சற்று முன்



திரையின் மறுபக்கம் திரை விமர்சனம் !


 தமிழ் சினிமா உலகில் புதுமுகங்களை வைத்து இயக்கியுள்ளார் நிதின் சாம்சன்.

திரைத்துறை பற்றி எதுவுமே தெரியாதவர் தயாரிப்பாளராகி சினிமா எடுத்து சீரழியும் கதை.


குடித்த டீக்கு காசு கொடுக்கக்கூட சிரமப்படுகிற, சினிமா இயக்குநர் என சொல்லிக் கொண்டு பந்தாவாக திரிகிற அந்த நபரிடம், பிரபல நடிகருடன் போட்டோ எடுத்துக் கொள்வதை வாழ்வின் பெரிய ஆசையாக கொண்டிருக்கிற அப்பாவி மனிதர் ஒருவர் சிக்குகிறார். அவரிடம், ‘நீங்கள் சினிமா எடுத்தால், யாருடன் போட்டோ எடுத்துக் கொள்ள நினைக்கிறீர்களோ அவருடன் மேடையிலேயே சேர்ந்து உட்காரலாம்’ என்று வலை விரிக்கிறார் அந்த இயக்குநர். அந்த அப்பாவி, அவர் விரித்த வலையில் விழுகிறார். நிலத்தை விற்று படம் தயாரிக்க முன்வருகிறார்.

‘எப்படி எடுத்தால் ரசிகர்களைக் கவரலாம்’ என்ற யோசனை, தெளிவு, அறிவு என எதுவுமே இல்லாமல் ஏமாந்த தயாரிப்பாளரை சுரண்டி படம் எடுத்து முடிப்பதாகட்டும், எடுத்த படத்தை ஆஹாஓஹோவென தானே புகழ்ந்து கொள்வதாகட்டும், ஆர்யாவுடன் அப்பாயின்ட்மென்ட், சிம்புவுடன் சூட்டிங் என்பது போல் கெத்து காட்டுவதாகட்டும் தனக்கான அலட்டலான பாத்திரத்தில் அலட்டலின்றி நடித்திருக்கிறார் நடராஜன் மணிகண்டன்.

படம் எடுத்து அதை திரையில் பார்க்கும் ரசிகர்களுக்கு, அதை எடுக்க தயாரிப்பாளர் மட்டுமல்லாது, ஹீரோ உட்பட அனைவரும் எப்படி உழைக்கிறார்கள்.? எவ்வாறு கஷ்டப்படுகிறார்கள்.?? என்பதை அறியாமல் தான் இருப்பார்கள். அப்படியாக திரைக்கு பின்னால் என்ன நடக்கிறது என்பதை கூற வரும் படமாக உருவாகியிருக்கிறது இந்த “திரையின் மறுபக்கம்”.

இருந்த பணத்தில் சிறிய போர்ஷனை மட்டுமே எடுக்க முடிந்தது செந்திலால். மிகப்பெரும் பைனான்சியரான அன்பரசன் என்பவரிடம் தனது சென்னை வீட்டை அடமானம் வைத்து பணம் வாங்குகிறார் சத்தியமூர்த்தி.

படம் முடிந்து கைக்கு வந்த பிறகு, படத்தினை விநியோகஸ்தரர்களிடம் விற்க முற்படுகிறார் சத்தியமூர்த்தி. படம் பார்க்கும் விநியோகஸ்தரர்கள் அனுபவமுள்ள நல்ல தெரிந்த நடிகர்களை வைத்து ஒரு சில காட்சிகளை மீண்டும் படமாக்கும்படி கூறுகிறார்கள்.

இதனை ஏற்றுக் கொண்ட தயாரிப்பாளர், நண்பர்களிடம் கடனை பெற்றுக் கொண்டு உதவி இயக்குனர்களை வைத்து அந்த காட்சிகளை படமாக்கி விடுகிறார்.

படத்தினை விநோயகஸ்தரர்கள் வாங்க முற்படும்போது கருப்பு பணத்தை ஒழிக்கிறேன் என்று பிரதமர் மோடி, 500, 1000 ரூபாய் நோட்டுகளை ஒழித்து விடுகிறார். இதனால் விநியோகஸ்தரர்கள் படத்தை வாங்க முடியாத சூழல் ஏற்படுகிறது.

செய்வதறியாது விழித்துக் கொண்டு நிற்கிறார் சத்தியமூர்த்தி. பணம் கொடுத்த அன்பரசன் சத்தியமூர்த்தியிடம் பணத்தை தருமாறு ப்ரஷர் கொடுக்கிறார்.

பணம் கொடுக்கும் பைனான்சியராக நடித்திருக்கும் அன்பரசன் கதாபாத்திரம் , தற்போது தமிழ் சினிமாவை ஆட்டிப் படைக்கும் பிரபல சினிமா பைனான்சியர் அன்புச் செழியனை கார்னர் செய்து உள்ளனர்.

அதன்பிறகு சத்தியமூர்த்தி என்ன முடிவெடுத்தார் என்பதே படத்தின் மீதிக் கதை.

படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் தங்களுக்கான கேரக்டர்களை துல்லியமாக செய்து முடித்திருக்கிறார்கள். அதிலும் இயக்குனராக வரும் செந்தில் கதாபாத்திரத்தில் நடித்தவர், அந்த கதாபாத்திரமாகவே மாறி களத்தில் இறங்கி விளையாடியிருக்கிறார்.

சத்தியமூர்த்தியாக நடித்தவர் தயாரிப்பாளர்கள் படும் இன்னல்களை கண்முன்னே கொண்டு வந்திருக்கிறார்

சினிமா எப்படி எடுக்க வேண்டும் என்று இந்த படத்தை பார்த்து விழித்துக் கொள்ளுங்கள் என்ற நோக்கில் எடுக்கப்பட்ட ஒரு விழிப்புணர்வு படமாகத்தான் இப்படத்தை பார்க்கத் தோன்றுகிறது.

இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது

பாடல்கள் பெரிதாக இல்லை சுமார்தான்.

இயக்குனர் போர்வையில் சுற்றித் திரியும் செந்தில், வாய்ப்பு தேடி தவறான வழியில் செல்லவிருந்த ஒரு பெண்ணை நேர்வழிப்படுத்தும் காட்சி 

நேர்மையான மனிதர்கள் சினிமாவில் உள்ளனர் என்பதற்கு உதாரணம் எடுத்துக்காட்டு.

சில பல குறைகள் எட்டிப் பார்த்தாலும், சினிமா எடுப்பவர்கள் படும் இன்னல்களை கண்முன்னே கொண்டுவந்ததற்காக இயக்குனர் நிதின் சாம்சனை பாராட்டலாம்.

திரையின் மறுபக்கம் – சினிமா எடுப்பவர்களின் வலி..

இந்த வலியை அனைவரும் ஒருமுறை பார்க்கலாம் சினிமாவிற்கு வரும் முன் இப்படத்தைப் பார்த்துவிட்டு வாருங்கள்.

மொத்தத்தில் அனைவரும் பார்க்கக்கூடிய திரைப்படம்.

Rating : 3 / 5 

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை