சற்று முன்



ஐ.ஐ.எஃப்.எல் சமஸ்தா நிறுவனம் பத்திரங்கள் மூலம் ரூ .1,000 கோடி திரட்டுகிறது, இது ஆண்டுக்கு 10.50% வரை வருவாய் வழங்குகிறது !

ஐ.ஐ.எஃப்.எல் சமஸ்தா நிறுவனம் பத்திரங்கள் மூலம் ரூ .1,000 கோடி திரட்டுகிறது, இது ஆண்டுக்கு 10.50% வரை வருவாய் வழங்குகிறது !

இந்தியாவின் மிகப்பெரிய வங்கி சாரா மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்களில் (NBFC-MFI) ஒன்றான ஐ.ஐ.எஃப்.எல் சமஸ்தா பைனான்ஸ் நிறுவனம், வணிக வளர்ச்சிக்காகவும் மூலதனத்தை அதிகரிப்பதற்காகவும் முதல் முறையாக பொது வெளியீடு மூலம் பாதுகாக்கப்பட்ட பத்திரங்களை  வெளியிட்டு ரூ .1,000 கோடி திரட்ட உள்ளது. இந்த பத்திரங்கள் 10.50% வரை வருவாய் அளிப்பதுடன் பணத்திற்கு அதிக பாதுகாப்பையும் வழங்குகின்றன.  இந்த வெளியீடு டிசம்பர் 4, 2023 திங்கள் அன்று தொடங்கி டிசம்பர் 15, 2023 வெள்ளிக்கிழமை முடிவடைகிறது.  நிர்வாகத்தின் கீழ் ரூ .73,066 கோடி கடன் சொத்து கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய சில்லறை வணிகத்தில் கவனம் செலுத்தும் வங்கி சாரா நிதி நிறுவனங்களில் ஒன்றான ஐ.ஐ.எஃப்.எல் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் குழும நிறுவனம்தான் இந்த ஐ.ஐ.எஃப்.எல் சமஸ்தா நிறுவனம்.

ஐ.ஐ.எஃப்.எல் சமஸ்தா ஃபைனான்ஸ் நிறுவனம் இந்த கடனுக்கான அடிப்படை அளவாக ரூ .200 கோடி மதிப்புள்ள பத்திரங்களை வெளியிடும். கூடுதல் ஒதுக்கீடு விருப்பத்தேர்வு வசதி ரூ.800கோடி (மொத்தம் ரூ .1,000 கோடி) என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.  ஐ.ஐ.எஃப்.எல் சமஸ்தா பத்திரங்கள் 60 மாத காலத்திற்கு ஆண்டுக்கு 10.50% எனும் அதிக வட்டி விகிதத்தை வழங்குகின்றன. மாற்றவியலாத கடனீட்டுப் பத்திரங்கள் (NCD) 24 மாதங்கள், 36 மாதங்கள் மற்றும் 60 மாதங்களுக்கு கிடைக்கிறது. இந்த ஒவ்வொரு தொடருக்கும், வட்டியானது மாதாந்திர மற்றும் வருடாந்திர அடிப்படையில் வழங்கப்படுகின்றன.

இதற்கு கிரிசில் ரேட்டிங்ஸ் லிமிடெட்  நிறுவனம் வழங்கிய மதிப்பீடு கிரிசில் AA-/பாசிட்டிவ் மற்றும் அக்குயிட் ரேட்டிங்ஸ் அண்ட் ரிசர்ச் லிமிடெட் நிறுவனம் வழங்கிய மதிப்பீடு அக்குயிட் AA /நிலையானது. இது கடன்களை சரியான நேரத்தில் திருப்பிச்செலுத்துவதில் அதிக அளவிலான பாதுகாப்பைக் கொண்டிருப்பதையும், மிகக் குறைந்த கடன் அபாயத்தைக் கொண்டிருப்பதையும் குறிக்கிறது. ஐ.ஐ.எஃப்.எல் சமஸ்தா இந்த மாத தொடக்கத்தில் கிரிசில் நிறுவனத்தின் மதிப்பீட்டின்படி 'நிலையானது' லிருந்து 'பாசிட்டிவ்' மதிப்பீடாக உயர்ந்துள்ளது.

ஐ.ஐ.எஃப்.எல் சமஸ்தா ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு திரு.அனந்தகுமார்.டி கூறுகையில், "ஐ.ஐ.எஃப்.எல் சமஸ்தா ஃபைனான்ஸ் இந்தியா முழுவதும் சுமார் 1,500 கிளைகள் மூலம் வலுவான இருப்பைக் கொண்டுள்ளது. இது நன்கு பன்முகப்படுத்தப்பட்ட போர்ட்ஃபோலியோ மூலம் பின்தங்கிய மற்றும் நிதிச்சேவைகள் கிடைக்காத மக்கள் முக்கியமாக பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்த பெண் தொழில்முனைவோர்களின் கடன் தேவைகளை பூர்த்தி செய்கிறது. பத்திரங்கள் வெளியீடு மூலம் திரட்டப்படும் நிதியானது, இதுபோன்ற வாடிக்கையாளர்களின் கடன் தேவையை பூர்த்தி செய்யவும், வணிக வளர்ச்சியை அதிகரிக்கவும் பயன்படுத்தப்படும்.

ஐ.ஐ.எஃப்.எல் சமஸ்தா ஃபைனான்ஸ் இந்தியாவில் கிராமப்புற, பாதியளவு நகர்ப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், காய்கறி மற்றும் பூ விற்பனையாளர்கள், துணி வியாபாரிகள், தையல்காரர்கள், கைவினைஞர்கள் மற்றும் வீட்டு வேலையாட்கள் மற்றும் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் உட்பட வங்கிச்சேவை பெற இயலாத பிரிவுகளைச் சார்ந்த மற்றும் கூட்டு பொறுப்புக் குழுவில் உறுப்பினர்களாக உள்ள பெண்களுக்கு புதுமையான மற்றும் குறைந்த வட்டியில் பல்வேறு கடன்களை வழங்குகிறது.

30, 2023. ஐஐஎஃப்எல் சமஸ்தா ஃபைனான்ஸ் செப்டம்பர் 2023 இறுதியில் நிர்வாகத்தின் கீழ் ரூ .12,196 கோடி கடன் சொத்துக்களைக் கொண்டிருந்தது மற்றும் 2024 நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் ரூ.233 கோடி இலாபத்தைப் பதிவு செய்துள்ளது.  ஐ.ஐ.எஃப்.எல் சமஸ்தா ஃபைனான்ஸ் நாடு முழுவதும் 1,485 கிளைகளைக் கொண்டு பரவலாக அனைத்து பகுதிகளிலும் இயங்கி வருகிறது மற்றும் 14,286 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். ஐ.ஐ.எஃப்.எல் சமஸ்தா ஃபைனான்ஸ் பல ஆண்டுகளாக குறைந்த அளவிலான வாராக்கடன்களை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருக்கிறது மற்றும் நல்ல தரமான சொத்துக்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. செப்டம்பர் 30, 2023 தேதிப்படி மொத்த வாராக் கடனானது, கடன் புத்தகத்தில் 2.11% ஆகவும் நிகர வாராக் கடனானது, கடன் புத்தகத்தில் 0.57% ஆகவும் உள்ளது.

ஜே.எம்.பைனான்சியல் லிமிடெட், ஐ.ஐ.எஃப்.எல் செக்யூரிட்டீஸ் லிமிடெட், நுவாமா வெல்த் மேனேஜ்மென்ட் லிமிடெட் மற்றும் டிரஸ்ட் இன்வெஸ்ட்மென்ட் அட்வைசர்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவை இந்த பத்திர வெளியீட்டின் லீட் மேனேஜர்கள் ஆவர். முதலீட்டாளர்களுக்கு பணப்புழக்கத்தை வழங்குவதற்காக என்.சி.டி.க்கள் பி.எஸ்.இ லிமிடெட் மற்றும் இந்திய தேசிய பங்குச் சந்தை லிமிடெட் (NSE) ஆகியவற்றில் பட்டியலிடப்படும். ஐ.ஐ.எஃப்.எல் பத்திரங்கள் ரூ.1,000 முகமதிப்பில் வழங்கப்படும் மற்றும் அனைத்து பிரிவுகளிலும் குறைந்தபட்ச விண்ணப்ப அளவு ரூ .10,000 ஆகும். இந்த பொது வெளியீடு டிசம்பர் 04, 2023 திங்கள் அன்று தொடங்கி டிசம்பர் 15, 2023 வெள்ளிக்கிழமை முடிவடைகிறது. முதலில் விண்ணப்பிப்பவர்களுக்கு முதலில் வழங்கப்படும் என்ற அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படும்.

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை