ஹாட்ஸ்பாட் திரை விமர்சனம் !
தமிழ் சினிமா உலகில் முன்னணி நாயகனான கலையரசன் மற்றும் சாண்டி மாஸ்டர், கவுரி கிஷன், ஆதித்யா பாஸ்கர், அம்மு அபிராமி, ஜனனி ஐயர், சுபாஷ், சோபியா உட்பட பலர் நடிக்கும் படம், ‘ஹாட்ஸ்பாட்'.
இத்திரைப்படத்தை விக்னேஷ் கார்த்தி இயக்கியுள்ளார்.
இயக்குநராகும் முயற்சியில் இருக்கும் ஒருவன், தான் காதலிக்கும் பெண்ணின் அப்பாவும் தயாரிப்பாளருமான K.J.பாலமணி மார்பனிடம் கதையைச் சொல்கிறான். மொத்தம் நான்கு கதைகளைச் சொல்கிறான். அவனுக்குப் படம் இயக்க வாய்ப்பு கிடைத்ததா, அவனது காதலை அந்தத் தயாரிப்பாளர் அங்கீகரித்தாரா என்பதுதான் படத்தின் கதை.
Happy Married Life, Golden Rules, தக்காளி சட்னி, Fame Game என மொத்தம் 4 கதைகள். முதல் மூன்று கதைகளும் கலகலப்பாகச் செல்ல, கடைசிக்கதை மட்டும் மனதைக் கனக்கச் செய்யும் கதையாக முயன்று சமூகத்துக்குக் கருத்து சொல்லியுள்ளார் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்.
அத்தியாயம் 1 :
ஆதித்யாவிற்கு இது ஒரு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது.
கௌரியும் மிக அற்புதமாக நடித்துள்ளார்.
96 அப்புறம் இருவருக்கும் இது ஒரு வெற்றிப்படம்.
அத்தியாயம் 2 :
புதிய தென்றல் (1993) படத்தில் ரமேஷ் அரவிந்தும், சிவரஞ்சினியும் எதிர்கொள்ளும் பிரச்சனையை சாண்டி மாஸ்டரும், அம்மு அபிராமியும் Golden Rules-இல் எதிர்கொள்கின்றனர்.
அம்மா அபிராமி பெற்றோரிடம் நான் ஒரு லெஸ்பியன் என்று கூறும் காட்சி எல்லாம் அதை அவர்கள் நீ ஒரு ஆணை காதலித்தால் சரி ஒரு லெசிபியை நான் என்று கூறும் பொழுது நான் ஒரு ஆணை தான் காதலிக்கிறேன் என்று பெற்றோரை சமாதானம் செய்யும் காட்சி எல்லாம் மிக அற்புதம்.
இருவரும் மிக அற்புதமாக நடித்துள்ளனர்.
சுவாரி சித்தருக்கு பஞ்சமில்லை.
அத்தியாயம் 3 :
பணத்திற்காக ஒரு ஆம்பள விபச்சாரியாக படத்தில் தோன்றியுள்ளார் சுபாஷ்.
ஒரு நாள் ஹோட்டலில் தனது தாயைப் பார்த்ததால் அதுக்கு அப்புறம் என்ன நடந்தது என்பதை சுபாஷின் கதை.
ஜனனி நீ செய்தால் தவறில்லை நான் செய்தால் தவறா என்று கூறும் காட்சி எல்லாம் ஒவ்வொரு ஆண்களுக்கு உறுத்தும் அது போன்றவர்களுக்கு.
4 அத்தியாயம்
Fame Game ஆகும். ரியாலிட்டி ஷோக்களில் குழந்தைகள் அப்யூஸ் செய்யப்படுகிறார்கள் என அழுத்தம் திருத்தமாகச் சொல்ல முயன்றுள்ளார் விக்னேஷ் கார்த்திக். அதிலென்ன அப்யூஸ் என யாராவது கேட்டால், அதைப் பூதாகரப்படுத்திக் காட்ட ஒரு சம்பவத்தை வைத்துள்ளார். இரு கோடுகள் தத்துவப் பாணியில், அந்தச் சம்பவதிற்கு அழுத்தம் கொடுத்து கலையரசன் சொல்லும் கதையைக் கேட்டால், Fame Game மனதைக் கனக்கச் செய்வதாக இருக்கும். அந்த சம்பவம் இல்லாமலும், Fame Game இன் அபத்தத்தையும் சொல்லியிருக்கலாம். குழந்தைகளைக் குழந்தைகளாக இருக்கவிடாமல் செய்யும் புது இயல்பு, 90களின் இறுதியில் இருந்தே சமூகத்திற்குள் பல வடிவங்களில் வந்துவிட்டன. குழந்தைக்குப் பூச்சாண்டியைக் காட்டிப் பெற்றோர் சோறு ஊட்டுவது போல், பெற்றோரை ரியாலிட்டி ஷோ சம்பவத்தைக் காட்டிப் பயமுறுத்தி, குழந்தைகளை விளையாட விடுங்கள் எனச் சொல்லியுள்ளார் இயக்குநர். படிப்பில் இருந்து கவனத்தைக் கொஞ்ச நேரம் விளையாட்டுக்குத் திருப்பினாலும், அந்த விளையாட்டிலும் வென்றாக வேண்டிய மன அழுத்தத்தைத்தான் பெரும்பாலான பெற்றோர் குழந்தைகளுக்குத் தருகிறார்கள்.
படிப்போ, விளையாட்டோ, ரியாலிட்டி ஷோவோ, குழந்தைகளால் பெரியவர்களின் உலகில் இருந்து ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது என்பதுதான் உண்மை.
கலையரசன் ஒரு தகப்பனாக வாழ்ந்துள்ளார்.
சோபியா ஒரு நடுத்தர குடும்பத்தினராகவும் ஒரு தாயாக ஒரு எதார்த்தமான பெண்ணாக நடித்துள்ளார். குடும்பப் பெண்ணாக அழகாக உள்ளார்.
இச்சமூகத்தில் அனைவருக்கும் இருக்கும் ஆசைதான் அந்தப் பெண்ணுக்கும் இருந்தது சோபியாவிற்கு.
ஆனால் இவர்களுக்கு நடந்த சோகம் தான் இப்படத்தின் மிகப்பெரிய க்ளைமேக்ஸ்.
கலையரசன் மற்றும் சோபியாவிற்கு திரைப்படம் வெற்றி திரைப்படமாக அமைந்துள்ளது.
இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது.
மக்களே படம் முடிந்து விட்டு விட்டது என்று போகாமல் இறுதியில் தயாரிப்பாளர் இடம் இயக்குனர் அவரது பெண்ணை கைப்பற்றினாரா இல்லையா பார்த்துவிட்டு வெளியே செல்லுங்கள்.
ஆக மொத்தத்தில் அனைவரும் பார்க்கக்கூடிய திரைப்படம் குடும்பத்துடன் பார்க்கலாம்.
Rating: 4 / 5
கருத்துகள் இல்லை