சற்று முன்



400 டாடா மோட்டார் ஸ்டார்பஸ் EVகளுடன் மின்சார வாகனங்கள் பயணத்தில் முன்னணியில் பயணிக்கும் டெல்லி !


400 டாடா மோட்டார் ஸ்டார்பஸ் EVகளுடன் மின்சார வாகனங்கள் பயணத்தில் முன்னணியில் பயணிக்கும் டெல்லி !

மாண்புமிகு லெப்டினன்ட் கவர்னர் மற்றும் மாண்புமிகு முதலமைச்சர் இணைந்து  இந்தியாவின் மிகப்பெரிய மின்சாரப் பேருந்து பயன்பாட்டினைத் தொடங்கி வைத்தனர்

டாடா மோட்டார்ஸ் நாடு முழுவதும் 1,000 மின்சாரப் பேருந்துகளை டெலிவரி செய்து சாதனை படைத்துள்ளது

Chennai,7 செப்டம்பர், 2023 : இந்தியாவின் மிகப் பெரிய வணிக வாகன உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ், அதன் துணை நிறுவனமான TML CV மொபிலிட்டி சொல்யூஷன்ஸ் லிமிடெட் மூலம் 400 அதிநவீன Starbus EV பேருந்துகளை தில்லி போக்குவரத்துக் கழகத்திற்கு (DTC) வழங்கியுள்ளது. 12 வருட காலத்திற்கு 1,500 தாழ்தள, குளிரூட்டப்பட்ட மின்சார பேருந்துகளை வழங்கவும், பராமரிக்கவும் மற்றும் இயக்கவும் DTCசியின் இந்த பெரிய ஆர்டர் கிடைத்துள்ளது. மேக் இன் இந்தியா மற்றும் ஆத்மநிர்பார் பாரத் முன்முயற்சிகளுக்கு இணங்க, இந்த பூஜ்ஜியம்-உமிழ்வு பேருந்துகள் உள்நாட்டிலேயே அடுத்த தலைமுறை கட்டுமானத்திறனைப் பயன்படுத்தி கட்டமைக்கப்பட்டுள்ளன, சமீபத்திய அம்சங்கள் மற்றும் மேம்பட்ட பேட்டரி அமைப்புகளால் இயக்கப்படுகின்றன. டெல்லியின் தேசிய தலைநகர் பிரதேசம் முழுவதும் பாதுகாப்பான, சொகுசான மற்றும் வசதியான வகையில் நகரங்களுக்குள் பயணத்தை வழங்குவதற்காக அவை வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தொகுப்பின் மூலம், டாடா மோட்டார்ஸ் நாடு முழுவதும் 1,000 மின்சாரப் பேருந்துகளை வழங்குதல் என்னும் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது

400 மின்சாரப் பேருந்துகள் தொகுப்பின் தொடக்க விழாவில், 5 செப்டம்பர் 2023 அன்று டெல்லியின் மாண்புமிகு லெப்டினன்ட் கவர்னர் வினய் குமார் சக்சேனா மற்றும் தில்லியின் மாண்புமிகு முதலமைச்சர் ஸ்ரீ அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் டெல்லி அரசின், சட்டம், வருவாய், போக்குவரத்து, பெண்கள் & குழந்தைகள் மேம்பாடு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிர்வாக சீர்திருத்த்துறை அமைச்சர் திரு.கைலாஷ் கெஹ்லோட், தில்லி அரசின் தலைமைச் செயலர், திரு. நரேஷ் குமார், IAS, டெல்லி அரசின், போக்குவரத்துத் துறை ஆணையர் மற்றும் முதன்மைச் செயலர் திரு.ஆஷிஷ் குந்த்ரா, DTC நிர்வாக இயக்குனர் திருமதி ஷில்பா ஷிண்டே, IAS உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த பூஜ்ஜியம் உமிழ்வு மற்றும் அமைதியான மின்சார பேருந்துகளின் தொகுப்பை வரவேற்றுப் பேசிய, DTCயின் நிர்வாக இயக்குனர் திருமதி ஷில்பா ஷிண்டே, IAS அவர்கள், “டில்லியின் குடிமக்களுக்கு திறமையான, சிக்கனமான மற்றும் நம்பகமான சாலை போக்குவரத்து சேவைகளை வழங்குவதற்கு DTC உறுதிபூண்டுள்ளது. கூடுதலாக இந்த 400 மின்சார பேருந்துகள் தேசிய தலைநகர் பிரதேசம் முழுவதும் வெகுஜன இயக்கத்தை பாதுகாப்பானதாகவும், புத்திசாலித்தனமாகவும், பசுமையாகவும் மாற்றும். பயணிகளுக்கு தயாராக அணுகல், அதிக சௌகரியம் மற்றும் அதிக வசதியை வழங்குவதோடு, நகரின் காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கான எங்கள் கூட்டு முயற்சிகளிலும் இந்த அடுத்த தலைமுறை பேருந்துகள் பங்களிக்கும்” என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்த TML CV மொபிலிட்டி சொல்யூஷன்ஸ் லிமிடெட் தலைவர் திரு. அசிம் குமார் முகோபாத்யாய் , “DTCயின் தொலைநோக்கு மற்றும் முற்போக்கான அணுகுமுறையில் வெகுஜன நடமாட்டத்தை பசுமையானதாகவும், சத்தமில்லாததாகவும் மற்றும் உமிழ்வு இல்லாததாகவும் மாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த 400 மின்சாரப் பேருந்துகளின் அறிமுகமானது DTC உடனான எங்களது பத்தாண்டு கால உறவை மேலும் ஆழமாக்குகிறது. டில்லியின் தேசிய தலைநகர் பிரதேசம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட டிப்போக்களில் மின்சாரப் பேருந்துகளை சார்ஜ் செய்யவும், பராமரிக்கவும் மற்றும் தடையின்றி இயக்கவும் அதிநவீன சூழல் அமைப்புகளை நாங்கள் அமைத்துள்ளோம். தில்லியில் பொதுப் போக்குவரத்தை தூய்மையான, நிலையான, பாதுகாப்பான, வசதியான, வசதியான மற்றும் ஆற்றல் திறன் கொண்டதாக மாற்றும் நோக்கத்தை நிறைவேற்ற, DTCக்கு மேலும் 1100 மின்சாரப் பேருந்துகளை படிப்படியாக வழங்குவதன் மூலம் DTC உடனான எங்கள் தொடர்பை வலுப்படுத்துவதை நாங்கள் ஆவலோடு எதிர்நோக்குகிறோம்” என்று கூறினார்.

டாடா ஸ்டார்பஸ் EV, நகர்ப்புற நகர பயணத்திற்கான புதிய வரையறைகளை அமைக்கும் அதிநவீன மின்சாரப் பேருந்தாகும். அதன் முழு-எலக்ட்ரிக் டிரைவ்டிரெய்னுடன், இந்த அதிநவீன வாகனம் ஆற்றல் நுகர்வுகளை மேம்படுத்துகிறது, இதன் விளைவாக குறைந்த ஆற்றல் பயன்பாடு மற்றும் செயல்பாட்டு செலவுகள் ஏற்படுகின்றன. பூஜ்ஜிய உமிழ்வை உறுதி செய்யும் அதே வேளையில், ஏறும் வசதி, வசதியான இருக்கை மற்றும் ஓட்டுநருக்கு ஏற்ற செயல்பாடுகள் போன்ற அம்சங்களை இது வழங்குகிறது. எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், எலக்ட்ரானிக் பிரேக் விநியோகம், ஏர் சஸ்பென்ஷன், இன்டலிஜென்ட் டிரான்ஸ்போர்ட் சிஸ்டம் (ஐடிஎஸ்), பேனிக் பட்டன் போன்ற மேம்பட்ட அம்சங்களுடன், பயணிகளுக்கு வசதி மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கிறது. இந்த மின்சார பேருந்து தூய்மையான பொது போக்குவரத்திற்கான அர்ப்பணிப்பை உள்ளடக்கியது மற்றும் நகர்ப்புற பயணிகள் போக்குவரத்து தேவைகளுக்குச் சிறந்த தேர்வாகும்.

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை