சற்று முன்



K10K புற்றுநோய் விழிப்புணர்வு ஓட்ட நிகழ்வுக்கான கவுன்ட்டவுன் ஆரம்பம் !


K10K புற்றுநோய் விழிப்புணர்வு ஓட்ட நிகழ்வுக்கான கவுன்ட்டவுன் ஆரம்பம் !

இந்த விழிப்புணர்வு ஓட்டத்திற்கான ரேஸ் கிட் அறிமுகம்

சென்னை, 27 ஜனவரி, 2024 – K10K ரன் என்ற பெயரில் புற்றுநோய் மீது விழிப்புணர்வை உருவாக்குவதற்கான குறிக்கோளோடு காவேரி மருத்துவமனைஆழ்வார்பேட்டை,வடபழ வடபழனி  நடத்தும் ஓட்ட நிகழ்வு இரண்டாவது பதிப்பாக விரைவில் நடைபெறவிருப்பதால், அதில் பங்கேற்க தயாராகுங்கள். புற்றுநோய் தொடர்பான சரியான தகவல் மற்றும் அறிவு பொதுமக்கள் மத்தியில் அதிகமாக இல்லாத காரணத்தால் அது குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கத்தோடு காவேரி மருத்துவமனையால் நடத்தப்படும் K10K புற்றுநோய் விழிப்புணர்வு ஓட்ட நிகழ்விற்கான ரேஸ் கிட்-ஐ காவேரி மருத்துவமனை இன்று அறிமுகம் செய்தது. 

சென்னை, காவேரி மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையின் இயக்குநர் மற்றும் முதுநிலை நிபுணர் டாக்டர். A. N. வைத்தீஸ்வரன், காவேரி மருத்துவமனையின், மருத்துவ இயக்குநர், டாக்டர். ஐயப்பன் பொன்னுசாமி மற்றும் புற்றுநோயியல் அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர். சுஜய் சுசிகர் ஆகியோர் முன்னிலையில் இந்த விழிப்புணர்வு திட்ட நிகழ்வை தொடங்கி வைத்தார். புற்றுநோய்க்கான முன்தடுப்பு மற்றும் உரிய சிகிச்சை பெறுவதன் அவசியம் மற்றும் அது குறித்த விழிப்புணர்வின் முக்கியத்துவம் பற்றி தனது சிறப்பான கண்ணோட்டத்தை இந்நிகழ்வில் ஆவர் வழங்கினார். கடந்த ஆண்டு முதன்முறையாக வெற்றிகரமாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஓட்ட நிகழ்வு இப்போது இரண்டாவது பதிப்பாக நடைபெறவிருக்கிறது. வருடாந்திர நிகழ்வாக நடத்தப்படும் இது, புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் அதிகரிப்பதற்கும் மற்றும் பரப்புவதற்கும் அறைகூவல் விடுக்கும் ஒரு நிகழ்வாகும். தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் புற்றுநோய்க்கு எதிராக அனைத்து தரப்பினராலும் ஒருங்கிணைந்து எடுக்கப்படும் கூட்டு முயற்சியை ஊக்குவிக்கவும் மற்றும் புற்றுநோய் மீதான விழிப்புணர்வை அதிகரிக்கவும் வேண்டும் என்பதே காவேரி மருத்துவமனை நடத்தும் இந்நிகழ்வின் அடிப்படை நோக்கமாகும்.

K10K ரன் (ஓட்ட நிகழ்வு), 5 கிமீ மற்றும் 10 கிமீ என இரு வகையினங்களிலும் பங்கேற்கும் வாய்ப்பை ஓட்ட ஆர்வலர்களுக்கு வழங்குகிறது. உடற்தகுதியின் வெவ்வேறு நிலைகளிலுள்ள பங்கேற்பாளர்கள் அனைவரும், சமூக நலன் மீதான அக்கறையுடன் நடத்தப்படும் இந்த சிறப்பான முயற்சியில் ஒருங்கிணைய காவேரி மருத்துவமனை அழைப்பு விடுக்கிறது.

K10K ரன் என்பது பல மைல் தூரத்தை வேகமாக ஓடி கடக்கும் ஒரு ரேஸ் மட்டுமல்ல; நீடித்து நிலைக்கும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான நோக்கம் கொண்ட ஒரு சிறப்பான பயணம் இது. புற்றுநோய் வராமல் தடுப்பது குறித்த ஒரு விழிப்புணர்வை பரப்புவது குறித்த ஒரு முக்கிய பொறுப்பை இந்நிகழ்வின் பங்கேற்பாளர்கள் கொண்டிருக்கின்றனர். புற்றுநோயின் அறிகுறிகளை அடையாளம் கண்டு ஆரம்ப நிலையிலேயே புற்றுநோயை கண்டறிவதன் முக்கியத்துவத்தையும் மற்றும் புற்றுநோய் வராமல் இருக்க ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் அவசியத்தையும் மக்களுக்கு அழுத்தமாக எடுத்துச் சொல்லும் முக்கிய பங்கினை இந்நிகழ்வின் பங்கேற்பாளர்கள் கொண்டிருக்கின்றனர். 

வெறுமனே விழிப்புணர்வை உருவாக்குவது என்ற குறிக்கோளையும் கடந்து, நமது சமூகத்தில் வாழும் வசதியற்ற பிரிவைச் சேர்ந்த நோயாளிகளுக்கு புற்றுநோய்க்கான அத்தியாவசிய சிகிச்சையை வழங்குவதற்கு நிதி திரட்டுவதன் வழியாக அவர்களது வாழ்க்கையில் ஒரு சிறப்பான மாற்றத்தை உருவாக்கவும் காவேரி மருத்துவமனை முனைப்புடன் செயலாற்றுகிறது.


கருத்துகள் இல்லை