சைக்கிள் பியூர் 111-அடி உயர அகர்பத்தியை நிர்மானிக்கின்றது !
சைக்கிள் பியூர் 111-அடி உயர அகர்பத்தியை நிர்மானிக்கின்றது உள்ளூர் கைவினைகலைஞர்களை கவுரவிக்கும் நிகழ்வாக !
இந்தியாவின் விருப்பத்துக்குரிய பிரார்த்தனை பிராண்டு, நமது பாரம்பரிய கலாசாரத்திற்கு தனது உறுதிப்பாட்டை தெரிவிக்கும் வண்ணம் மைசூரு, கோவா மற்றும் மகாராஷ்ட்ரா பகுதிகளின் வானில் ஒளியூட்டுகிறது~
Chennai, 23ஆம் தேதி ஜனவரி 2024: இந்தியாவின் ஆக பெரும் ஊதுபத்தி தயாரிப்பாளரான சைக்கிள் பியூர் அகர்பத்தி நிறுவனம் 111-அடி ஊதுபத்தி ஒன்றை உருவாக்கி, உள்ளூர் கைவினை கலைஞர்கள்களின் திறனை பறைசாற்றும் விதமாக, வானில் இனிய மணம் பரப்பும் பிரம்மாண்டத்தை மேற்கொண்டுள்ளது. கலாசார முக்கியத்துவம் வாய்ந்த மூன்று இடங்களில் ஒரே நேரத்தில் மெய்சிலிர்க்க செய்யும் இந்நிகழ்வு அரங்கேறுகிறது. பல்வேறு வேறுபாடு கொண்ட கைவினை கலைஞர்கள் இதயபூர்வமாக ஒரு செயல்பாட்டில் தங்களை அர்ப்பணித்து கொண்டாடும் முகமாக மைசூரு, மகாராஷ்ட்ரா மற்றும் கோவா ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.
புகழ்பெற்ற சிற்பி அருண் யோகிராஜின் தாயாரான திருமதி.சரஸ்வதி, அகர்பத்தியை பின்வரும் பெருமக்களின் முன்னிலையில் பற்ற வைக்கிறார் திரு. பிரதாப் சிம்ஹா, எம்பி, மைசூரு-குடகு மற்றும் திரு. டி.எஸ்.ஸ்ரீவத்ஸா. எம்எல்ஏ, கிருஷ்ணராஜா. ரங்கா குடும்பத்தினர்களான திரு.குரு, திரு.கிரன் ரங்கா, திரு.விஷ்னுரங்கா, திரு.அனிருத் ரங்கா மற்றும் திரு.நிக்கில் ரங்கா ஆகியோர் உட்பட நிகழ்ச்சிக்கு வருகை தந்து சிறப்பித்தனர். நமது பாரம்பரியம் மற்றும் கைவினை கலைஞர்கள் மீது உள்ள மதிப்பையும் மாண்பையும் பிராண்டு வெளிப்படுத்தியது. மகாராஷ்ட்ராவில் மாண்புமிகு முதலமைச்சர் திரு. ஏக்நாத் சாம்பாஜி ஷிண்டே மாநிலத்தின் பெருமைமிகு கைவினை கலைஞர்கள் திறனை கொண்டாட, கோவாவில் மாண்புமிகு முதலமைச்சர் பிரமோத் சாவாந்த் அப்பகுதியின் தனித்துவமான கலைவடிவங்களை பாதுகாக்கவும் முன்னெடுக்கவும் வலியுறுத்தினார்.
சைக்கிள் பியூர் அகர்பத்தியின் 111-அடி உயர கலைவடிவம் என்பது நவீன தொழில்நுட்பம் மற்றும் பாரம்பரிய கலைவடிவத்தின் சங்கமம் ஆகும். மைசூரு கைவினை கலைஞர்களின் வளமான கலாசார பாரம்பரியத்தை சிறப்பிக்கும் ஒரு சிறந்த அணிகலன் ஆகும். இந்த மாபெரும் அகர்பத்தியை 18 கைவினை கலைஞர்கள் ஒரு குழுவாக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு 23 நாட்களில் உருவாக்கினர். கீழ்காணும் பொருட்கள் புனித தஷாங்கிவிற்கு சிறப்பு கவனம் கொண்டு கைபார்த்து தேர்வு செய்யுப்பட்டது: தேன், கொன்னேரி கெடே,நெய், சந்தன மர தூள், குகூளா, அகரு, சாம்பிரானி, தேவதாரு,லோபன் மற்றும் வெள்ளை கடுகு(பிள்ளி சசீவி) ஆகியவற்றோடு கரி, ஜிக்காட் மற்றும் வெள்ளம். தயாரிப்பு செயல்பாடு NRRS றப்பு குழு வடிவமைத்த ஒரு தனித்துவமான தொழில்நுட்பத்தை உள்ளடக்கி இயங்கும்.
திருமதி.சரஸ்வதி தமது நன்றி அறிவிப்பில், “ எங்கள் குடும்பத்தின் பல தலைமுறைகள் கலைக்கு தங்களை அர்ப்பணித்துள்ளனர். எங்களது பணியை அங்கிகரிக்கும், ஆதரிக்கும் விதமாக சைக்கிள் பியூர் அகர்பத்தி முன்வந்து செயல்பட்டுள்ளது எங்களுக்கு உண்மையில் நெகிழ்ச்சியாக உள்ளது. இதை ஒரு சாதாரண கவுரவம் என்று கருதி கடந்து சென்று விட முடியாது; எங்களது குடும்பத்திற்கு மட்டுமல்ல, ஆனால், அனைத்து கைவினை கலைஞர்களின் சமூகத்திற்குமான ஒருபெரும் கவரவத்தையும் உறுதிபாட்டையும் இது குறிக்கிறது. நமது கலாசாரத்திற்கு பங்களிப்பு ஆற்றும் கைவினை கலைஞர்களுக்கு, குறிப்பாக நமது பகுதியின் மைசூரு கைவினை கலைஞர்களுக்கு இது ஒரு பெரும் ஊக்குவிப்பாகும். அவர்களது படைப்புத்திறன் இன்னும் பன்மடங்கு பெருக வழி செய்யும்.”
NR குரூப் தலைவர் திரு, குரு நிகழ்வில் பேசும் போது, “ தெய்வ வழிப்பாட்டில் பயன்பாட்டுக்குரிய ஒரு பிராண்டு ஆன எங்களது தற்போதைய உறுதிப்பாடு கைவினை கலைஞர் சமூகத்தை ஆதரிப்பதே. மக்களின் வாழ்வில் ஒரு நம்பிக்கைக்கு உரிய ஆதாரமாக நாங்கள் இருக்க விரும்புகிறோம். இந்த 111-அடி உயர அகர்பத்தி அந்த உறுதிப்பாட்டை நினைவூட்ட பயன்படும். கைவினை கலைஞர்களின் உலகில் மகிழ்ச்சி மணம் பரப்பும்..
கருத்துகள் இல்லை