சற்று முன்



ஃ( அக்கு) திரை விமர்சனம் !

 


தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகரான ப்ரஜின் நடிப்பில் அக்கு இந்த கதையினை அறிமுக இயக்குனர் ஸ்டாலின் இயக்கியுள்ளார்.

படத்தொகுப்பாளராக இருக்கும் கதையின் நாயகன் ப்ரஜின். அங்கு மாடலிங் காக வரும் கதாநாயகி ஸ்வேதா மீது காதல்கொள்கிறார். பிறகு இருவரும் பேசிக்கொள்கின்றனர், காலப்போக்கில் இருவருக்கும் காதல்வருகிறது ஆனால் அதனை இருவரும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் நண்பர்களாகவே இருக்கின்றனர். கதாநாயகிக்கு தான் தான் படத்தில் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்று அதற்காக முயற்சியில் இருக்கிறார்.நாயகனின் நண்பர்கள், ஒருநாள் பெரிய இயக்குனரான ருத்ரன் என்பவரிடம் உதவி இயக்குனர்களாக வேலைக்கு சேருகின்றனர். அப்போது நாயகன், தான் காதலிக்கு ஒரு வாய்ப்பு வாங்கி தருமாறு கேட்கிறார். அவர்களும் மறுநாள் அலுவலகத்திற்கு ஆடிசன் வர சொல்கின்றர்.

நாயகனும் நாயகியை அழைத்து செல்கிறான். பிறகு அங்கிருந்து கிளப்பிவிடுகிறான். அன்றிரவு சுவேதா என்ற பெண் கற்பழிக்கப்பட்டதாக செய்தி வருகிறது. அதனை பார்த்து அதிர்ச்சிக்குள்ளான நாயகன், நாயகியை தொடர்புகொள்ள முயற்சிக்கிறான் ஆனால் முடியவில்லை. இதற்கு சம்பந்தப்பட்டவர்களை தேடி சென்றால் அங்கு அவர்கள் இறந்துகிண்டகின்றனர். கடைசியில் இதற்கெல்லாம் யார் காரணம் என நாயகன் தேடி கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…

 ப்ரஜின் நடிப்பு நன்றாக உள்ளது .

மற்றும் நண்பர்களாக நடித்த கதாபாத்திரங்கள் அனைவரும் தனக்கு கொடுத்த வேலை மிக கச்சிதமாக செய்துள்ளனர்.

பாடல்கள் சுமார் தான்

இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது.

மொத்தத்தில் திரைப்படம் அனைவரும் பார்க்கக்கூடிய திரைப்படம்.

Rating : 3 / 5 

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை