கெழப்பயா திரை விமர்சனம் !
கதாநாயகன் கதிரேசகுமார், ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார் !
கதாநாயகன் கதிரேசகுமார், வேலை முடித்துவிட்டு சைக்கிள்களில் வீட்டிற்கு வரும் போது, அந்த வழியாக கார் ஒன்று வருகிறது.
கிராமப்புறத்தில் உள்ள சிறிய பாதை என்பதால் ஒரு வாகனம் சென்றால் மறுவாகனம் சொல்ல முடியாது முன்பு செய்பவர்கள் கொஞ்சம் ஒதுங்கினால் சென்றால் மட்டுமே செல்ல முடியும்.
அந்த காரில் நிறைமாத கர்ப்பிணியுடன் ஒருவரோடு சேர்த்து ஜந்து பேர் அந்த காரில் பயணித்து வருகிறார்கள்.
அந்த காரில் உள்ள ஓட்டுனர் வழிவிடும்படி தொடர்ந்து ஹார்ன்
ஹாரன் அடித்துக் கொண்டே வருகிறார்கள்.
ஆனால், கதாநாயகன் கதிரேசகுமார் அந்த காருக்கு வழி விடாமல் நடு ரோட்டிலேயே பயணித்து கொண்டிருக்கிறார்.
காரில் வந்தவர்களுக்கு பொறுமை தாங்க முடியாமல் காரை விட்டு இறங்கி கதாநாயகன் கதிரேசகுமாரிடம் ஐயா நாங்கள் மோசமாக செல்ல வேண்டும் தயவு செய்து ஓரமாக செல்லுமாறு கூறுகிறார்கள்.
கதாநாயகன் கதிரேச குமார், எதற்கும் செவி சாய்க்காத நடு ரோட்டிலேயே பயணித்து கொண்டிருக்கிறார்.
ஒருகட்டத்தில், காரில் வந்தவர்கள் பொறுமையை இழந்து கதாநாயகன் கதிரேச குமரை அடிக்கத் ஆரம்பிக்கிறார்கள்.
அடிவாங்கிய பிறகும், கதாநாயகன் கதிரேச குமார் அந்த காரை பார்த்துக் கொண்டு மீண்டும் நடுரோட்டில் தனது சைக்கிளை நிற்க வைத்துவிட்டு அங்கேயே அமர்ந்து கொண்டு கார் செல்வதற்கு வழிவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் எதற்காக அந்த காருக்கு வழிவிடாமல் தடுக்கிறார்? அந்த காருக்கும் கதாநாயகன் கதிரேச குமாருக்கும் என்ன தொடர்பு? என்பதுதான் இந்த கெழப்பய திரைப்படத்தின் மீதிக் கதை.
இந்தக் கெழப்பய திரைப்படத்தில் கதாநாயகனாக கதிரேசகுமார் நடித்திருக்கிறார்.
இந்தத் திரைப்படத்திற்கு என்ன தேவையோ அதை நடிப்பின் மூலம் அளவாக கொடுத்திருக்கிறார்.
ஊர் விஏஓ’வாக வருபவரும் தனது அனுபவ நடிப்பைக் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் அஜித்குமாரின் ஒளிப்பதிவு ஒரு சில இடங்களில் பாராட்டும்படியாக இருந்தாலும் ஒளிப்பதிவு, ஒரு சில இடங்களில் இன்னும் சற்று கூடுதல் கவனம் செலுத்திருக்கலாம்.
இசையமைப்பாளர் கெபியின் இசையில், திரைப்படத்தின் பின்னணி இசை திரைப்படத்திற்க்கு மிகப்பெரிய பெரும் பலம்.
முதல் பாதியில் இருந்த ஒரு சுவாரஸ்யம் இரண்டாம் பாதியில் சற்று குறைந்துவிடுவது படத்திற்கு சற்று சரிவாகத் தான் தெரிகிறது. இருந்தாலும், குறைந்த செலவில் எடுக்கப்பட்ட இம்மாதிரியான சினிமாக்களை தமிழ் சினிமா சிகப்பு கம்பளம் போட்டு வரவேற்கலாம்.
திரைப்படம் சமூகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்தவை இது போன்ற படங்கள் சமூக நலமுடன் தற்போது திரையில் வந்து கொண்டிருக்கிறது.
அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய திரைப்படம்.
Rating : 3 .5 / 5
கருத்துகள் இல்லை