சற்று முன்



புல்லட் போஸ்” – க்கு பிக் பைக்கிங் கம்யூன் - ன் வாழ்நாள் சாதனை விருது! நிறுத்த இயலாத பயணம் !

புல்லட் போஸ்”  – க்கு பிக் பைக்கிங் கம்யூன் - ன்   வாழ்நாள் சாதனை விருது! நிறுத்த இயலாத பயணம் !

சென்னை: 1 அக்டோபர் 2023: பிக் பைக்கிங் கம்யூன், புல்லட் போஸ் என அன்புடன் அழைக்கப்படும் பிரபல மோட்டார் பைக் ஜாம்பவான் சுபாஷ் சந்திரபோஸ் அவர்களுக்கு, வாழ்நாள் சாதனை விருதை வழங்கி கௌரவித்திருக்கிறது.  இந்திய மோட்டார் பைக் ரேசிங் – ன் வியப்பூட்டும் வரலாற்றுக்கு போஸ் வழங்கிய சிறப்பான பங்களிப்புகளுக்கு பாராட்டையும், நன்றியையும் தெரிவிக்கும் விதத்தில் சென்னையின் ரேடிஷன் ப்ளூ ஹோட்டலில் 2023 அக்டோபர் 1-ம் தேதியன்று நடைபெற்ற சிறப்பான நிகழ்வில், தீவிரமான பைக்கிங் ஆர்வலர்கள், சக பைக்கிங் வீரர்கள், பிரபல ஆளுமைகள் மற்றும் மோட்டார்சைக்கிள் தொழில்துறையின் முக்கியஸ்தர்கள் மற்றும் பேரார்வம் கொண்ட ரசிகர்கள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டனர்.  

சென்னைவாழ் மக்களின் பேராதரவை பெற்ற “புல்லட் போஸ்” – ன் சாதனை வரலாறு  நம் நாட்டின் மோட்டார் ரேஸ் பைக்கர்கள் மத்தியில் மிக உயர்ந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது. சோழவரம் ரேஸ் மைதானத்தில் நடைபெற்ற அகில இந்திய ரேஸ் போட்டியில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் விதத்தில் 15 முறைகள் இந்தியன் கிராண்டு பிரிக்ஸ் விருதை 1968 முதல் 1994 -ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இவர் வென்ற சாதனை நிகரற்றது.  

தானே மாற்றங்கள் செய்து மேம்படுத்திய 350 சிசி ராயல் என்ஃபீல்டு பைக், இந்திய ரேஸ் தடங்களில் மிக வேகமாக ஓட்டப்பட்ட பைக் என்ற புகழுக்குரியது. சோழவரம் ரேஸ் தடத்தில் ஒரு மணிக்கு 160 கி.மீ. (100 மைல்) என்ற பிரமிக்க வைக்கும் வேகத்தில் புல்லட் போஸ் ரேஸ்களில் பங்கேற்றது என்றும் மறக்க இயலாத தருணமாகும். ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தயாரிப்பு மீது அவர் கொண்ட தளராத பற்றுறுதியே, ‘‘புல்லட் போஸ்’’ என்ற பெயரில் சந்திரபோஸ் அழைக்கப்படுவதற்கு காரணமாக இருந்திருக்கிறது. 

புல்லட் போஸ் அவர்களின் சாதனை வரலாறு பல தசாப்தங்களையும் கடந்து இன்றளவும் பசுமையானதாக ரேஸ் ஆர்வலர்களின் மனதில் பதிந்திருக்கிறது. இவரது சாகசங்கள் பலரது மனங்களில் உத்வேக நெருப்பை பற்ற வைத்திருப்பதோடு, பைக்கிங் ஆர்வலர்களின் சமூகத்தின் இனப்பண்பையும் வடிவமைப்பதில் முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. ஒருபோதும் தளராத பேரார்வமும், பைக்கிங் கலாச்சாரத்துக்கு அவரின் சிறப்பான பங்களிப்புகளும் மற்றும் இடைவெளியின்றி நிலைத்து நீடித்த ஆர்வத்தின் வெளிப்பாடும், பைக்கிங் ஆர்வலர்கள் மற்றும் ரேஸிங் வீரர்கள் மத்தியில் உண்மையான ஜாம்பவானாக அவரது பெயரை அழியாதவாறு பதிய வைத்திருக்கிறது. 

பிரிட்டிஸ் மோட்டார்சைக்கிள் வீரர்கள் மற்றும் அவர்களது திடகாத்திரமான பைக்குகள் மீதான பிரமிப்பும், ஆர்வமும் சின்னஞ்சிறு வயதிலேயே புல்லட் போஸின் ரேசிங் ஆர்வத்துக்கும், திறனுக்கும் அடித்தளமாக அமைந்தன. ஒரு எளிமையான லேம்ப்ரட்டா ஸ்கூட்டரில் தொடங்கிய இவரது ரேசிங் பயணம், பல புகழ்பெற்ற மோட்டார்பைக்குகள் என பரிமாண வளர்ச்சி பெற்றது. 1984 முதல் 1994 வரை ரேசிஸ் குறித்த வகுப்புகளை நடத்திய புல்லட் போஸின் பங்களிப்பும் செல்வாக்கும் இந்திய மோட்டார்பைக் ரேஸிங்கின் வரலாற்று பதிவேடுகளில் அழிக்க இயலாத முத்திரையை விட்டுச் சென்றிருக்கிறது இவரது மிகச்சிறப்பான  55 ஆண்டுகள் ரேஸிங் கரியர், சோர்வில்லாத விடாப்பிடியான முயற்சி, சலிப்படையாத அர்ப்பணிப்பு ரேஸிங்கின் மீது எல்லையற்ற அன்பு ஆகியவற்றை உள்ளடக்கி நிகரற்ற ஒரு பாரம்பரியத்தை உருவாக்க பங்களிப்பு செய்கிறது. புல்லட் போஸின் பங்களிப்பும், பாரம்பரியமும் இந்திய பைக்கிங் சமூகத்தினருக்கு உத்வேகம் அளிக்கும்  ஒளிவீசும் விளக்காக இன்றளவும் பிரகாசிக்கிறது. 

வாழ்நாள் சாதனை விருதை பெற்றது குறித்து தாழ்மை உணர்வுடன் பேசுகையில் கூறியதாவது, ‘‘புல்லட் போஸ் பிக் பைக்கிங் கம்யூனிடமிருந்து புகழ்பெற்ற இவ்விருது வழங்கப்பட்டிருப்பது எனக்கு தரப்பட்டிருக்கும் மாபெரும் கவுரவமாகும். மோட்டார்பைக்கிங் ரேஸிங் தளத்தில் நம்முடைய ஒருமித்த பயணம் பல சவால்களும், வெற்றிகளும் நிறைந்த விறுவிறுப்பு சற்றும் குறையாத அதிவேக பயணம், இத்தருணங்களின் நினைவுகள் என்றும் மனதில் பதிந்திருக்கும். இந்த அற்புதமான பயணத்திற்கு எரிபொருளாக ஊக்கமும், உத்வேகமும் தந்த பைக்கர்கள், ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு இந்த விருதை நான் அர்ப்பணிக்கிறேன். நாம் அனைவரும் ஒருங்கிணைந்து இந்த சிறப்பான மரபையும், பாரம்பரியத்தையும் உருவாக்கியிருக்கிறோம். இன்னும் வரவிருக்கும் பல ஆண்டுகளுக்கு பைக்கிங் சமூகத்தினருக்குள் உத்வேக நெருப்பை தொடர்ந்து பற்றவைக்க நான் பெரிதும் விரும்புகிறேன்.’’

புல்லட் போஸின் பங்களிப்பையும், பாரம்பரியத்தையும் பாராட்டி பேசிய பிக் பைக்கிங் கம்யூன்-ன் நிறுவனர் திரு. அருண்குமார், ‘‘புல்லட் போஸ் அவர்களின் சாதனை வரலாறு, வரம்பற்ற பேரார்வம் மற்றும் தளர்வில்லாத விடாமுயற்சியின் சிறப்பான கலவையாகும். என்றும் தணியாத அவரது ஆர்வமும், ரேஸிங் மீதான தாகமும், ஒவ்வொரு பைக்கரின் இதயத்திலும் வலுவாக எதிரொலிக்கிறது; தளர்வின்றி விடாமுயற்சியுடன் முன்னேற்றப் பாதையில் பயணிக்க இனிவரும் தலைமுறைகளுக்கும், உத்வேகமளிக்கும் ஒளிவிளக்காக அவரது சாதனை திகழ்கிறது. இந்தியாவில் பைக்கிங் கலாச்சாரத்தை கணிசமாக வளப்படுத்தியிருக்கும் இத்தகைய ஒரு ஜாம்பவானை கௌரவித்து கொண்டாடுவதில் பிக் பைக்கிங் கம்யூன் உண்மையிலேயே பெருமிதம் கொள்கிறது,’’ என்று குறிப்பிட்டார். 

இந்தியாவின் முதல் பைக்கிங் அனுபவ தொகுப்பு செயல்தளமாக தொடங்கப்பட்ட பிக் பைக்கிங் கம்யூன், நாடெங்கும் பைக்கிங் கலாச்சாரத்தை வளர்ப்பது மற்றும் கொண்டாடுவது என்ற குறிக்கோளை கொண்டிருக்கிறது. புல்லட் போஸ் போன்ற ரேஸிங் ஜாம்பவான்களின் பேரார்வம் மற்றும் சாதனை, ரேஸிங் ஆர்வலர் மத்தியில் ஒரு தோழமை உணர்வை வளர்த்திருக்கிறது. புல்லட் போஸ் போன்ற நிகரற்ற ரேஸிங் வீரர்களை இது அங்கீகரிப்பதோடு அவர்களது சிறப்பான சாதனைகளை மகிழ்ச்சியோடு கொண்டாடச் செய்வதற்கும் இந்த தோழமை உணர்வே காரணம். 

புல்லட் போஸ் அவர்களை கௌரவிக்கும் கொண்டாட்டத்தோடு முதியோர்களின் சர்வதேச நிகழ்வும் ஒரே நாளில் அனுசரிக்கப்படுவதால், மூத்த குடிமக்கள் மீதான அங்கீகாரம் மற்றும் மரியாதையின் முக்கியத்துவத்தையும் இந்நிகழ்வு எதிரொலித்தது. ஒரு தனிநபரின் சாதனைக்கு நன்றி தெரிவிப்பதோடு அனுபவமிக்க மூத்தவர்களின் விவேகம் மற்றும் செயல்முயற்சிகளுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வாகவும் இது அமைந்தது. பைக்கிங் சமூகத்தினரோடு ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தும் ஒரு சமிக்கையாக, இந்த நிகழ்வின் இணை ஸ்பான்சராக அத்துல்யா சீனியர் கேர் பங்கேற்றது. பைக்கிங் சமூகத்தினரின் உற்சாகமான கொண்டாட்டத்தோடு முதியோர்களுக்கு கனிவான பராமரிப்பு வழங்க வேண்டியதன் அவசியத்தையும் ஒருங்கிணைப்பதாக அத்துல்யாவின் பங்கேற்பு இருந்தது. வயது முதிர்ச்சியையும், அனுபவத்தையும் மற்றும் பயனுள்ள வாழ்க்கையை நடத்துவதற்கான ஆர்வம் ஆகியவற்றின் அழகான சங்கமத்தை இந்த நிகழ்வின் இணை - ஸ்பான்சர்ஷிப் கோடிட்டுக் காட்டியது. புல்லட் போஸ் அவர்களின் விறுவிறுப்பான சாகச சாதனைகளோடு சேர்த்து முதியவர்களின் வாழ்க்கைப்பயணத்தையும் கொண்டாடும் உணர்வும், அவர்கள் மீதான ஆழமான மரியாதையும், இந்த நிகழ்வில் நேர்த்தியாக வெளிப்பட்டன. 

பிரபல ஆளுமைகள், ரேஸ் வீரர்கள், பைக் ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் ஒருங்கிணைந்து விருது வழங்கும் நிகழ்வில் பங்கேற்றது, புல்லட் போஸ் அவர்களின் பங்களிப்புக்கான அங்கீகாரமாக வெளிப்பட்டது. புல்லட் போஸ்-க்கு வழங்கப்பட்ட வாழ்நாள் சாதனை விருது, அவரது தணியாத ஆர்வத்துக்கும், சாதனை பங்களிப்புக்கும் ஒரு சிறப்பான சாட்சியமாகும். 

நாடெங்கிலும் உள்ள பைக்கிங் ஆர்வலர்களது மனதில் உத்வேகமளிக்கும் நபராக புல்லட் போஸ் தொடர்ந்து பயணிப்பார் என்பது நிச்சயம். ஊக்கமளிக்கும் வெற்றிகள், நிலைத்து நிற்கும் பேரார்வம், வலுவான மனவுறுதி என்ற அனைத்து பண்பியல்புகளையும் ஒருங்கிணைக்கும் பைக் ரேஸ் அவர்களின் சாதனை, என்றும் வியப்போடும், மகிழ்ச்சியோடும் நினைவுகூர்வதாக நிச்சயம் இருக்கும்.

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை