சற்று முன்



காவேரி மருத்துவமனை, வடபழனி கே.கே.நகர் சிவன் பூங்காவில் (ஆட்டோமேட்டட் எஸ்ட்டேர்னல் டிஃபிபிரிலேட்டர்) AED ஐ நிறுவியுள்ளது !



காவேரி மருத்துவமனை, வடபழனி கே.கே.நகர் சிவன் பூங்காவில் (ஆட்டோமேட்டட் எஸ்ட்டேர்னல் டிஃபிபிரிலேட்டர்)  AED ஐ நிறுவியுள்ளது !

திறப்புவிழாவை விருகம்பாக்கம் தொகுதி எம்எல்ஏ திரு ஏ.எம்.வி.பிரபாகர ராஜா துவக்கி வைத்தார்.

ஆட்டோமேட்டட் எஸ்ட்டேர்னல் டிஃபிபிரிலேட்டர், இவை கையடக்க உயிர்காக்கும் சாதனங்களாகும். இவை, திடீர் மாரடைப்பினால் பாதிப்படையும்  நபர்களுக்கு ஒலி பரிமாற்ற சேவை மூலம் சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகிறது. 

சென்னை, 3 செப்டம்பர் 2023: காவேரி மருத்துவமனை வடபழனி, காவேரி குழும மருத்துவமனைகள், தமிழ்நாட்டின் முன்னணி மல்டி ஸ்பெஷாலிட்டி ஹெல்த்கேர் செயின், சிவன் பார்க் கே.கே.நகரில் ஆட்டோமேட்டட் எக்ஸ்டர்னல் டிஃபிபிரிலேட்டரை நிறுவியுள்ளது.  ரீஸ்டார்ட் ஹார்ட் ஃபவுண்டேஷனின் கீழ் மேற்கொள்ளப்படும் இந்த முன்முயற்சியானது அதிகரித்து வரும் திடீர் மாரடைப்புகளை கண்டறிந்து அவற்றை  நீக்க முயற்சிப்பது, மாரடைப்பு காரணமாக ஏற்படும் இறப்புகளைத் தடுப்பது குறித்து சமூகத்திற்குக் கற்பிப்பத, விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அத்தகைய அவசர நிலையில் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான திறன்களை அவர்களுக்கு வழங்குவது  போன்றவற்றை உள்ளடக்கியிருக்கும். விழாவை திரு. விருகம்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ., ஏ.எம்.வி.பிரபாகர ராஜா துவக்கி வைத்தார்.

ஆட்டோமேட்டட் எக்ஸ்டர்னல் டிஃபிபிரிலேட்டர் (AED) என்பது - மாரடைப்பு ஏற்படும் அவசரகால சூழ்நிலையில் பயன்படுத்தப்படும் ஒரு சாதனம் ஆகும்.  AED, எலக்ட்ரோ கார்டியோகிராமைக் கண்டறிந்து விளக்கி, மின்சக்தி ஆதாரம் (பேட்டரி) மற்றும் பேட் மின்முனைகள் போன்ற துணைப் துணைக்கருவிகளைப் பயன்படுத்தி மின்அதிர்வை வழங்கும்  வகையில் நிரலாக்கம் செய்யப்பட்டுள்ளது.  இந்த கையடக்க சாதனமானது ஒலி 

பறிமாற்ற முறையில் பயனர் பின்பற்ற வேண்டிய வழிறைகளை ஒன்றன் பின் ஒன்றாக அளிக்கிறது.  குறைந்தபட்ச பயிற்சி பெற்றவர்களும் இதைப் பயன்படுத்தலாம், AED ஐப் பயன்படுத்துவதன் மூலம் பொது இடத்தில் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட ஒரு நபரின் இதயத் துடிப்பை மீட்டெடுத்து,  சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் வரும் வரை அவர்/அவன் உடல்  நிலையை சீராக வைத்திருக்கவும் இது உதவுகிறது.

 விழாவில் பேசிய திரு. விருகம்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ., ஏ.எம்.வி.பிரபாகர ராஜா கூறியதாவது, "எப்போது வேண்டுமானாலும், குறிப்பாக பொது இடங்களில் அவசரநிலை ஏற்படலாம். இத்தகைய சூழ்நிலைகளில், மருத்துவ உதவியை அணுகுவது அவசியம். AED கள் திடீர் மாரடைப்புகளை தவிர்க்க  உதவியாக இருக்கும். ஆம்புலன்ஸ் வரும் வரை கூட்டத்தில் உள்ள எந்தவொரு  பார்வையாளரும்  இந்த முதல் உதவியை வழங்க முடியும். சிவன் பார்க் போன்ற இடங்களுக்கு தினமும் 1000க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். அனைத்து வயதினரும் தங்களுடைய உடற்பயிற்சி அல்லது ஓய்வு நேர  பயிற்சிகளுக்காக பூங்காவிற்கு வருகை தருகின்றனர். எனவே, இக்கட்டான சூழ்நிலையில் தேவைப்படும் சரியான மருத்துவ உதவியை அம்மாதிரியான இடத்தில் கிடைக்கச் செய்வது மிகவும் அவசியம்.  வடபழனி காவேரி மருத்துவமனையின் இந்த சிறப்புமிக்க முன்முயற்சியை நான் பாராட்டுகிறேன். இதன் மூலம் திடீர் மாரடைப்பு காரணமாக ஏற்படும் மரணங்களைத் நம்மால் தடுக்க முடியும்”.

காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர் மற்றும் செயலாக்க இயக்குனர் டாக்டர். அரவிந்தன் செல்வராஜ் பேசுகையில், “திடீர் மாரடைப்பு காரணமாக திடீர் மரணங்கள் அதிகரித்து வருகின்றன, பெரும்பாலானவை சரியான நேரத்தில் தலையீடு மற்றும் அவசர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் இவற்றை நாம்  தடுக்கலாம்.  70% க்கும் அதிகமான மாரடைப்புகள் மருத்துவமனை வளாகத்திற்கு வெளியே தான் நிகழ்கின்றன. சரியான நேரத்தில் நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் உயிர்வாழ்வதற்கான வாய்ப்புகள் கணிசமாக மேம்படும். எனவே, பொதுமக்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்களுக்கு இது பற்றி பயிற்சி அளிப்பது மிகவும் அவசியம்.  ரீஸ்டார்ட் ஹார்ட் ஃபவுண்டேஷன் மூலம், பிராந்தியத்தில் பல இடங்களில் AEDகளை நிறுவி அடிப்படை உயிர்காக்கும் செயல்முறை  மற்றும் முதலுதவி குறித்து ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த முன்முயற்சியானது சமூகத்தின் ஒட்டுமொத்த நல்வாழ்வில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை உருவாக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்." என்று கூறினார். 

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை