சற்று முன்



இடி மின்னல் காதல் திரை விமர்சனம் !


தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நாயகனான பிக் பாஸ் புகழ் சிபி நடிப்பில் இடி மின்னல் காதல்.

மற்றும் பாவ்யா ட்ரிக்கா, வின்சென்ட் நகுல் , ஜெய ஆதித்யா, யாஸ்மின் பொன்னப்பா, ராதாரவி, பாலாஜி சக்திவேல், ஜெகன் மற்றும் பலர் அடித்துள்ளனர்.

இப்படத்தை இயக்கியுள்ளார் பாலாஜி மாதவன்.

கதாநாயகன் இன்னும் சில நாட்களில், அமெரிக்கா செல்லவிருக்கும் நாயகன் சிபி தன் காதலி பாவ்யா ட்ரிக்காவுடன் காரில் சென்று கொண்டிருக்கும் போது அசந்தர்ப்பமாக ஒருவர் மீது காரை ஏற்றி விடுகிறார். அதில் அந்த மனிதர் அந்த இடத்திலேயே இறந்து போக இருவரும் பதற்றம் அடைகிறார்கள்.

இன்னொரு பக்கம் சிறுவன் ஜெய ஆதித்யா இரவில் வெளியே சென்ற தன் தந்தையைக் காணாமல் தேடிக் கொண்டிருக்கிறார். விபத்தில் இறந்து போன மனிதர் தான் அந்த சிறுவனின் தந்தை என்பது சிபி – பாவ்யா ட்ரிக்காவுக்கு தெரிய வருகிறது. தான் செய்த பாவத்தின் பிராயச்சித்தமாக அந்த சிறுவனை நல்லபடி வளர்க்க நினைக்கிறார்கள்

கடனுக்காக இறந்து போய்விட்டார் என்று தெரியாமல் சுற்றும் கடன் கொடுத்த ரௌடி கும்பல்.  தன் தந்தையை கொன்றது சிபி தான் என்று தெரிந்ததும் அந்த சிறுவன் வெளிப்படுத்தும் நடிப்பு, அதே போல் இவனது தந்தை இந்த ஊரை விட்டே போகலாம் என்று சொல்லும்போது வெளிப்படுத்தும் நடிப்பு இந்த சாந்த குணம் கொண்ட முகத்தில் இப்படி ஒரு சாத்தானா என்று ஆச்சார்யப் படவைக்கிறது. இறுதியில் அச்சிறுவன் இவர்களை புரிந்து கொண்டானா இல்லையா என்பதே மீதி கதை.

வில்லன் வின்சென்ட் நகுல் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை பயமுறுத்தியுள்ளார். சேட்டாகப் பிறந்தும் வாழ்க்கை செட்டாகாத வேடத்தில் சரியாகப் பொருந்துகிறார் மனோஜ் முல்லத்.


யாஸ்மின் பொன்னப்பா ப்ரோஸ்டியூஷன் விபச்சாரியாக நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்தில் வாழ்ந்துள்ளார் என்று கூறலாம்.

தந்தையைப் பிரிந்து வாழும் அந்த சிறுவனுக்கு அடைக்கலம் கொடுத்து ஒரு தாயாக பார்த்துக் கொள்கிறார். அந்த சிறுவனுக்காக போராடும் காட்சிகள் அனைத்தும் நன்றாக நடித்துள்ளார்.

நாம் எந்த வேலை செய்கிறோம் என்று முக்கியமில்லை மனிதாபிமானம்  மனமும்தான் முக்கியம் என்று கதாபாத்திரம் கூறுகிறது. 


யாஸ்மின் பொன்னப்பா சிறப்பாக நடித்துள்ளார் திரைப்படம் அவர்களுக்கு வெற்றி திரைப்படமாக அமைந்துள்ளது..

சிபி ஆக்சன் காட்சிகள் காதல் காட்சிகள் அனைத்தும் சிறப்பாக நடித்துள்ளார்.

பாவ்யா ட்ரிக்கா யதார்த்தமாக நடித்துள்ளார் அழகாக உள்ளார்.

ராதாரவி நன்றாக நடித்துள்ளார் சிறிது நேரம் வந்தாலும் அவரது கதாபாத்திரம் சிறப்பு.

 வின்சென்ட் நகுல் மிரட்டி உள்ளார் என்று கூறலாம். மிக நன்றாக நடித்துள்ளார். சண்டை காட்சிகள் அனைத்தும் நன்றாக உள்ளது.

இயக்குனரும் நடிகருமான பாலாஜி சக்திவேல் கதாபாத்திரம் இன்றைய காலகட்டத்தில் நடக்கும் சூழ்நிலைகளை மெய்ப்படுத்துகிறது. 

இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது.

திரைப்படம் காதலர்களுக்கு ஒரு மின்னலாக இருக்கும்.

ஆக மொத்தத்தில் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய திரைப்படம்.

Rating : 3 / 5 

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை