சற்று முன்



ரத்னம் திரை விமர்சனம் !

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமான புரட்சித் தளபதி என்று‌ ரசிகர்களால் செல்லமாக  அழைக்கப்படும் நடிகர் விஷால் நடிப்பில் ரத்னம்.

மற்றும் நடிகை ப்ரியா பவானி சங்கர், சமுத்திரகனி, யோகி பாபு , மொட்ட ராஜேந்தர், ஒய் ஜி மகேந்திரன், விஜயகுமார் , ஜெயபிரகாஷ் , கணேஷ் வெங்கட்ராம்  மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கியுள்ளார்.

சிறுவயதில் தாயை இழந்த பின்னர், தன்னை அரவணைத்த சமுத்திரக்கனியை காப்பாற்றுவதற்காக கொலை செய்துவிட்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்குச் செல்கின்றார் விஷால். இந்த இடைவெளியில் எம்.எல்.ஏ.,வாக சமுத்திரக்கனி ஆகிவிடுகின்றார். அதைத்தொடர்ந்தும்  சமுத்திரக்கனி அரவணைப்பால் வளரும் விஷால், சமுத்திரக்கனியின் அடியாளாக இருக்கின்றார். நற்குணம் கொண்ட அரசியல்வாதியிடம் அடியாளாக இருக்கும் விஷால், “ கொள்கைக்காக கொலையே செய்வேன்” என்ற மனநிலையில்தான் இருக்கின்றார். 

இப்படியான நிலையில் கதாநாயகி ப்ரியா பவானி சங்கரை விஷால், சந்திக்கின்றார். அப்போது வில்லன்கள் கதாநாயகியை தாக்குகின்றனர். அதிலிருந்து நாயகியைக் காப்பாற்றும் விஷால், வில்லன்களை எப்படி சமாளிக்கின்றார். கதாநாயகியை வில்லன்கள் தாக்குவதற்கு காரணம் என்ன? இறுதியில் என்ன நடந்தது என்பது மீதிக் கதை. 

நடிகர் விஷால் என்றாலே ஒரு ஆக்சன் பிளாக் தான்.

அதுவும் இயக்குனர் ஹரியுடன் கைகோர்த்தால் சொல்லத் தேவையில்லை பக்கா மாஸ்.

ப்ரியா பவானி சங்கர் மிக அழகாக உள்ளார் அவரது கதாபாத்திரம் நன்றாக உள்ளது.

நடிகர் சமுத்திரக்கனி கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். பக்க பலமாக அமைந்துள்ளார்.

யோகி பாபு மற்றும் மொட்ட ராஜேந்தர் படத்திற்கு மிக பக்க பலமாக அமைந்துள்ளனர்.

இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது.

இயக்குனர் ஹரி என்றாலே குடும்பத் திரைப்படம் தான். அவருக்கென்று தனி ரசிகர்கள் உண்டு.

ஆக மொத்தத்தில் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய திரைப்படம்.

Rating : 3.5 / 5 

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை