சற்று முன்



வாஸன் கண் மருத்துவமனையில் அதி நவீன கான்டூரா லேசிக் !

 வாஸன் கண் மருத்துவமனையில்                                                அதி நவீன கான்டூரா லேசிக் !

வாஸன் கண் மருத்துவமனைகுரோம்பேட்டையில்அதிநவீனகருவிகளுடன்பல்வேறு கண் நோய்களுக்கு சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது தற்போது புதிய டெக்னாலஜியில் அதிநவீனமான கான்டூரா லேசர் சிகிச்சை அறிமுகம் செய்யப்படுவதாக கண் அறுவை சிகிச்சை டாக்டர்.P.B. கௌசிக் கூறினார். 

இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது `

இன்றைய விஞ்ஞான காலத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர் வரை பயன்படுத்தக்கூடிய முக்கியமான சாதனங்களான செல்போன், கம்ப்யூட்டர், டெலிவிஷன் போன்ற தகவல் தொடர்பு சாதனங்களை ஒவ்வொருவரும் காண வேண்டிய அவசியத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மாணவ மாணவியரும் ஆன்லைன் வகுப்புகளுக்கு செல்போன்கள் தொடர்ந்து பயன்படுத்துவதாலும்,பார்த்து வருவதாலும் கண் பார்வையில் குறைபாடு ஏற்பட்டு கண்ணாடி அணிய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

கிட்ட பார்வையும் தூரப்பார்வையும்:

கண்களும் ஒரு கேமராவை போன்ற சாதனம் தான். நாம் பார்க்கும் பொருட்களின் வடிவமும் உருவமும் கண்ணில் உள்ள கருவிழி வழியாக விழித்திரையில்துல்லியமாக குவிந்தால் அது சரியான பார்வையாகும்

விழித்திரையில் சரியாகக் குவியாமல் விழித்திரைக்கு சற்று முன்புறமாக குவிந்தால் பார்வை குறைபாடு ஏற்படும் இதனை கிட்டப்பார்வை என்றும் விழித்திரைக்கு பின்புறமாக குவிந்தாலும் பார்வை குறைபாடு ஏற்படும் இதனை தூரப்பார்வை என்றும் கூறப்படுகிறது

கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை குறைபாட்டுக்கு சிகிச்சை:

கிட்டப்பார்வை தூரப்பார்வை குறைபாடு உள்ளவர்கள் கண்ணாடி அணிய வேண்டியது அவசியமாகும். கண்ணாடி இல்லை என்றால் காண்டாக்ட் லென்ஸ் அணியலாம். காண்டாக்ட் லென்ஸ் அனைவருக்கும் பொருத்தமானதாக இருப்பதில்லை பைக் போன்ற வாகனங்களில் செல்பவர்கள் விளையாட்டு ஈடுபாடுஉள்ளவர்களுக்குகாண்டாக்ட் லென்ஸ் அணிவது மிகவும் சிரமமாக இருக்கிறது. திருமணம் ஆக உள்ள இளம் பெண்கள் பெரும்பாலும் கண்ணாடி அணிவதை 

விரும்புவதில்லை கண்ணாடி அணிந்தால் சற்று வயது முதிர்ந்தவராக தெரியும் என்பதாகவும் முக அழகை குறைக்கும் என்பதாகவும் அவர்களுக்கு அச்சம் ஏற்படுகிறது இந்த அச்சத்தை போக்க வந்த தீர்வுதான் லேசர் சிகிச்சை முறைகள். முன்னர் லேசிக் மற்றும் ஸ்மைல் லேசர் 


இருந்தன அவற்றை விட பன்மடங்கு திறனுடைய அதிநவீனலேசர் சிகிச்சை தான் கான்டூரா விஷன் சிகிச்சை முறை. 

கான்டூரா விஷன் சிகிச்சை:

கான்டூரா விஷன் சிகிச்சைஎன்பது அதிக திறன் கொண்ட ஒரு லேசர் சிகிச்சை முறையாகும் மற்ற லேசர் சிகிச்சை முறையில் 2000 திறன் வரை லேசர்செலுத்தப்படுகிறதுஎனில் கான்டூரா விஷனில் 22,000 திறன் லேசர்செலுத்தப்படுவதேசிறப்பம்சமாகும் இதனால் கான்டூராவில்மிகத்துல்லியமானபார்வை கிடைக்கின்றது ஒருவருக்கு 6/6 இருந்தால் சரியான பார்வையாக கருதப்படுகிறது. கான்டூராவில் 6/5 விஷன் வரை கிடைக்கிறது என்பதால் பார்வைக்குறைபாட்டைசரி செய்யும் முறைதான் கான்டூரா விஷன் சிகிச்சை முறை.

20 வயது முதல் 40 வயது உடைய அனைவரும் தகுதியானவர்களே. கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை குறைபாடு உள்ளவர்கள் இதில் பார்வைத்திறன் குறைபாடு 10வரை உள்ளவர்களும் சிகிச்சை பெற தகுதியானவர்கள். பின்பு ஸ்கேன் பரிசோதனை மூலம் டாக்டர்களால் சிகிச்சை உறுதிபடுத்தப்படும் 

சென்னை குரோம்பேட்டை வாஸன் கண் மருத்துவமனையில் பல்வேறு கண் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது தற்போது புதிய  டெக்னாலஜியில் அதிநவீனமான பெம்டோ கான்டூரா விஷன் என்ற நவீன மருத்துவ கருவி அறிமுக விழா கருத்தரங்கு இன்று 10.02.24 (சனிக்கிழமை) காலை 11 மணியளவில் வாஸன் கண் மருத்துவமனையில் சிறப்பாக  நடைபெற்றது

மருத்துவகருத்தரங்கு

இந்த நவீன அறிமுக விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மருத்துவ ஊரக நலப்பணி( தொ.கா.இ)இயக்குனர் டாக்டர் J ராஜமூர்த்திமருத்துவகருத்தரங்கைதுவக்கிவைத்தார். தாம்பரம் மாநகராட்சி மேயர் வணக்கத்திற்குரிய திருமதி. வசந்தகுமாரி அவர்கள், தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் வணக்கத்திற்குரிய திரு காமராஜ் அவர்கள், தமிழ் சினிமா நடிகர் (நகைச்சுவை நடிகர்) மரியாதைக்குரிய திரு செந்தில் அவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்கள்.இதனைத்தொடர்ந்து இவ்விழாவில் வாஸன் கண் மருத்துவமனையில் டாக்டர் P அசோகன்வரவேற்புரை வழங்கி சிறப்பு செய்தார்.

 டாக்டர் P. மேரி சோபா ராணி அவர்கள் அதிநவீன கான்டூரா விஷனின் தனித்துவமான சிறப்பு அம்சங்களை அழகாக எடுத்து கூறினார்.   டாக்டர் T. ராஜேஸ்வரி அவர்கள் கத்தி இன்றி செய்யக்கூடிய பெம்டோ லேசிக் பற்றி சிறப்பாக எடுத்துக் கூறினார்கள். டாக்டர்  P.B. கௌசிக் அவர்கள் வாஸன் கண் மருத்துவமனையில் பரிணாம வளர்ச்சியை பற்றி எடுத்துக் கூறினார். டாக்டர் காஞ்சனா நன்றியுரை   வழங்கினார்.




வாஸனில் கான்டூரா :

உலகின் முதன்மையான கண் மருத்துவமனை என்ற சிறப்பம்சமுடைய வாஸன் கண் மருத்துவமனை சென்னைகுரோம்பேட்டையில்கான்டூரா விஷன்தொழில்நுட்ப கருவியின் மூலம் சிறப்பான சிகிச்சை வழங்கிவருகின்றனர்.

வாஸனில் 20 வயது முதல் 40 வயது உடையவர்களுக்கு ஸ்கேன் பரிசோதனை மூலம் சிகிச்சை உறுதி செய்யப்படும் அரசுத்துறை அலுவலர்கள், விளையாட்டு துறையில் ஈடுபடுபவர்கள், திருமணம் செய்ய உள்ள இளம் பெண்கள், மணமான பெண்கள், கம்ப்யூட்டர் துறையில் பணிபுரிபவர்கள் , மாணவர்கள் என அனைவரும்

கான்டூராவிஷன் சிகிச்சை செய்து கொள்ளலாம் இந்த அரிய வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வாஸன் கண் மருத்துவமனை அறுவைசிகிச்சைநிபுணர் டாக்டர் P.B. கொளசிக் தெரிவித்தார்.

இக்கருத்தரங்கில்S R M மருத்துவக்கல்லூரி,C S I கல்யாணிமருத்துவமனை,சென்னைஸ்கூல்ஆப்ஆப்டோமெட்ரி,வாஸன்ஆப்டோமெட்ரிகல்லூரி,வைஷ்ணவகல்லூரி,தாகூர்நர்ஸிங்கல்லூரி,பாலாஜிநர்ஸிங்கல்லூரிமாணவ, மாணவிகள்200 க்கும்மேற்பட்டோர்பங்குபெற்றனர்.



கருத்துகள் இல்லை