Boomer uncle திரை விமர்சனம் !
தமிழ் சினிமா உலகில் முன்னணி காமெடி நாயகனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் யோகி பாபு மற்றும் தனக்கென்று ஒரு ஆர்மி வைத்து இருந்த ஓவியா நடிப்பில் பூமர் அங்கிள்.
மற்ற நடிகர் ரோபோ சங்கர், எம் எஸ் பாஸ்கர், மறைந்த சேஷு, பாலா, தங்கதுரை, சோனா, மதன் பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர் தில்லையின் எழுத்தில் ஸ்வாதேஷ் இயக்கி இருக்கும் படம்.
கிராமம் ஒன்றில் பலான படம் பார்த்த குற்றத்துக்காக நான்கு சிறுவர்கள் தண்டிக்கப்பட, ஒருவன் மட்டும் ஊரை விட்டுத் தப்பி வளர்ந்து ( யோகி பாபு) ஒரு ரஷ்யப் பெண்ணை மனது கொள்கிறான் .
அது போதாது என்று அவன் ஆண்மை பெருக்கும் மருந்து என்று அனுப்பிய மருந்தை சாப்பிட்டு ஒரு நண்பனுக்கு (பாலா ) திக்குவாய், ஒரு நண்பனுக்கு ( தங்கதுரை) காது கேளாமை, ஒருவனுக்கு (சேஷு) முதுமைத் தோற்றம் என்று பாதிப்பு ஏற்பட நாலாவது மாத்திரையை சாப்பிட்ட ஊரு நாட்டமைக்கு ( ரோபோ சங்கர்) ஆண்மைக் குறைவு என்று பிரச்சனைகள் ஏற்பட, நால்வரும் அந்த நண்பன் ஊருக்கு மீண்டும் வந்தால் பழி வாங்கக் காத்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில் ரஷ்யாக்காரியிடம் இருந்து கணவன் விவாகரத்துக் கேட்கிறான் . அவளோ , ” என்னை உன் ஊருக்கு அழைத்துப்,போய், உன் அப்பாவான விஞ்ஞானி (மதன்பாப்) இருந்த அரண்மனையில் சில நாட்கள் தங்க வை . அப்புறம் விவாகரத்து தருகிறேன் ” என்கிறாள் .
வேறு வழியின்றி அவன் மனைவியோடு ஊருக்கு வர, நண்பர்கள் அவனை பழி வாங்க முயல , விஞ்ஞானியான அப்பாவின் சக்தி மான் போன்ற ஒரு கண்டுபிடிப்பு ரகசியத்தை திருடவே ரஷ்யாக்கரி வந்திருக்கிறாள் என்பது கணவனுக்குத் தெரிய வர, ரஷ்யாக்காரி உருவாக்கிய ஹோலோகிராம் உருவமான நடிகை ஓவியா அந்தக் கணவனை மயக்க, அதற்குள் ரஷ்யாக்காரி நாட்டமை உடம்புக்குள் ஹல்க் போன்ற அந்த சக்தியை உருவாக்க , போட்டியாக மறுதரப்பு உருவாக்கும் சக்திமான், சூப்பர் மேன், ஸ்பைடர் மென் சக்திகள் ஹல்க்கிடம் அடி வாங்க , நடந்தது என்ன என்பதே படம்.
ஹல்க், ஹோலோ கிராம், சக்தி மான், ஸ்பைடர் மேன்,சூப்பர் மேன் என்று யோசித்து ஒரு கதை பண்ண முயன்று இருக்கிறார்கள். ஆனால் திரைக்கதை? படமாக்கல்?
குழந்தைகளைக் கவர சில விஷயங்கள், காமெடிக்கு நிறைய காமெடி நடிகர்கள் , கிளாமருக்கு ஓவியா மற்றும் இடுப்புக் கீழே துணி போட்டால் தடிப்பு அரிப்பு நோய் வருமோ என்று யோசிக்க வைக்கும் சில குட்டைக் கால்சட்டை குண்டு மல்லிகள் ஆகியோர் இருந்தும் .. ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்
பபூன் வேடத்தில் கவர்கிறார் மறைந்த சேஷு . ரஷ்யாக்காரியாக நடித்த நடிகையை பெரும்பாலான காட்சிகளில் தண்ணி தெளித்து விட்டு விட்டதால் அவர் பாட்டுக்கு குறுக்கும் மறுக்கும் ஓடிக் கொண்டு இருக்கிறார் .
ஓவியா சிறிது நேரம் வந்தாலும் மிக அழகாக நடித்துள்ளார் இறுதியில் ஒரு வொண்டர் வுமனாக கலக்கியுள்ளார்
யோகி பாபு மிக நன்றாக நடித்துள்ளார்.
ரோபோ சங்கரின் காமெடி ஒரு ஹல்க்காக விளையாடி உள்ளார்.
இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது.
திரைப்படம் குழந்தைகளுக்கு மிகப் பெரிய விருந்தாக அமைந்துள்ளது.
ஆக மொத்தத்தில் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய திரைப்படம்.
Rating : 3 / 5
கருத்துகள் இல்லை