சற்று முன்



காமி திரை விமர்சனம் !

தமிழ் சினிமா உலகில்  விஸ்வக் சென் , சாந்தினி சவுத்ரி ,  நாடோடிகள் அபிநயா நடிப்பில் காமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.


சமஸ்கிருதத்தில், காமி என்றால் ‘தேடல் உடையவர்’ எனப் பொருள். 

சிவனின் சாபத்தைப் பெற்றவராகக் கருதப்படும் அகோரி ஆசிரமத்திலுள்ள சங்கர், தேவதாசி துர்காவின் மகளாகப் பிறக்கும் உமா, இவ்திய – சீன எல்லையில் அநாதைகள் மீது நடக்கும் சட்டவிரோதமான மருத்துவ ஆராய்ச்சியில் சிக்கிக் கொள்ளும் CT-333 என அடையாளமிடப்பட்ட ஒருவன் என மூன்று பேரைப் பற்றிய கதை. 


மனிதர்கள் யாராவது தொட்டால், உடலில் நீலம் பாவி மூர்ச்சையாகிவிடுவார் சங்கர். அத்தகைய சாபத்தைப் பெற்ற சங்கரை, அகோரிகளே தங்கள் கூட்டத்தில் இருந்து வெளியில் அனுப்புகின்றனர். தான் யார் என்பதையும் அறியவும், தன் சாபத்துக்கான விமோசனத்தைத் தேடியும், தன்னை அகோரி ஆசிரமத்தில் விட்ட கேதார் பாபாவைத் தேடி, ஹரித்வாரிலிருந்து பிராயக்ராஜில் (அலஹாபாத்) நடக்கும் கும்பமேளாவிற்குச் செல்கிறான் சங்கர். சிறுமி உமாவையும் தேவதாசியாக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. மூளையின் செயற்திறனை மாற்றும் லோபோடோமி (Lobotomy) எனும் அறுவைச் சிகிச்சையை, CT-333க்குச் செய்ய நாள் குறிக்கப்படுகிறது.

துரோணகிரி எனும் இமயமலையின் உயரமான சிகரங்களில் கிடைக்கும் மாலிபத்ரம் என்ற ஒளிரும் காளானை உண்டால், சங்கரின் சாபம் தீர்ந்துவிடும். ஆனால், அந்தக் காளான் 36 வருடங்களுக்கு ஒருமுறையே ஒளிரும். அதைத் தேடி செல்கிறான்.


 தேவதாசியாக தன் மகள் மாற்றப்படக்கூடாதெனப் போராடுகிறார் துர்கா. அடிக்கடி மின்சக்தியை உடலில் பாய்ச்சும் (Electrocute) மருத்துவ ஆய்வகத்தில் இருந்து எப்படியாவது தப்பித்துவிடவேண்டுமென CT-333 முடிவெடுக்கிறான். இந்த  மூன்று பேரின் கதை இணையும் புள்ளி தான் படத்தின் முடிவு.  இந்த மூன்று கதாபாத்திரமே இறுதியில் இவரது வாழ்க்கையை தான் கூறும். இறுதியில் சங்கர் அந்தக் காளானை உண்டாரா தன் சாபத்தை மோட்சம் அடைந்தாரா என்பது கதை. 

கிளைமாக்ஸ் காட்சிகள் அனைவரையும் கவரும் மிக அற்புதமாக காண்பித்துள்ளார் இயக்குனர்.

Lobotomy, Haphephobia, Congenital Adrenal Hyperplasia என்ற பதங்களைக் கதையில் மையப்படுத்தி, இப்படத்தின் இயக்குநர் வித்யாதர் காகிதாவும், பிரத்யுஷ் வாத்யத்தும் இணைந்து திரைக்கதை அமைத்துள்ளனர்.

அபிநயா ஒரு தாயாக வாழ்ந்துள்ளார் நன்றாக நடித்துள்ளார்.

சங்கர் கதாபாத்திரம் மிக நன்றாக உள்ளது கதைக்கு கச்சிதமாக பொருந்தியுள்ளார்.

இமயமலையை மிக நன்றாக காண்பித்துள்ளனர்.

தெய்வ சக்தியையும் ஆன்மீகத்தையும் மிக நன்றாக இயக்குனர் காண்பித்துள்ளார்.

சாபத்திற்கு மோட்சம் உண்டு என்பது திரைப்படம் உணர்த்தும்.

சிவன் பாடல் பிரமாதம்.

இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது.

ஒளிப்பதிவு பிரமாதம்.

பிஜிஎம் வேற லெவல் என்று கூறலாம்.

ஆன்மீக வாதிகளுக்கு இத்திரைப்படம் ஒரு மிகப்பெரிய விருந்தாக இருக்கும். 

ஏனென்றால் அவர்கள் இதை உணர்ந்திருப்பார்கள்.

இத்திரைப்படம் அனைவரும் பார்க்கக் கூடிய திரைப்படம்.

Rating : 3 / 5 

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை