சற்று முன்



ஐக்கிய அரபு அமீரகம் வழியாக “உலகளாவிய சந்தைகளில் பிசினஸ் விரிவாக்கம்” மீது கலந்துரையாடல் அமர்வு & B2B கூட்டங்களை நடத்தும் அசோசேம் !

ஐக்கிய அரபு அமீரகம் வழியாக “உலகளாவிய சந்தைகளில் பிசினஸ் விரிவாக்கம்” மீது கலந்துரையாடல் அமர்வு &  B2B கூட்டங்களை நடத்தும் அசோசேம் !

ஷார்ஜா அரசின் பிரதிநிதிகள் குழுவோடு 2023 அக்டோபர் 12 &  13 தேதிகளில் கலந்துரையாடல் அமர்வு &  B2B கூட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.

ஆட்டோமொபைல், மென்பொருள் சேவைகள், வன்பொருள் உற்பத்தி, பெட்ரோகெமிக்கல்கள், ஜவுளிகள், ஆடைகள் மற்றும் மின்சக்தியில் இயங்கும் வாகனங்கள் ஆகிய துறைகளில் ஏற்றுமதியை ஊக்குவிப்பது இந்நிகழ்வின் நோக்கமாகும். 

சென்னை, 09 அக்டோபர் 2023: தொழில்துறைக்கான தலைமை அமைப்பாக செயல்படும் அசோசியேட்டட் சேம்பர்ஸ் ஆஃப் காமர்ஸ் அன்டு இன்டஸ்ட்ரி ஆஃப் இந்தியா (அசோசேம்), ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒரு அங்கமான ஷார்ஜா அரசின் SAIF மண்டலத்திலிருந்து வருகை தரும் ஒரு சிறப்பு பிரதிநிதிகள் குழுவோடு கலந்துரையாடல் அமர்வு மற்றும் B2B கூட்டங்கள் உட்பட ஒரு கருத்தரங்கம், நடைபெறவிருப்பதை மகிழ்ச்சியுடன் அறிவித்திருக்கிறது. 2023 அக்டோபர் 12 & 13 தேதிகளில் சென்னையில் ஹயாட் ரீஜென்ஸி ஹோட்டலில் இந்நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

‘SAIF மண்டலத்தோடு சேர்ந்து உங்கள் பிசினஸை உலகளவில் விரிவாக்குதல்’ என்ற கருத்தாக்கத்தின் கீழ் நடைபெறும் இந்த பிசினஸ் நிகழ்வுகள், தமிழ் சேம்பர் ஆஃப் காமர்ஸ், EOUs & SEZs – க்கான ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் மற்றும் இந்தியா – ஏசியன் - ஶ்ரீலங்கா சேம்பர் ஆஃப் காமர்ஸ் அன்டு இன்டஸ்ட்ரி ஆகிய அமைப்புகளின் ஆதரவோடு நடத்தப்படுகின்றன.

அக்டோபர் 12 & 13 தேதிகளில் B2B கூட்டங்கள் நடத்தப்படும் இந்நிகழ்வானது அக்டோபர் 13 அன்று மாலையில் இன்டராக்டிவ் முறையிலான ஒரு கலந்துரையாடல் அமர்வோடு நிறைவடையும். ஐக்கிய அரபு அமீரகத்திலும் (UAE) மற்றும் மத்தியக் கிழக்கு பிராந்தியம் முழுவதிலும் பிசினஸ் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து சென்னை மாநகரை தளமாக கொண்டு இயங்கும் பிசினஸ் நிறுவனங்களுக்கு தெளிவான கண்ணோட்டங்களை வழங்குவது, இந்த பிசினஸ் நிகழ்வுகளின் நோக்கமாகும். வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஷார்ஜா – ன் SAIF மண்டலம் வழங்குகிற பல்வேறு சலுகைகள் மற்றும் ஊக்கமளிப்பு திட்டங்கள் பற்றி ஒரு நல்ல புரிதலை பங்கேற்பாளர்கள் பெறுவார்கள். மேலும் உலகளாவிய வணிக வழித்தடங்களுக்குள் SAIF மண்டலம் அமைந்திருப்பதால் அதனை பயன்படுத்தி, மத்தியக் கிழக்கு நாடுகள், ஆஃப்ரிக்கா மற்றும் மத்திய ஆசியாவில் உள்ள சந்தைகளை எப்படி அணுகி பயனடைவது என்பது மீது இக்கூட்டங்கள் தெளிவான புரிதலை வழங்கும். மத்தியக் கிழக்கு நாடுகளின் தொழில்துறை மீது பெரிதும் பயனளிக்கக்கூடிய உள்நோக்கங்களும் இக்கூட்டங்களில் பங்கேற்பவர்கள் பெறுவார்கள். பிசினஸின் தற்போதைய போக்குகள், நடைபெறும் நிகழ்வுகள், சவால்கள் மற்றும் வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கான வாய்ப்புகள் ஆகியவை இதில் உள்ளடங்கும்.

