சற்று முன்



அன்னபூரணி திரை விமர்சனம் !

 

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகையான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் அன்னபூரணி.

மற்றும் நடிகர் ஜெய் சத்யராஜ் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்த கதையினை அறிமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார்.

பிராமின் குடும்பத்தை சேர்ந்த கதையின் நாயகி அன்னப்பூரணிக்கு சிறுவயதிலிருந்தே, உணவுகளை முகர்ந்தே என்ன உணவு என்று கூறும் திறமை இருக்கிறது. மற்றும் நாக்கில் சுவை பார்க்கும் தன்மையும் மற்றவர்களை விட அதிகமாக இருக்கிறது, பள்ளியில் படிக்கும்போது தன் தோழிக்கு உணவு சமைத்துவந்திருப்பார், அதனை தோழியின் அப்பா சாப்பிட்டுவிட்டு பாராட்டுகிறார். அந்த பாராட்டு அன்னபூரணியை மிக பெரிய சமையல்காரியாக ( chef ) மாற தூண்டுகிறது, பிறகு இதற்கென்று தனி படிப்பும் இருக்கிறதென்று தெரிந்துகொள்கிறார். பள்ளி படிப்பு முடிந்தவுடன், அன்னப்பூரணியின் பெற்றோர் அவரை MBA படிக்க சொல்கின்றனர். ஆனால் அன்னப்பூரணியின் நண்பன் ஃபர்ஹான் அன்னப்பூரணி கேட்டரிங் படிப்பதற்கு உதவி செய்கிறார், தானும் அவருடன் சேர்ந்து கேட்டரிங் படிக்கிறார்.

கேட்டரிங் படிக்கும் போது அசைவ உணவுகளை சமைக்க அன்னப்பூரணியால் முடியவில்லை, அப்போது நண்பன் ஃபர்ஹான் அவருக்கு சில அறிவுரைகளை கூறி, நம்பிக்கை கொடுக்கிறார். பிறகு அன்னப்பூரணி அசைவ உணவுகளை சமைக்க ஆரம்பிக்கிறார். அன்னப்பூரணி கேட்டரிங் படிப்பதை தெரிந்துகொண்ட அவரின் பெற்றோர், அன்னப்பூரணி அசைவ உணவுகளை சமைப்பது தங்கள் பழக்கவழத்தில் இல்லாத ஒன்று என்பதால், படிப்பை பாதியில் நிறுத்தி திருமணத்திற்கு ஏற்பாடு செய்கின்றனர், அப்போது நண்பன் ஃபர்ஹான் உதவுடன் அங்கிருந்து கிளம்பி, தன் கனவை நோக்கி சென்னை செல்கிறார் அன்னபூரணி.

சென்னையில் பிரபல ஹோட்டலில் வேலை கேட்க போன இடத்தில் அன்னப்பூரணிக்கு வேலை கிடைக்காமல் போகிறது. அப்போது தனது ரோல் மாடலான Chef ஆனந்த் சுந்தரராஜனை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது, அவர் முன் ஒரு சமையலை செய்துகாட்டி அசத்திவிடுகிறார், பிறகு அன்னப்பூரணிக்கு எந்த ஹோட்டலில் வேலை இல்லை என்றார்களோ, அந்த ஹோட்டலிலியேயே வேலை கிடைக்கிறது, அங்கு தனது திறமையால் தனக்கு வேலை இல்லை என்றவரின் பதவிக்கு, ஒருபடி மேல்பதவி வரை சென்றுவிடுகிறர், அன்னப்பூரணியை Chef ஆனந்த் சுந்தரராஜன் IBC நடத்தும் ஒரு பெரிய போட்டிக்கு பரிந்துரைக்கிறார். திடீரென்று ஒருநாள் அன்னப்பூரணிக்கு தீ விபத்து ஏற்படுகிறது, அந்த விபத்தில் அன்னப்பூரணி தன் சுவை திறனை இழக்கிறார், இனிமேல் தன்னால் சரியாக சமைக்க முடியாது என மனமுடைந்து போய் விடுகிறார். இதற்கடுத்து அன்னப்பூரணி தன்னுடைய இந்த பிரச்னையை எதிர்கொண்டு IBC போட்டியில் கலந்துகொண்டு வென்றாரா? அல்லது பெற்றோரின் ஆசைப்படி திருமணம் செய்துகொண்டு ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ்ந்தாரா? என்பதே படத்தின் மீதி கதை…

நயன்தாராவின் நடிப்பு பிரமாதம் ஒவ்வொரு முறையும் நயன்தாரா தன்னை நிரூபித்துக் கொண்டே இருக்கிறார் கதையின் கதாபாத்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

ஜெயின் நடிப்பு நன்றாக உள்ளது மிக எதார்த்தமாக கதைக்கேற்ப கச்சிதமாக பொருந்தியுள்ளார் .

சத்யராஜ் நடிப்பு நன்றாக உள்ளது அவரது கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தவை

தன் மகனைக் காட்டிலும் திறமைக்கு தான் முன்னுரிமை என்று கூறும் சத்யராஜின் கதாபாத்திரம் நன்றாக உள்ளது.

இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது.

ஒளிப்பதிவு சிறப்பு

படத்தில் சின்ன சின்ன லாஜிக் குறைபாடுகள் இருந்தாலும் பெரிதாக ஒன்றும் இல்லை.

பாடல்கள் சுமார் தான்.

ஆக மொத்தத்தில் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய திரைப்படம்.

Rating : 3 /

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை