விஜய், அஜித் பட டைரக்டர் S.எழிலின் அடுத்த படைப்பு !
விஜய், அஜித் பட டைரக்டர் S.எழிலின் அடுத்த படைப்பு !
விமல் நடிக்கும் “தேசிங்குராஜா-2”.
10 வருடங்களுக்கு பின் மீண்டும்!!
விஜய் நடித்த “துள்ளாத மனமும் துள்ளும்”,
அஜித் நடித்த “பூவெல்லாம் உன் வாசம்”, “ராஜா” , சிவகார்த்திக்கேயன் நடித்த “மனம் கொத்திப் பறவை”, பிரபுதேவா, சரத்குமார் நடித்த “பெண்ணின் மனதை தொட்டு”, ஜெயம்ரவி நடித்த “தீபாவளி”, விஷ்ணு விஷால் நடித்த “வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்” போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை டைரக்ட் செய்தவர் s.எழில்.
குடும்பங்கள் கொண்டாடும் இவரது படங்களில் மனதை தொடும் இதமான காதல்.. அதிரும் காமடி.. ஆக்ஷன்.. செண்டிமெண்ட் என அனைத்து அம்சங்களும் நிறைந்து இருக்கும். அப்படிபட்ட படமாக ஹிட் அடித்த படம்தான் “தேசிங்குராஜா”. 10 வருடம் கழித்து மீண்டும்
“தேசிங்குராஜா” இரண்டாம் பாகத்தை டைரக்ட் செய்கிறார் s.எழில்.
‘தேசிங்குராஜா’ வில் கதாநாயகனாக
நடித்த விமல், “தேசிங்குராஜா-2” விலும் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படம் மூலம் விமல், எழில் மீண்டும் இணைகிறார்கள்.
இப்படத்தை இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் P.ரவிசந்திரன் தயாரிக்கிறார்.
இரண்டாவது முக்கிய கேரக்டரில் ஜனா நடிக்கிறார். தெலுங்கில் ராம் சரண் நடித்து ஹிட்டான ‘ரங்கஸ்தலம்’ படத்தில் நடித்த பூஜிதா பொனாடா மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஹர்ஷிதா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.
வெவ்வேறு நோக்கங்களுடன் கல்லூரியில் படிக்கும் நான்கு நண்பர்கள் வேறு வேறு பாதையில் பயணிக்கிறார்கள். இவர்களுடைய வாழ்க்கை எப்படி இருந்தது.. இவர்கள் எந்த சூழ் நிலையில் மீண்டும் சந்திக்கிறார்கள் என்பதை படம் முழுக்க காமடி கதையாக உருவாக்கி இருக்கிறார் டைரக்டர் s.எழில்.
இவரது படங்களில் காமடி சற்று தூக்கலாகவே இருக்கும். சூரி, யோகிபாபு என ஒரு காமடி பட்டாளமே நடித்திருப்பார்கள். இப்படத்திலும் அப்படிதான்…
ரவிமரியா, ரோபோ சங்கர், சிங்கம் புலி, கிங்ஸ்லி, புகழ், மொட்ட ராஜேந்திரன், சாம்ஸ், வையாபுரி, லொள்ளு சபா சாமிநாதன், மதுரை முத்து, மதுமிதா, விஜய் டிவி வினோத் போன்றோர் கலக்குகிறார்கள்.
s.எழில் படங்களில் பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகும். இசை அமைப்பாளர்கள் எஸ்.ஏ.ராஜ்குமார், யுவன் சங்கர்ராஜா , டி.இமான், சத்யா போன்ற பல இசை அமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றிய s.எழில், அஜித் நடித்த “பூவெல்லாம் உன் வாசம்” படத்திற்கு பிறகு ‘ஹிட் காம்போவாக’ வித்யாசாகருடன் மீண்டும் இதில் இணைகிறார்.
படபிடிப்பு ஆரம்பமாகி தொடர்ந்து நடை பெற்று வருகிறது. குடும்பங்கள் ஜாலியாக கொண்டாடும் சம்மர் வெளியீட்டாக படம் தயாராகி வருகிறது.
இணை தயாரிப்பு: ஆர்.பாலகுமார்
ஒளிப்பதிவு: செல்வா.ஆர்
எடிட்டிங்: ஆனந்த் லிங்கா குமார்
ஆர்ட்: சிவசங்கர்
வசனம்-முருகன்
ஸ்டண்ட் : ஸ்டண்ட்: ‘ஃபயர்’ கார்த்திக் ( Fire Karthik )
நடனம் : தினேஷ்
பாடல்கள்:யுகபாரதி, விவேக்,சுப்ரமணியம்
பி.ஆர்.ஓ: ஜான்சன்.
கருத்துகள் இல்லை