J.பேபி திரை விமர்சனம் !
தமிழ் சினிமா உலகில் நாயகனாக இருக்கும் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் மற்றும் முன்னணி நாயகி ஊர்வசி இன் J.பேபி.
மற்றும் மாறன், சுபிதா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த கதையினை இயக்குனர் சுரேஷ் மாரி இயக்கியுள்ளார்.
கதையின் ஆரம்பத்தில் செந்தில் (மாறன்), சங்கர் (அட்டகத்தி தினேஷ்) இருவருக்கும் காவல்நிலையத்திலிருந்து போன் வருகிறது. பிறகு இருவரும் காவல்நிலையம் செல்கின்றனர். அங்கு சென்ற பிறகுதான் இவர்களின் அம்மா J.பேபி, சென்னையிலிருந்து கொல்கத்தாவிற்கு ரயில் ஏறி சென்றிருப்பது தெரியவருகிறது.
காவல் அதிகாரி இவர்கள் இருவரையும் கண்டித்து, பிறகு கொல்கத்தாவிற்கு சென்று அம்மாவை கண்டுபிடித்து அழைத்துவர சொல்கிறார். அண்ணன் தம்பி இருவரும் குடும்ப பிரச்சனையால் 3 வருடம் பேசாமல் இருக்கின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து J. பேபியை கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதும் J. பேபி கொல்கத்தா சென்றதற்கான காரணம் என்ன? என்பதே படத்தின் மீதி கதை…
அட்டகத்தி தினேஷ் மிக எதார்த்தமான நடிப்பு நன்றாக உள்ளது.
அவரது குடும்பக் காட்சிகள் சிறப்பு.
மாறன் படத்திற்கு மிக பக்க பலமாக அமைந்துள்ளார்.
அவரது கதாபாத்திரம் மிகச் சிறப்பு.
மாறன் திரையில் வரும் போது அனைவரையும் கவர்வார்.
ஊர்வசி ஒரு தாயாக வாழ்ந்துள்ளார் அவரது கதாபாத்திரம் அனைவரின் வாழ்விலும் சில இடங்களில் நடந்திருக்கும் .
தாய்க்கும் மகனுக்கும் பாசப்போர்தான் J.பேபி
இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது.
பாடல்கள் சுமார் தான்.
திரைப்படம் உண்மை சம்பவத்தை எடுக்கப்பட்டவை.
மொத்தத்தில் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய திரைப்படம்.
Rating : 3.5 / 5
கருத்துகள் இல்லை