சற்று முன்



அமீகோ கேரேஜ் திரை விமர்சனம் !

தமிழ் சினிமா உலகில் செல்லமாக அழைக்கப்படும் மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் அமீகோ கேரேஜ்.

நடிகை ஆதிரா, தீபா பாலு, ஜி எம் சுந்தர் , தசரதி நரசிம்மன், முரளிதரன், மதன் கோபால், சக்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

அமீகோ என்றால் ஸ்பானிஷ் மொழியில் நட்பான என்று அர்த்தம்.


படத்தின் தொடக்கத்தில் பள்ளி மாணவனாக தோன்றும் ருத்ரா என்ற மகேந்திரன் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டு ஜாலியாக அரட்டை அடித்துக் கொண்டு நடுத்தர குடும்பவாசியாக வருகிறார்.

ஒரு நாள் பள்ளியில் இயற்பியல் ஆசிரியர் மகேந்திரனுக்கு தண்டனை கொடுக்கிறார் அதை தாங்கிக் கொள்ள இயலாமல் மகேந்திரன் நண்பன் அமீகோ காரேஜில் இருக்கும் ஆனந்த் என்ற ஜி எம் சுந்தரை சந்திக்கின்றனர்.

ஜி எம் சுந்தர் ஆசிரியரை கண்டிக்கிறார்.

சிறுவயதிலிருந்தே அந்த கேரேஜ்  செல்லக்கூடாது என்று இவர்கள் பெற்றோர்கள் கூறுவார்கள்.

ஏனென்றால் அந்த கேரேஜில் ஸ்பானிஷ் பாடல் மது பார்ட்டி போன்ற விஷயங்கள் இந்நேரம் நடந்து கொண்டிருக்கும்.

மகேந்திரனுக்கு சிறுவயதில் இருந்து கேரேஜ் க்கு போக வேண்டும் என்று ஆசை அந்த ஆசை நிறைவேறி விட்டது.

ஜி எம் சுந்தர் உடன் நட்பாகி ஒரு தம்பியாக இருக்கிறான்.

பள்ளி கல்லூரி அனைத்தும் முடித்துவிட்டு ஒயின்ஷாப் கேரேஜ் சிகரெட் வெட்டி பேச்சு என்று இருக்கிறான் மகேந்திரன்.

ஒரு நாள் வைன் ஷாப்பில் இருந்து வரும் பொழுது தசரதி நரசிம்மனின் கை தம்பியான குருவிடம் ஒரு தகராறு ஆகிறது.

குருவுக்கும் மகேந்திரனுக்கும் ஒரு சிறிய சண்டை.

அதன்பின் குரு இவனை பழிவாங்க வேண்டும் என்று இருக்கிறான்.

அப்பொழுது மகேந்திரன் ஜி எம் சுந்தரை நாடுகிறான் ஜி எம் சுந்தர் தசரதி நரசிம்மிடம் போய் அண்ணா இது மாதிரி நடந்து விட்டது என்று கூறுகிறான்.

நான் பார்த்துக் கொள்கிறேன் என்று தசரதின் நரசிம்மன் சொல்லி அனுப்பி விடுகிறான்.

குருவிற்கு ஒரு அவமானம் ஆகி விடுகிறது.

ஜி எம் சுந்தர் எதையாவது சிக்க வைத்து விட்டால் அவன் ஆதரவில்லை என்றால் மகேந்திரனை போட்டு விடலாம் என்று குரு நினைக்கிறான்.

அதேபோல் நடக்கிறது.

மகேந்திரன் தசரதி நரசிம்மனிடம் பேச வருகிறான் அப்பொழுது குரு அண்ணா உங்களைப் போட தான் வருகிறான் என்று கூறுகிறான் அதே போல் செட்டப் ஆகிவிடுகிறது.

அதன்பின் தசரதி குருவிடம் இவனை போட சொல்கிறான் மகேந்திரன் இவர்களிடமிருந்து தப்பித்தானா இல்லையா என்பதை கதை.

ஜி எம் சுந்தர் மிக நன்றாக நடித்துள்ளார் அவரது கதாபாத்திரமே படத்திற்கு மிகப்பெரிய பக்கபலமாக அமைந்துள்ளது.

தீபா பாலு சிறிது நேரம் வந்தாலும் நன்றாக உள்ளது அழகாக உள்ளார்.

ஆதிரா ஜஸ்ட் லைக் தட் காதல் காட்சிகள் நன்றாக உள்ளது. 

தசரதி நரசிம்மன் கதாபாத்திரம் இன்னும் கொஞ்சம் சிறப்பாக பண்ணி இருக்கலாம்.

குருவின் கதாபாத்திரம் நன்றாக உள்ளது சண்டை காட்சிகள் நன்றாக உள்ளது.

மகேந்திரன் சிறப்பாக நடித்துள்ளார்.

சண்டைக் காட்சிகள் அற்புதமாக செய்துள்ளார்.

இறுதியில் டான் ஆக நிற்கிறார்.

இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது.

பாடல்கள் சுமார் தான்.

ஆக்சன் ரசிகர்களுக்கு இத்திரைப்படம் மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது.

ஆக மொத்தத்தில் அனைவரும் பார்க்கக்கூடிய திரைப்படம்.

Rating : 3 / 5 

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை