சற்று முன்



சிக்னிஃபை இந்தியா நிறுவனம் பிலிப்ஸ் டி2சி இணையதளத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் மின்-வர்த்தக தளத்தில் அடியெடுத்து வைக்கின்றது !

 சிக்னிஃபை இந்தியா நிறுவனம் பிலிப்ஸ் டி2சி இணையதளத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் மின்-வர்த்தக தளத்தில் அடியெடுத்து வைக்கின்றது !

Chennai– மின்விளக்குகள் துறையில் உலகளாவிய அளவில் தலைமை நிறுவனமான சிக்னிஃபை (Signify), மின்விளக்குளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் விதத்தை புதுமையாக்குதற்கு வாக்குறுதியளிக்கும் ஒரு முன்னெடுப்பாக, அதன் பிலிப்ஸ் டைரக்ட்-டூ-கஸ்டமர் (டி2சி) இணையதளத்தை அறிமுகப்படுத்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறது. பல்வேறு வகைகளில் 1000 க்கும் மேற்பட்ட நுகர்வோர் தயாரிப்புகளின் விரிவான தேர்வுடன், சிக்னிஃபை இந்தியாவின் புதிய தளமான in.shop.lighting.philips.com, அதன் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு இணையில்லாத எளிமை, வசதி மற்றும் அணுகலை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நீங்கள் இணையதளத்தில் இவற்றை எதிர்பார்க்கலாம்:

விரிவான தயாரிப்பு வகைகள்: சிக்னிஃபை நிறுவனத்தின் புதுமையான மின்விளக்குகளை இணையதளத்தில் காணலாம். இதில் பிலிப்ஸ், ஸ்மார்ட் வைஃபை தயாரிப்புகள் மற்றும் இலவச டெலிவரி மற்றும் 7 நாட்களுக்குள் திருப்பி அனுப்பும் கொள்கை ஆகியவை அடங்கும். 

நாடு முழுவதும் கிடைத்தல்: இந்த இணையதளம் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த மக்களும் அதன் மின்விளக்குகளால் பயனடைய முடியும் என்பதை உறுதி செய்யும் வகையில் இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்கும்.

விழாக்கால பரிசுகள்: பண்டிகைக் காலம் நெருங்குவதால், வாடிக்கையாளர்கள் இணையதளத்தில் அற்புதமான சலுகைகள் மற்றும் விளம்பரங்களை எதிர்பார்க்கலாம். 

டிஜிட்டல் வெற்றி: அமேசான், பிளிங்கிட், மின்ட்ரா மற்றும் ஃப்ளிப்கார்ட் போன்ற டிஜிட்டல் தளங்கள் மூலம் சிக்னிஃபை இந்தியா நிறுவனம் கணிசமான வளர்ச்சியை அடைந்துள்ளது. புதிய டி2சி இணையதளம், மேற்கண்ட தளங்களில் வழங்கப்படும் குறைவான தயாரிப்பு வகைகளை விட அதிகமான தயாரிப்பு ரகங்களுடன் நிறுவனத்தின் வளர்ச்சியை மேலும் மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 

விர்ச்சுவல் ரியாலிட்டி (விஆர்): தயாரிப்புகளை ஆராயும் விதத்தை மேம்படுத்தும் விர்ச்சுவல் ரியாலிட்டியின் சாத்தியமான ஒருங்கிணைப்புடன் தடையற்ற ஷாப்பிங் அனுபவத்தை வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கலாம். கற்பனைக்கும் யதார்த்தத்துக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைப்பதன் மூலம், வாங்குவதற்கு முன் வாடிக்கையாளர்கள் தங்கள் மின்விளக்குகள் செயல்படும் விதத்தை இப்போதே கற்பனை செய்து பார்க்கலாம்.

நிறுவனத்தின் உத்தரவாதம்: வளர்ந்து வரும் மின்விளக்குகள் துறையை பார்க்கும் போது, சீன இறக்குமதிகளால் சந்தையில் நிலவும் ஆதிக்கம், உத்திரவாதங்கள் மற்றும் உதிரிபாகங்கள் கிடைக்காமல், ஒட்டுமொத்த தயாரிப்பு தரத்தை கணிசமான அளவு குறைக்கிறது. இந்த தயாரிப்புகளின் கவரும் தன்மை ஏமாற்றக்கூடியதாக இருக்கலாம், ஏனெனில் அவை உறுதியளிக்கும் தரம் மற்றும் நீண்ட ஆயுளை விட பெரும்பாலும் குறைவாகவே வழங்குகின்றன. இந்த தரமற்ற தயாரிப்புகளின் வருகை நம்பகமான மற்றும் நீடிக்கும் ஆயுளுடனான மின்விளக்குகளைத் தேடும் நுகர்வோருக்கு குறிப்பிடத்தக்க சவாலாகவே உள்ளது. இந்த சவால்களுக்கு முற்றிலும் மாறான தீர்வுகளை வழங்குவதே சிக்னிஃபை நிறுவனத்தின் உறுதிப்பாடாகும்.

சிக்னிஃபை இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி சுமித் ஜோஷி தனது உற்சாகத்தைப் பகிர்ந்து கொள்கிறார்: "இப்போது எங்கள் சொந்த டி2சி இணையதளத்தில் எங்கள் தயாரிப்புகளை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்களின் பிலிப்ஸ் டி2சி இணையதளம் சிறந்த மின்விளக்கு அனுபவங்களை வழங்குவதற்கான எங்கள் அர்ப்பணிப்பிற்கு ஒரு சான்றாகும். ஈடுஇணையற்ற வாடிக்கையாளர் மனநிறைவை உறுதி செய்வதற்காக நுகர்வோர் நடத்தை, டிரெண்டுகள் மற்றும் பேட்டர்ன்களை நாங்கள் மிகவும் கவனமாக ஆய்வு செய்துள்ளோம். மின்சாரத் துறையில் நவீன வர்த்தக திட்டங்களுடன் பணிபுரியும் எங்களின் வழி பலனைத் தந்துள்ளது, மேலும் இந்த வெற்றியை மின்-வர்த்தக துறையிலும் உருவாக்குவதை நாங்கள் இலக்காக கொண்டுள்ளோம்.

இந்த அற்புதமான ஈ-ஷாப் மூலம், சிக்னிஃபை நிறுவனம் வாடிக்கையாளர் திருப்தி மற்றும் வசதிக்காக புதிய தரநிலைகளை அமைத்து, மின்சார மற்றும் டிஜிட்டல் கட்டிட உள்கட்டமைப்புத் துறையில் முன்னோடியான கண்டுபிடிப்புக்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. உங்கள் வீட்டிலிருந்தபடியே சிக்னிஃபை இந்தியாவின் மின்விளக்குகளை ஆராய in.shop.lighting.philips.com இணையதளத்திற்கு வருகை செய்யுங்கள். 


கருத்துகள் இல்லை