சற்று முன்



வித்தைக்காரன் திரை விமர்சனம் !

 

தமிழ் சினிமா உலகில் காமெடி ஸ்டாராக இருந்த சதீஷ் அவர்கள் கதையின்  நாயகனாக களமிறங்கிய திரைப்படம் வித்தைக்காரன்.

இத்திரைப்படத்தை இயக்குனர் வெங்கி இயக்கியுள்ளார்.

படத்தில் சதீஷ் மட்டுமின்றி ஆனந்தராஜ், மதுசூதனன், சிம்ரன் குப்தா,  சுப்ரமணிய சிவா, மெட்ராஸ் பட புகழ் பவெல் நவகீதன், மாரிமுத்து  எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். மருத்துவமனையில் அடிபட்டு தனக்கு ஒருநாள் மட்டும் நடந்த நிகழ்வுகளை மறக்கும் நாயகனாக படத்தில் தனது கதையைத் தொடங்கும் சதீஷ், மாயாஜால நிகழ்ச்சி நடத்தியும் தங்கம், வைரம் கடத்தும் ஆனந்தராஜ், சுப்ரமணிய சிவா கும்பலை ஏன் தொடர்பு கொள்கிறார்? அந்தக் கும்பலுக்கும் சதீஷ்க்கும் இடையே என்ன தொடர்பு? என திரைக்கதை நகர்கிறது.

 பெரும்பாலான கதைக்களம் விமான நிலையத்திலே நகர்கிறது. ஒரே இடத்தில் கதைக்களம் நகர்ந்தாலும் முதல் பாதியுடன் ஒப்பிடும்போது இரண்டாம் பாதி விறுவிறுப்பாக செல்கிறது. 25 கோடி மதிப்புள்ள வைரத்தை கைப்பற்றுவதற்காக ஒட்டுமொத்த கும்பலும் விமான நிலையத்திற்குள் சுற்றி வருகிறது.

சதீஷ் மருத்துவமனைக்கு சென்று தான் சம்பாதிக்கும் பணத்தை இளம்பெண் சிகிச்சைக்காகவும் வழங்குவதை சதீஷ் மூலமாகவே அறிந்தும் கொள்கிறார் நாயகி. உண்மையில் சதீஷ் மாயாஜாலம் நிகழ்ச்சி நடத்தும் மாயக்காரரா? விமான நிலையத்தில் சுத்தம் செய்யும் நபரா? அந்தக் கடத்தல் கும்பலுக்கும் இவருக்கும் என்ன தொடர்பு? விமான நிலையத்தில் சிக்கிய 25 கோடி வைரம் யார் கையில் சிக்கியது? சதீஷ் பண உதவி செய்யும் அந்த இளம்பெண் யார்? போன்ற கேள்விகளுக்கு இரண்டாம் பாதியில் விடை கிடைக்கிறது இதுவே கதை ?

நாயகி சிம்ரன் குப்தா சிறிது நேரம் வந்தாலும் கதைக்கு ஏற்ப கச்சிதமாக பொருந்தி உள்ளார்.

90களில் வில்லனாக கலக்கிய ஆனந்தராஜ் டூ கே கிட்ஸ் இருக்கு மிகப்பெரிய காமெடி நாயகனாக ஜொலித்துள்ளார்.

படத்திற்கு மிகப் பக்க பலமாக அமைந்துள்ளார்.

சதீஷ் மிக நன்றாக நடித்துள்ளார்.

இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது.

பாடல்கள் சுமார் தான்.

ஆக மொத்தத்தில் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய  திரைப்படம்.

Rating : 3 / 5

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை