சற்று முன்



வேட்டையனாக வென்றாரா லாரன்ஸ் ? எப்படி இருக்கிறது சந்திரமுகி 2 ? விமர்சனம் இதோ !


தமிழ் சினிமா உலகின் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ராகவா லாரன்ஸ். கடந்த 2005ஆம் ஆண்டு ரஜினி, ஜோதிகா, பிரபு , நயன்தாரா  நடிப்பில் சந்திரமுகி படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதனை அடுத்து தற்போது இந்த படத்தினுடைய இரண்டாம் பாகத்தை இயக்குனர் பி வாசு இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் கங்கனா ரனாவத் , வடிவேலு, ராதிகா, மகிமா, லட்சுமி மேனன், ஒய் ஜி மகேந்திரன், ரவி மரியா, வெங்கடேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு கீரவாணி இசையமைத்திருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த படம் வெளியாகி இருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

படத்தில் ரங்கநாயகியாக நடிக்கும் ராதிகா குடும்பத்தில் அடுத்தடுத்து தொடர்ந்து அசம்பாவிதங்கள் நடந்து கொண்டிருக்கிறது. இதனால் மொத்த குடும்பமும் குலதெய்வ கோயிலுக்கு சென்று பூஜை செய்தால் தான் பிரச்சனை சரியாகும் என்று சொல்கிறார்கள். ஆனால், ராதிகா மகள் வீட்டை விட்டு மதம் மாறி திருமணம் செய்து கொள்கிறார். இதனால் அவரை ஒதுக்கி விடுகிறார்கள். பின் ராதிகா மகள் இறந்து விடுகிறார்.

தற்போது பிரச்சனை தீர குலதெய்வ கோயிலுக்கு செல்ல வேண்டும் என்பதால் இறந்து போன தன்னுடைய மகளின் குழந்தைகளும், அவர்களுக்கு பாதுகாவலனாக ராகவா லாரன்ஸும் ராதிகா வீட்டிற்கு வருகிறார்கள். இவர்கள் அனைவரையும் குலதெய்வ கோயிலுக்கு ராதிகா அழைத்துக் கொண்டு செல்கிறார். பின் அவர்களை குலதெய்வ கோயிலுக்கு அருகில் இருக்கும் வேட்டையபுரம் அரண்மனையில் தங்க வைக்கிறார்.

அனைவரும் எதிர்பார்த்தது போல சந்திரமுகி அறைக்குள் ஒருவர் செல்கிறார். அவர் வழக்கம் போல் தப்பித்து விடுகிறார். அதற்குப் பிறகு சந்திரமுகி யாரு உடம்பில் புகுந்தார்? சந்திரமுகியின் கதை? வேட்டையன் என்ன செய்தார்? ராகவா லாரன்ஸ்க்கும் வேட்டையனுக்கும் என்ன தொடர்பு? என்பது தான் படத்தின் மீதி கதை.

ராகவா லாரன்ஸ் வழக்கம் போல் இல்லாமல் இந்த படத்தில் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். ஆனால், காமெடி காட்சிகள் பெரிதாக செட் ஆகவில்லை.

மேலும், வேட்டையின் கதாபாத்திரத்தில் அவர் மிரட்டி இருக்கிறார் என்று சொல்லலாம். 

 கங்கனாவின் நடிப்பு, நடனம் அனைத்தும் நன்றாக இருக்கிறது. 

கங்கனா அவருக்கு கொடுத்த வேலையை மிக கச்சிதமாக செய்துள்ளார். 

முதல் பாகத்தில் வடிவேல் உடைய காமெடிகள் பெரிதாக மக்கள் மத்தியில் பேசப்பட்டது. ஆனால், இந்த படத்தில் கொஞ்சம் குறைவு என்று தான் சொல்லணும். 

பி.வாசுவின் இயக்கம் சிறப்பாக இருக்கிறது. பி வாசுவிற்கு ஒரு ஸ்டைல் உள்ளது அந்த ஸ்டைலில் இயக்கியுள்ளார். சந்திரமுகி காட்சிகளில் அவர் பிரம்மாண்டமாக வியக்க வைக்கும் அளவிற்கு காண்பித்து இருக்கிறார். குறிப்பாக வேட்டையன்- சந்திரமுகி இருவரும் வரும் காட்சிகள் எல்லாம் மிரள வைத்து விட்டார் இயக்குனர் பி வாசு.

லட்சுமிமேனன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அவரது கதாபாத்திரம் அவரது நடிப்பு நன்றாக உள்ளது.

நடிகை ராதிகா அவர்கள் இயல்பான நடிப்பை காண்பித்துள்ளார்.

இவர்களை அடுத்து கீரவாணியின் இசை படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்திருக்கிறது. பாடல்கள் பெரிதாக ரசிகர்கள் மத்தியில் ஈர்க்கவில்லை என்றாலும் இசை தூள் கிளப்புகிறது. மேலும், படத்தில் வரும் மற்ற நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள். 

மொத்தத்தில் திரைப்படம் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய திரைப்படம்.

Rating : 3.5 / 5

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை