சற்று முன்



ரங்கோலி திரை விமர்சனம் !

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியிருந்த ஹமரேஷ், இப்படத்தில் அறிமுக நாயகனாக தனது நடிப்பில் அசத்தியுள்ளார். அவரது நடிப்பில்  ரங்கோலி 

பள்ளி மாணவர்களின் கதை என்பதைப் பார்க்கும்போதே நமக்கு நமது பள்ளிக் காலம் மனதில் ஓட ஆரம்பித்துவிடுகிறது. பள்ளி வாழ்க்கையை ஞாபகபடுத்துவதோடு இயல்பான பல காட்சிகளையும் வைத்து இயக்குநர் அசத்தியிருக்கிறார். பெரும் எதிர்பார்ப்பையும் நம்மிடையே புகுத்தியுள்ளார் இயக்குனர் வாலி மோகன்தாஸ். படத்தின் பாடல்கள் பரவாயில்லை. ஆனால் பின்னணி இசையில் இனிமையாய் இசையமைத்துள்ளார் சுந்தரமூர்த்தி.

பள்ளியில் படிக்கும் மாணவர்களின் வாழ்க்கையையும், அவர்களது குடும்பங்களையும் சுற்றிய கதையை நன்றாக படமாக்கி மக்களுக்கு காட்டியிருக்கிறார்கள் இயக்குநரும் ஒளிப்பதிவாளரும்.

குடும்பத்தினரின் வற்புறுத்தலால் ஒரு பள்ளியில் இருந்து வேறொரு உயர்தர பள்ளிக்கு மாற்றலாகும் மாணவனின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களே இப்படத்தின் கதை.

இப்படம் ஒரு குடும்பப்படமாகவும் இப்போதைய பள்ளி மாணவர்களின் வாழ்க்கையை சொல்லும் படமாகவும் உள்ளது.

பிரார்த்தனா, சாய் ஶ்ரீ, அக்ஷயா,ஆடுகளம் முருகதாஸ் என இந்த படத்தில் எதார்த்த நடிகர்கள் தங்களின் பணியை கச்சிதமாக செய்துவிட்டு செல்கின்றனர்.  ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது. மருதநாயகம் இயக்குநருக்கு மிகவும் உறுதுணையாக நின்று காட்சிகளைப் படம்பிடித்துள்ளார். 

மொத்தத்தில் ரங்கோலி குடும்பத்துடன் பார்க்க வேண்டிய அருமையான திரைப்படம்.

Rating : 3 / 5

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை