சற்று முன்



துடிக்கும் கரங்கள் திரை விமர்சனம் !

 

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக இருப்பவர் விமல் அவரது நடிப்பில் துடிக்கும் கரங்கள்

இப்படத்தை இயக்குனர் வேலுதாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் துடிக்கும் கரங்கள். இந்த படத்தில் விமல், மிஷா நரங், சதீஷ் , சௌந்தர் ராஜா, சுபிக்ஷா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ஓடியன் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு ராகவ் பிரசாத் இசையமைத்திருக்கிறார்.  வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

படத்தில் ஹீரோ விமல் youtube சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இன்னொரு பக்கம் சங்கிலி முருகன் என்பவர் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர். இவர் தன்னுடைய சொந்த மகனை தேடி சென்னைக்கு வருகிறார். பின் இவர் தன்னுடைய மகனை தேடி அலைந்து கொண்டிருக்கிறார். அப்போது ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பகுதியில் விலை உயர்ந்த வண்டி ஒன்று நிற்கிறது. அது ஐஜி வண்டி. அந்த வண்டியின் உள்ளே சடலமாக ஐஜியின் மகள் இருக்கிறார். ஐஜின் மகளாக சுபிக்ஷா நடித்துள்ளார். ஆனால், இந்த வழக்கை விபத்து என்று முடிக்கிறார்கள்.

இது திட்டமிட்ட கொலை என்பது பின் தெரிய வருகிறது. இருந்தும் சில காரணங்களால் இந்த வழக்கை ரகசியமாக விசாரிக்க இன்ஸ்பெக்டர் சௌந்தர்ராணை ஐ ஜி நியமிக்கிறார். இன்ஸ்பெக்டர் சூழ்நிலையில்தான் விமல் தன்னுடைய நண்பர் சதிஷ் உடன் சேர்ந்து youtube சேனல் நடத்திக் கொண்டிருக்கும்போது சங்கிலி முருகன் இவர்களுடைய உதவியை நாடுகிறார். இறுதியில் விமல் அவருடைய மகனை கண்டுபிடித்தாரா? ஐஜி மகள் கொலைக்கும் மகன் தொலைந்து போன வழக்கிற்கும் என்ன சம்பந்தம்? இதெல்லாம் செய்வது யார்? பின்னணி என்ன? என்பதை ஆக்சன் திரில்லர் பாணியில் இயக்குனர் கொடுத்து இருக்கிறார்.

இவர்களை தொடர்ந்து கதாநாயகியாக வரும் மிசா தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். படம் ஆரம்பத்தில் திரில்லராக கதையை காண்பித்து இருக்கிறார். 

இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது.

இப்படத்தில் ஐஜி மகளாக நடித்த சுபிக்ஷா கதாபாத்திரம் இப்படத்தில்  முக்கியத்துவம் வாய்ந்தவை. சுபிக்ஷா கதாபாத்திரத்தை வைத்து மிக நன்றாக திரைக்கதையை நகர்த்தியுள்ளார் இயக்குனர்.

சஸ்பென்ஸாக இறுதிவரை கொண்டு சென்றுள்ளார்.

சுபிக்ஷா சின்னத்திரையிலிருந்து வெள்ளி திரைக்கு வந்துள்ளார் அவரது நடிப்பு மிக எதார்த்தமாக நன்றாக உள்ளது. அழகாக உள்ளார். கதைக்கேற்ப கச்சிதமாக நடித்துள்ளார். 

வில்லன் கதாபாத்திரம் மட்டன் ரவியாக வாழ்ந்துள்ளார். 

சதீஷின் காமெடி பெரிதாக கை கொடுக்கவில்லை.

காவல்துறை அதிகாரியாக சௌந்தரராஜா அவர்கள் மிக நன்றாக நடித்துள்ளார்.

இயல்பான நடிப்பு அவர் கொடுத்த வேலை கச்சிதமாக செய்துள்ளார்.

மொத்தத்தில் விமலுக்கு துடிக்கும் கரங்கள் ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது.

மொத்தத்தில் அனைவரும் குடும்பத்துடன் பார்க்க கூடிய திரைப்படம்.

Rating : 3 / 5 

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை