சற்று முன்



ரெபல் திரை விமர்சனம் !

தமிழ் சினிமா உலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக கலக்கி கொண்டிருப்பவர் ஜிவி பிரகாஷ்.  இவருடைய நடிப்பில் வெளியாகிருக்கும் படம் ரெபல். இந்த படத்தை இயக்குனர் நிகேஷ் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் ஜி. பிரகாஷுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடித்திருக்கிறார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார். கேரளாவில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம். 

80 காலகட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து படத்தை இயக்குனர் கொடுத்திருக்கிறார். மூணாறு தமிழ் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் அவர்களுடைய பிள்ளைகள் கல்லூரியில் போராடும் அவல நிலைதான் படத்தின் கதை. படத்தில் நாயகன் ஜிவி பிரகாஷ் கல்லூரி மாணவனாக இருக்கிறார். இவர் மூணாறில் இருந்து கேரளா கல்லூரியில் சேர்கிறார். ஜிவி பிரகாஷ் உடன் அவருடைய நண்பர்களும் கல்லூரிக்கு செல்கிறார்கள்.

கேரளா கல்லூரியில் ஆசிரியர்கள் முதல் மாணவர்கள் வரை என பலருமே தமிழர்களை இழிவாக நடத்துகிறார்கள். அப்போது மலையாள ஹீரோயினியாக மமிதா பைஜி வருகிறார். இவர் ஹீரோ ஜிவி பிரகாஷை காதலிக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் தமிழர்களை மலையாளிகள் மட்டம் தட்டிக் கொண்டே இருக்கிறார்கள். இதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் ஹீரோவும் அவருடைய நண்பர்களும் திருப்பி பதில் கொடுத்தார்களா? இல்லையா? இதனால் என்னென்ன பிரச்சனை வருகிறது? என்பதே படத்தின் மீதி கதை.

படத்தில் கல்லூரி மாணவராகவும், ஆக்சன் காட்சிகளிலும் ஜிவி பிரகாஷ் நன்றாக நடித்திருக்கிறார்.  

ஜி. பிரகாஷ் குமாரின் நடிப்பு நன்றாக உள்ளது.

ஆக்சன் காட்சிகள் அனைத்தும் சிறப்பு.

நடிகர் கருணாஸின் கதாபாத்திரம் நன்றாக உள்ளது

கதைக்கு கச்சிதமாக பொருந்தி உள்ளார்.

மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் கொடுத்த வேலையை மிகக் கச்சிதமாக செய்துள்ளனர்.

திரைப்படம் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.

இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது.

ஆக மொத்தத்தில் அனைவரும் பார்க்கக் கூடிய திரைப்படம்.

Rating : 3 / 5 

Marveltamilnews.com



கருத்துகள் இல்லை