அசோசேம் தமிழ்நாடு அமைப்பின் தலைவரும், காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் இணை நிறுவனர் & செயலாக்க இயக்குநர் டாக்டர். அரவிந்தன் செல்வராஜ் இது தொடர்பாக கூறியதாவது; “ஐரோப்பாவிலும், ஆஃப்ரிக்காவிலும் தங்களது வர்த்தக – தொழில் செயல்பாடுகளை விரிவாக்கவும், வளர்க்கவும் ஆர்வம் கொண்டிருக்கிற இந்திய தொழில் நிறுவனங்களுக்கு மத்தியக் கிழக்கு பிராந்தியத்தில் பெரிதும் விரும்பப்படும் அமைவிடமாக ஐக்கிய அரபு அமீரகம் உருவெடுத்திருக்கிறது. இத்தகைய நிறுவனங்களுக்கு ஷார்ஜா ஏர்போர்ட் இன்டர்நேஷனல் ஃப்ரீ (SAIF) மண்டலம், சிறந்த ஏவுதளமாக இருக்கக்கூடும். சென்னையை அடித்தளமாக கொண்டு இயங்கும் தொழிலகங்களுக்கும் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையே அதிகளவிலான ஆதாய அம்சங்கள் கூட்டு முயற்சிக்கு சாதகமாக இருக்கின்றன. சென்னை மாநகரில் இந்த பிசினஸ் நிகழ்வுகளை ஏற்பாடு செய்து நடத்துவதற்கான காரணங்களுள் இதுவும் ஒன்றாகும். இதன் மூலம் சென்னையை சேர்ந்த தொழில்முனைவோர்களுக்கு உலகின் பிற பகுதிகளில் தங்களது பிசினஸ் செயல்பாடுகளை நிறுவுவது குறித்த விழிப்புணர்வை நம்மால் அதிகரிக்க முடியும் மற்றும் அத்தகைய விரிவாக்க முயற்சிகளுக்கு தேவையான உதவிகளை வழங்க முடியும்.”

உலகளாவிய பிசினஸ் விரிவாக்கத்திற்கான வாய்ப்புகளை ஆராய்வதற்கு ஒரு சிறந்த தளத்தை வழங்கும் இந்த முக்கியமான முன்னெடுப்பில் கலந்துகொண்டு பங்கேற்க தொழில்-வர்த்தக துறையின் பிரதிநிதிகளை அசோசேம் அன்புடன் அழைக்கிறது. இதன் பங்கேற்பிற்கு பதிவு கட்டணம் எதுவுமில்லை; எனினும் இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்கு முன்பதிவு செய்வது அவசியம். முன்பதிவு விவரங்களை பெற ஆர்வமுள்ள நபர்கள் +91-8547957286 என்ற எண்ணில் Ms. அனு பிள்ளை – ஐ அழைக்கலாம் அல்லது anu.pillai@assocham.com என்ற முகவரிக்கு மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை