எப்போதும் ராஜா திரை விமர்சனம் !
தமிழ் சினிமா உலகில் அறிமுக நாயகனான வின்ஸ்டார் விஜய் நடிப்பில் எப்போதும் ராஜா.
நாயகியாக டேப்லினா பிரியா மற்றும் நடிகர் நடிகைகள் நமச்சிவாயம் ,சோமசுந்தரம், லயன் குமார், ஜெயவேல், செல்வகுமார், ஜோ மல்லூரி, கும்தாஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இரட்டை வேடத்தில் அண்ணன் தம்பியாக நடித்துள்ளார் வின்ஸ்டார் விஜய்.
நேர்மையான காவல்துறை அதிகாரியாக அண்ணனும் நாட்டிற்கு பெருமை சேர்த்த வேண்டும் என்று விளையாட்டில் வாலிபால் ராஜாவாக தமிழ் நாட்டுக்காக விளையாடும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
காவல்துறை அதிகாரியாக இருக்க தேசிங்குராஜா அவருக்கு மக்களிடம் நல்ல பெயர் மிக நேர்மையான காவல்துறை அதிகாரியாக நன்றாக நடித்துள்ளார்.
தம்பி வாலிபால் ராஜா தமிழ்நாட்டிற்காக விளையாட கூடாது என்று தடுக்கும் சில தீய சக்திகள் இடம் இருந்து எப்படி டெல்லி சென்று விளையாடி ஜெயிக்கிறார் என்பது இப்படத்தின் கதை.
அண்ணனுக்காக தம்பியும் தம்பிக்காக அண்ணனும் ஒரு பாசப் போர் என்று கூறலாம்.
இப்படத்தில் நகைச்சுவையை இவர் செய்துள்ளார் அவர் கூறும் வசனங்கள் அனைவரையும் கவரும். மண்ணுக்கு போற உடம்பு பொண்ணுக்கு போனா என்ன என்று கூறும் வசனங்கள் அனைவரையும் சிரிக்க வைக்கும்.
சில பஞ்ச் டயலாக் வசனங்கள் காமெடியாக கூறியுள்ளார். முக்கியமாக நமது நாட்டின் அரசியல் தலைவர்களை வைத்து ஒரு காமெடி செய்துள்ளார். அனைவரின் பாராட்டிலும் வாலிபால் ராஜா.
காதல் காட்சிகள் நன்றாக உள்ளது.
சண்டை காட்சிகளும் நன்றாக செய்துள்ளார்.
பாடல்கள் சுமார் தான்.
இசை மற்றும் பின்னணி இசை ஓகே தான்.
மொத்தத்தில் ஒரு காமெடி படமாக அனைவரையும் சிரிக்க வைக்கும் படமாக இத்திரைப்படம் அமைந்துள்ளது.
Rating : 3 / 5
கருத்துகள் இல்லை