத உள்ளடக்கம் மற்றும் பிரீமியம் திரை வகையிலுள்ள வடிவங்களின் வரிசைகளின் மூலம் சேவையாற்றி வருகின்றன.

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை