சற்று முன்



சிக்லெட்ஸ் திரை விமர்சனம் !

தமிழ் சினிமா உலகில் புதுமுகங்களாக அறிமுகமாகி இருக்கும் நடிகர்கள் சாத்விக் வர்மா, ஜாக் ராபின்சன், ரஹீம், நடிகைகள் நயன் கரிஷ்மா, அமிர்தா ஹல்தார், மஞ்சீரா ,  ஆகியோர் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் சிக்லெட்ஸ்.  ஸ்ரீமன்,சுரேகாவாணி,ராஜகோபால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

90ஸ் கிட்ஸ் இருக்கும் இப்பொழுது இருக்கும் 2கே கிட்ஸுக்கும் என்ன வித்தியாசம் என்று மிக வெளிப்படையாக காண்பித்துள்ளார் இயக்குனர்.

முந்தைய தலைமுறையினரைப் போல் அல்லாமல் தம் மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசுகிற் அல்லது செய்கிற தலைமுறையாக இக்கால இளைஞர் கூட்டம் உள்ளதென்பதையும் அவற்றைப் பெற்றோர் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும் பேசியிருக்கும் படம் சிக்லெட்ஸ். 

அவர்களும், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என இந்தக் காலகட்டத்தின் உயர்தர வர்க்கம் இப்படித்தான் இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக நடித்திருக்கின்றனர்.


பெற்றோர்களாக ஸ்ரீமன்,சுரேகாவாணி,ராஜகோபால் ஆகியோர், சுதந்திரம் கொடுக்காமல் இருக்கவும் இயலாது பிள்ளைகள் தடம்மாறி தடுமாறிப் போய்விடுவார்களோ என்கிற பதட்டத்திலேயே இருக்கும் இக்காலப் பெற்றோரின் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள்.

திரைப்படம் 2k கிட்ஸ்க்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது.

சுரேகா வாணியின் நடிப்பு ஒரு தாயாக வாழ்ந்துள்ளார்.

ஸ்ரீமனின் கதாபாத்திரம் அற்புதம் தன் தன்னுடைய பெண் ஒரு லெசிபின் என்று தெரிந்தும் அதை ஆதரித்து தன் மகளை ஏற்றுக் கொண்டு பிள்ளைகளின் மனதை புரிந்து கொண்ட அப்பாவாக வாழ்ந்துள்ளார்.

அனைவரும் தனக்கு கொடுத்த வேலையை மிக கச்சிதமாக செய்துள்ளனர் கதாபாத்திரத்தில் வாழ்ந்துள்ளனர்.

இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது.

பாடல்கள் சுமார்தான்.

ஒளிப்பதிவு சிறப்பு.

ஆக மொத்தத்தில் அனைவரும் பார்க்கக்கூடிய திரைப்படம்.

Rating : 3 / 5 

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை