சற்று முன்



பரம்பொருள் திரை விமர்சனம் !



தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற நடிகரான சரத்குமார் மற்றும்  வளர்ந்து வரும் நடிகரான அமிதாஸ் நடிப்பில் அரவிந்த் ராஜின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் பரம்பொருள். இந்த படத்தில் சரத்குமார், அமிதாஸ் பிரதான், காஷ்மிரா, பாலாஜி சக்திவேல் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். பல எதிர்பார்ப்பு மத்தியில்  வெளியாகி இருக்கும் பரம்பொருள் படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

படத்தில் ஹீரோ அமிதாஸ் ஒரு எளிமையான குடும்பத்தை சேர்ந்தவன். இவருடைய தங்கையின் மருத்துவ செலவுக்கு லட்சக்கணக்கில் பணம் தேவைப்படுகிறது. இதனால் இவர் திருடன் ஆகிறார். இன்னொரு பக்கம் சரத்குமார் போலீசாக இருக்கிறார். இருந்தாலும் இவர் மோசமான போலீஸ் என்று சொல்லலாம். இவர் வசதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்று தவறான வழிகளில் பணத்தை சம்பாதிக்கிறார். ஒரு கட்டத்தில் சரத்குமார் பெயர் சொல்வதைக் கேட்கும் நிலைமைக்கு ஹீரோ வருகிறார்.

அப்போது ஆயிரம் ஆண்டு பழமையான சிலை ஒன்று இவர்களுக்கு கிடைக்கிறது. அதை விற்கும் பொறுப்பை ஆதியிடம் சரத்குமார் சொல்கிறார். பின் இந்த சிலையை விற்கும் முயற்சியில் ஆதிக்கு என்னென்னலாம் பிரச்சனை வருகிறது? இறுதியில் ஒரு பெரிய திருப்பத்தினால் கதையே மாறுகிறது? அந்த திருப்பம் என்ன? என்பதே படத்தின் மீதி கதை ஒரு வித்தியாசமான கதைக்களத்தை இயக்குனர் கையாண்டு இருப்பது பாராட்டுக்குரிய ஒன்று.

தற்போது நடக்கும் சிலை கடத்தல் குறித்த விவரத்தை இயக்குனர் இந்த படத்தின் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறார். இந்த சிலை கடத்தல் வேலையை திருடனும் போலீஸ் செய்தால் எப்படி எல்லாம் இருக்கும் என்பதை காண்பித்திருக்கிறார். படம் ஆரம்பத்தில் நன்றாக நேர்த்தியாக கொடுத்திருக்கிறார். போர் தொழில் படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் சரத்குமார் போலீஸ் அதிகாரியாக இருக்கிறார். இருந்தாலும், இந்த படத்தில் கொஞ்சம் வித்தியாசமாக மிரட்டி இருக்கிறார் என்று சொல்லலாம். சரத்குமாரின் கதாபாத்திரம் மிக வித்தியாசமானது சுவாரஸ்யமான ஒரு மனிதனாக அனைவரையும் கவர்ந்துள்ளார் அந்த கதாபாத்திரத்தில்.

இவரை அடுத்து கதாநாயகனாக வரும் அமிதாசும் தனக்கு கொடுத்த வேலை சிறப்பாக செய்திருக்கிறார். 

வேலையில்லா பட்டதாரி படத்தில் அமுல் பேபியாக பார்த்த நாம் இப்படத்தில் ஒரு ஹீரோ வில்லத்தனமான நடிகராக நடித்துள்ளார். சரத்குமாருக்கு டஃப் கொடுத்துள்ளார்.

நடிகை காஷ்மிரா மிக அழகாக உள்ளார் அவர் கொடுத்த கதாபாத்திரம் நன்றாக உள்ளது.

பாலாஜி சக்திவேலின் நடிப்பு அற்புதம் அவரது கதாபாத்திரமும் இப்படத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது.

 பின்னணி இசை, இப்படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது. ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாக நின்றிருக்கிறது. 

  வழக்கம்போல் இறுதியில் பழிவாங்கும் கதையாக இந்த படத்தை இயக்குனர் காண்பித்து  இருக்கிறார். இதை இன்னும் கொஞ்சம் மாற்றி சுவாரசியமாக கொடுத்திருந்தால் சூப்பராக ஹிட் கொடுத்திருக்கும். கதை நன்றாக இருந்தாலும் கதைக்களத்தை மிக நன்றாக  நகர்த்தியுள்ளார் .

சஸ்பென்ஸ் திரில்லர் படம் பார்க்கும் அபிமானிகளுக்கு இப்படம் விருந்தாக அமைந்துள்ளது.

ஆக மொத்தத்தில் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய திரைப்படம்.

Rating : 3.5 / 5

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை