சற்று முன்



இன்டர்நெட் லைப்ஸ்டைல் ஹப் நிறுவனர் சித்தார்த் ராஜ்சேகர் எழுதிய ‘ஐ கேன் கோச்’ புத்தகம்: சென்னையில் வெளியீடு !


இன்டர்நெட் லைப்ஸ்டைல் ஹப் நிறுவனர் சித்தார்த் ராஜ்சேகர் எழுதிய ‘ஐ கேன் கோச்’ புத்தகம்: சென்னையில் வெளியீடு !

சென்னை, அக்.2–

இன்டர்நெட் லைப்ஸ்டைல் ஹப் நிறுவனர் சித்தார்த் ராஜ்சேகர் ஏற்கனவே ‘‘யூ கேன் கோச்’’ என்னும் புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகம் அமேசான் இணையதளத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது 'சுதந்திர வணிக பாதுகாப்பு’ தொடர்பான அவரது 2வது புத்தகமான "என்னால் பயிற்சியாளராக முடியும் - உருமாற்ற கதைகள் தொகுதி 1" என்னும் ‘ஐ கேன் கோச்’ என்னும் புத்தக .வெளியீட்டு விழா சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலில் நடைபெற்றது.


இது அவரது "யூ கேன் கோச்", புத்தகத்தை தொடர்ந்து புதிய பயிற்சியாளர்கள், ஏற்கனவே உள்ள பயிற்சியாளர்கள் மற்றும் நிபுணர்களின் மிகப்பெரிய சமூகங்களில் ஒன்றை உருவாக்கும் பயணத்தைக் காட்டுகிறது. "யூ கேன் கோச்" புத்தகம் வளரும் பயிற்சியாளர்கள் மற்றும் ஏற்கனவே இருக்கும் பயிற்சியாளர்களுக்கு இன்றியமையாத வழிகாட்டியாகச் இருக்கும் அதே வேளையில், "ஐ கேன் கோச்" மாற்றம் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்கான எல்லையற்ற மனித திறனை ஆய்வு செய்கிறது. இந்த புத்தகத்தில் பல்வேறு இணைய வாழ்க்கை முறையை மையமாகக் கொண்ட தனிநபர்களின் நிஜ வாழ்க்கைக் கதைகள் இடம் பெற்றுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலான தீவிர ஆராய்ச்சி மற்றும் டிஜிட்டல் சமூகங்களை வளர்ப்பதில் 5 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன், சித்தார்த் தனது கதை மூலம் டிஜிட்டல் பயிற்சியின் குறிப்பிடத்தக்க அம்சத்தை வெளிப்படுத்தி உள்ளார். வேகமாக வளர்ச்சி கண்டுவரும் கல்வித் துறையை பொறுத்தவரை ‘‘ஐ கேன் கோச்’’ புத்தகம், தகவமைப்பு, தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் மாறுபட்ட கற்றலின் அடையாளமாக உள்ளது.

இந்த புத்தகத்தில் 45க்கும் மேற்பட்ட பிரமிக்க வைக்கும் கதைகள் இடம் பெற்றுள்ளது. அவர்கள் அனைவரும் சுதந்திர வணிக மாதிரி செயல்முறையை ஏற்றுக்கொண்டவர்கள் ஆவார்கள். அவர்களின் கதைகள் என்பது அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட பின்னடைவு, ஆர்வம் மற்றும் அவர்களின் விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றியின் சிறந்த சான்றுகளாக உள்ளது.

இதில் சித்தார்த் குறிப்பிடுகையில், ஐ கேன் கோச் என்பது வெறும் காகிதத்தில் மட்டும் இடம் பெறும் வார்த்தைகள் அல்ல. இது ஒரு இயக்கம், இது நமது செயலுக்கான அழைப்பு, நம் ஒவ்வொருவரையும் நமது விதிகளை மறுவரையறை செய்வதற்கும் வாழ்க்கையை மாற்றுவதற்கும் ஊக்குவிக்கிறது.

"ஐ கேன் கோச்" என்பது புத்தகம் மட்டுமல்ல; இது ஒரு புரட்சி, இது படிக்கும் வாசகர்களை ஊக்குவிப்பதோடு அவர்களை வழிநடத்தும். அவர்களின் இலக்குகளை அடைய அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும். மேலும் இவரின் இன்டர்நெட் லைப்ஸ்டைல் ஹப், சாதாரண நபர்கள் டிஜிட்டல் மாவீர்ர்களாகவும் மற்றும் செல்வாக்குமிக்க பயிற்சியாளர்களாகவும் மாறுவதற்கு ஊக்கம் அளித்து வருகிறது. இந்த புத்தகம் அவர்களின் உள்ளார்ந்த திறமைகளை ஆராய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த புத்தகத்தின் தலைப்பு வலியுறுத்துவது போல, "என்னால் முடியும்" என்ற சொற்றொடர் உங்கள் ஆயுதக் களஞ்சியத்தில் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் ஆகும். எனவே இந்த புத்தகத்தின் பக்கங்களுக்குள் மூழ்கி வெற்றியாளர்களின் கதையை படித்து நீங்களும் உத்வேகத்துடன் செயல்படுங்கள்; வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள்.

இந்த புத்தகத்தை கிளவர் பாக்ஸ் பப்ளிஷிங் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த புத்தகம்  Amazon.in or http://icancoach.com ஆகிய இணையதளங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.199 ஆகும்.

பாராட்டு

“இது வெறும் புத்தகம் அல்ல. ஒவ்வொரு கதையும் அடக்க முடியாத ஆற்றலின் வெளிப்பாடாகும். 'ஐ கேன் கோச்' புத்தகத்தை எழுதிய சித்தார்த்திற்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். முதல் தொகுதிக்கு முன்னுரை எழுதியது பெருமையாக இருந்தது. ஒவ்வொரு புதிய பதிப்பிலும், தற்போதைய மற்றும் அடுத்த தலைமுறை பயிற்சியாளர்கள் மற்றும் நிபுணர்களின் திறமைகளை நாங்கள் பார்த்து வருகிறோம் என்று சக்சஸ் கியான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுரேந்திரன் ஜெயசேகர் கூறியுள்ளார்.

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை