Header Ads

சற்று முன்



ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது திரை விமர்சனம் !

 

தமிழ் சினிமா உலகில் புதிய முயற்சியாக யூடியூபர்கள் இணைந்து நடித்த படம் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் புகழ்பெற்ற கமல்ஹாசன் வசனம் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.

யூடியூப் புகழ் கோபி - சுதாகர், நடிகர்கள் முனீஷ்காந்த், சத்யமூர்த்தி, ஜார்ஜ் மரியான், நடிகைகள் யாஷிகா, ரித்விகா,  ‘எரும சாணி’ சேனல் புகழ் விஜய், ஹரிஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’. த.ராஜன் தயாரித்துள்ள இந்தப் படத்தை ரமேஷ் வெங்கட் இயக்கியுள்ளார். கௌஷிக் க்ரிஷ் இசையமைத்துள்ளார். வருடக் கடைசியில் காமெடி - பேய் ஜானரில் வெளியாகியுள்ள இந்தத் திரைப்படம் எப்படி இருக்கு ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா இல்லையா பார்ப்போம்.

சினிமாவில் சாதிக்க விரும்பும் இளைஞர் பட்டாளம், ஐடி வேலை புரியும் இரு பெண்கள், பள்ளி மாணவர்கள், மதுப்பிரியர் ஒருவர் என வெவ்வேறு பின்புலத்தைச் சேர்ந்தவர்கள், ஆபாசத் திரைப்படம்  ஒன்றை பார்ப்பதற்காக 1993ஆம் ஆண்டு முதல் பூட்டிக் கிடக்கும் திரையரங்கம் ஒன்றுக்கு வந்து சேர்கிறார்கள். 

திரைப்படம் தொடங்கிய சிறிது நேரத்தில் மர்மங்களும் அமானுஷ்யங்களும் கிச்சு கிச்சு மூட்டியபடி வரிசையாக அரங்கேறுகிறது. அரண்டு போகும் இந்தக் குழு, திரையரங்கை விட்டு தப்பிக்க முயன்றாலும் மீண்டும் திரையரங்குக்குள்ளேயே வந்து சேர்கிறார்கள். இதற்கான காரணம் என்ன? பேய் பிடித்த திரையரங்கில் இந்தக் குழு மாட்டிக் கொண்டு எப்படி போராடியது, 30 ஆண்டு மர்ம முடிச்சுகளுக்கு விடை கிடைத்ததா என்பதை போராட்டத்துடன் நமக்கும் காண்பித்து இருக்கிறார்கள்.

இவர்கள் அனைவரும் அதை காமெடியுடன் சுவாரிசுத்துடன்  எப்படி  தப்பித்து வெளிய வருகிறார்கள் என்பதே படத்தின் மீதி கதை. 

யாஷிகா ஆனந்த் நடிப்பு நன்றாக உள்ளது இப்படத்தில் யாஷிகா கதாபாத்திரம் ரசிகர்களை கவரும். 

முனீஸ் காந்தியின் கதாபாத்திரம் நன்றாக உள்ளது அவருடன் மதுமிதா செய்யும் லூட்டி காட்சிகள் அற்புதம்.

கொஞ்சம் ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. படத்தின் தொடக்கத்தில் தரப்படும் பில்ட் அப், பேயை அறிமுகப்படுத்தியதும் புஸ்ஸ் என வடிந்துவிடுகிறது. பேய்களுக்கான ஃப்ளாஷ்பேக் எல்லாம் ‘சுமார்தான்  கொஞ்சமாவது பேய்க்கு உண்டான மரியாதையைக் கொடுத்து இரண்டாம் பாதியில் நம்மை பயமுறுத்த முயற்சித்திருக்கலாம்.

 கௌஷிக் க்ரிஷ்ஷின் இசையில் 2 பாடல்கள். நன்றாக உள்ளது.

இசை மற்றும் பின்னணி இசை ஓகே தான்.

 ஜோஷூவா ஜோசப்பின் கேமரா திரையரங்குக்குள் திகில் கூட்டி இருக்கிறது. 

காமெடி -பேய் கூட்டணி ஓகே. ஆனால் பேய்க்கு உருக்கமான ஃப்ளாஷ்பேக் வைத்துவிட்டு, பின் அவர்களை  காமெடி செய்யவெல்லாம் வைத்திருப்பது  அவசியம் இல்ல..

 படத்தில் ஒரு பேய் படத்தை தொடர்ந்து கலாய்த்துக் கொண்டே இருக்கிறார்கள். மொத்தத்தில் படத்தின் தலைப்பை காரணத்துடன்தான் வைத்திருக்கிறார்கள்!

ஆக மொத்தத்தில் அனைவரும் பார்க்கக்கூடிய திரைப்படம்.

Rating : 3 / 5 

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை