சற்று முன்



பிரேமலு திரை விமர்சனம் !

நடிகர் ஃபகத் ஃபாசில் தயாரிப்பில்  பிரேமலு. கிரீஷ் ஏ.டி இப்படத்தை இயக்கியுள்ளார். மமிதா பைஜு மற்றும் நஸ்லென் கே கஃபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இவர்களுடன் ஷியாம் மோகன், மீனாக்‌ஷி ரவீந்திரன், மேத்யு தாமஸ் உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்துள்ளார்கள். ஃபகத் ஃபாசில் இப்படத்தை தயாரித்துள்ளார். 

குறைவான மதிப்பெண்கள் பெற்றதால் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டில் சேலத்தில் ஒரு சுமாரான கல்லூரியில் தனது படிப்பை முடித்துச் செல்கிறான் சச்சின். நான்கு ஆண்டுகளாக ஒருதலையாக காதலித்து வந்த பெண்ணிடம் ஒருவழியாக தைரியத்தை வரவழைத்து காதலை சொல்லி அவளால் நிராகரிக்கப்படுகிறான். எப்போதும் முட்டிக்கொண்டே இருக்கும் பெற்றோர்கள், சலிப்படைந்த தனது ஊரை விட்டு எப்படியாவது லண்டனுக்குச் சென்று தனது இந்த மிடில் கிளாஸ் வாழ்க்கையில் இருந்து விடுபட நினைக்கிறான். ஆனால் விதி அவனை விஸா கிடைக்காமல் தனது நண்பனுடன் கேட் பரீட்சைக்கு ஹைதராபாதில் கோர்ஸ் சேர வைக்கிறது.

மறுபக்கம் ஹைதராபாதில் பெரிய சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலைக்கு சேர்கிறார் ரீனு. புதிதான வேலை, நண்பர்கள், கை நிறைய சம்பளம் என வாழ்க்கையை புதிதாக தொடங்கும் ரீனுவுக்கு ஒரே ஆசைதான். நல்ல பொறுப்பான, செட்டில் ஆன ஒரு ஆணை திருமனம் செய்துகொண்டு 30 வயதிற்குள் குழைந்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.

லட்சியத்தோடு இருக்கும் ரீனுவும் இலக்கற்று சுற்றும் சச்சினும் சந்தித்துக் கொள்கிறார்கள். பார்த்த மாத்திரத்தில் ரீனு மீது காதல் வயப்படுகிறான் சச்சின். இவர்கள் இருவரும் சேர்ந்தார்களா? இல்லை இந்த முறையும் ஒன் சைட் லவ்வராகவே இருந்தானா சச்சின்? என்பதே பிரேமலு படத்தின் கதை.

நடிகை மீனாட்சி ரவீந்திரன் மிக நன்றாக நடித்துள்ளார் மிக அழகாக உள்ளார்.

அனைத்து கதாபாத்திரங்களும் நன்றாக நடித்துள்ளனர்.

இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது.

பாடல்கள் நன்றாக உள்ளது.

இத்திரைப்படம் 2k kids ku  மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது.

ஆக மொத்தத்தில் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக் கூடிய திரைப்படம்.

Rating 3.5 / 5 

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை