குண்டான் சட்டி திரை விமர்சனம் !
கும்பகோணத்தில் குப்பன், சுப்பன் என இரண்டு நெருங்கிய நண்பர்கள் இருக்கின்றனர். அவர்கள் இருவருக்கும் குண்டேஷ்வரன், சட்டேஸ்வரன் என குழந்தைகள் பிறக்கின்றனர். அவர்கள் இருவருமே தங்கள் தந்தையை போலவே நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றர்.
இருவருமே குறும்புத்தனமானவர்கள், இவர்களின் குறும்புத்தனத்தால் ஊரில் உள்ள பலருக்கும் உதவி செய்கிறார்கள். ஆனால் இவர்களின் தந்தைகளுக்கு பிரச்சனை கொடுத்துக்கொண்டே இருக்கின்றனர். அப்படி ஒருநாள் விடுமுறையின்போது குண்டான் சட்டி இருவருமே பிரச்சனை கொடுப்பதால் அவர்களை மூங்கில் கட்டைகளை அடுக்கு அதில் இவர்களை கட்டி ஆற்றில் அனுப்பிவைத்துவிடுகிறார்கள். அதன் பிறகு குண்டான் சட்டிக்கு என்ன ஆயிற்று என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை 12 வயது சிறுமியான அறிமுக இயக்குனர் PK அகஸ்தி இயக்கியுள்ளார்.
திரைப்படம் குழந்தைகளுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது.
மொத்தத்தில் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய திரைப்படம்.
Rating : 3 / 5
கருத்துகள் இல்லை