சற்று முன்



குஷி திரை விமர்சனம் !


தமிழ் சினிமா உலகில் நட்சத்திர நாயகனாக தோன்றும் விஜய் தேவர் கொண்டா நடிப்பில் குஷி இயக்குனர் ஷிவா நிர்வானா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குஷி. இந்த படத்தில் விஜய் தேவர் கொண்டா, சமந்தா, சரண்யா பொன்வண்ணன், லக்‌ஷ்மி, ரோஹினி, ஜெயராம், சரண்யா கெட்டேகர் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில்  வெளியாகி இருக்கும் குஷி படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம். 


படத்தில் ஹீரோ விஜய் தேவர் கொண்டா காஷ்மீரில் இருக்கிறார். இவருக்கு அரசு வேலை கிடைக்கிறது. பின் ஒரு நாள் இவர் கதாநாயகி சமந்தாவை சந்திக்கிறார். முதல் இவர் ஹீரோவிற்கு காதல் வந்து விடுகிறது. பின் இவர் தன்னுடைய காதலுக்காக என்னென்னவோ செய்து கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் சமந்தா அவருடைய காதலை ஏற்கிறார். ஆனால், இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் உடைய பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

திருமணத்திற்கும் ஒற்றுக்கொள்ளவில்லை. இதனால் இவர்கள் பதிவு திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆரம்பத்தில் இவர்களுடைய திருமண வாழ்க்கை நன்றாக தான் சென்று கொண்டிருக்கிறது. போகப் போக இவர்களுக்குள் சண்டை ஏற்படுகிறது. இதனால் திருமண வாழ்க்கை நன்றாக இல்லை என்று இருவரும் புலம்புகிறார்கள். இருவருக்கும் இருந்த காதலும் மறைந்து விடுகிறது. பின் ஒருவரை ஒருவர் வெறுக்க தொடங்கினார்கள்.

 இறுதியில் இவர்கள் ஒன்று சேர்ந்தார்களா? இவர்களின் சண்டைக்கு காரணம் என்ன? ஏன் இப்படி காதலர்கள் மத்தியில் திருமணம் செய்து கொண்ட உடன் சண்டை ஏற்படுகிறது? என்பதே கொண்ட மீதி கதை. இது இயக்குனரின் நான்காவது படம் என்பதால் இதை சிறப்பாகவே கொடுத்திருக்கிறார் என்று சொல்லலாம். படத்தில் நிறைய காதல் கதை, தேவையான இன்டிமேட் காட்சிகள், காமெடி, சென்டிமென்ட் ,ஆக்சன் என்று அனைத்தையும் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் கொடுத்திருக்கிறார்

சமந்தா மிக அழகாக உள்ளார் அவரது நடிப்பு கதாபாத்திரம் அனைத்தும் சிறப்பு கதை கேட்ப மிகக் கச்சிதமாக பொருந்தியுள்ளார்.

இந்த படத்தில் சமந்தா, விஜய தேவர் கொண்டா கெமிஸ்ட்ரி அழகாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த படம் இருவருக்குமே கம்பக் என்று சொல்லலாம். ஏன்னா, கடைசியாக விஜய் தேவர் கொண்டாவின் நடிப்பில் வெளிவந்த லைகர், சமந்தாவின் நடிப்பில் வெளிவந்த சாகுந்தலம் இரண்டு படமே தோல்வி அடைந்தது. இதனால் இவர்களுக்கு குஷி படம் ஒரு நல்ல கம்பேக் கொடுத்திருக்கிறது. இவர்களை அடுத்து படத்தில் வரும் பிற நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

படத்தின் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. 

இப்படத்திற்கு பாடல்கள் மிகப்பெரிய பக்கபலமாக அமைந்துள்ளது.

 ஆனால், படத்தில் ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்.  சித்தாந்தத்திற்கும் சாஸ்திரத்திற்கும் வரும் சண்டையை விட மனித உணர்வுகளே பெரியது என்பதை மையமாக வைத்து இந்த படத்தை இயக்குனர் கொடுத்து இருக்கிறார். 

இத்திரைப்படம் காதலர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

ஆக மொத்தத்தில் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய திரைப்படம்.

Rating : 3 / 5

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை