Header Ads

சற்று முன்கிரீன்லாம் இண்டஸ்ட்ரீஸ் சென்னையில் மிகாசா ஃபுளோர்ஸ்க்கான பிரத்யேகக் காட்சி மையத்தை தொடங்கியுள்ளது !

கிரீன்லாம் இண்டஸ்ட்ரீஸ் சென்னையில் மிகாசா ஃபுளோர்ஸ்க்கான பிரத்யேகக் காட்சி மையத்தை தொடங்கியுள்ளது !

ஏப்ரல் 11, 2024: மேற்பரப்பு தீர்வுகளுக்கான உலகின் தலைசிறந்த 3 உற்பத்தியாளர்களில் ஒன்றான கிரீன்லாம் இண்டஸ்ட்ரீஸ், அதன் முதல் பிரத்யேகக் காட்சி மையத்தை, சென்னை, ஆஸ்டின் நகர், ஆஷிகா சேம்பர்ஸ் ஃபுளோர், M/s டெகோட்ராமா-வில் சமீபத்தில் திறந்து வைத்தது. இக்காட்சி மையத்தில் மிகாசா ரியல் வூட் ஃபுளோர்ஸின் பிரத்யேக வகையைக் காட்சிக்கு வைக்கும், இது தளம் அமைக்கும் பிரிவில் இவ்வாறு மாறுபட்ட கலைக்ஷனை வழங்கும் நகரத்தின் முதலாவது ஸ்டோர் ஆகும். 

கிரீன்லாம் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் பல ஆண்டுகளாக ஒவ்வொரு படைப்பிலும் படைப்பாற்றலை புகுத்தி, அதை அழகு மற்றும் புத்திசாலித்தனத்தின் ஒரு பகுதியாக மாற்றுவதன் மூலம் உட்புற இடங்களை அழகுபடுத்துகிறது. 100க்கும் மேற்பட்ட நாடுகளில் மேற்பரப்பு புராடக்டுகளில் கணிசமான முக்கியத்துவம் பெற்ற பெயர், கிரீன்லாம் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் அதன் வழிகாட்டும் தத்துவங்கள் - புதுமையான தொழில்நுட்பங்கள், ஆக்கப்பூர்வமான தீர்வுகள் ஆகியவற்றுடன் நம்பிக்கையுடனும் பெருமையுடனும் செயல்படுகிறது. 

கிரீன்லாம் இண்டஸ்ட்ரீஸின் மரத் தள பிராண்டான மிகாசா ஃபுளோர்ஸ், கூட்டு மரஅமைப்புத் தளங்களின் விரிவான தேர்வை வழங்குகிறது, நிறங்கள், கட்டமைப்புகள், மர இனங்கள் ஆகியவற்றின் சிம்பொனியைக் கொண்டுள்ளது, அவை எந்த குறைபாடுகளும் இல்லாமல் உண்மையான மரத்தின் உண்மையான அழகை வழங்குகிறது. மிகாசா ஃபுளோர்ஸ் மூன்று அடுக்குகளை உள்ளடக்கியது, அவை உண்மையான உறுதியான மரம், ஒரு உறுதிப்படுத்தும் கோர், மற்றும் ஒரு சமநிலை அடுக்கு ஆகியவற்றைக் கொண்டுள்ளன, இது ஒவ்வொரு பலகைக்கும் திடத்தன்மையையும் நிலைத்தன்மையையும் வழங்குகிறது. நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒன்றிணைத்து, இந்த கூட்டு மரஅமைப்புத் தளம் நேரம் மற்றும் காலநிலையின் சோதனையைக் கடந்து நிற்கும் மீள்ஆற்றலைக் கொண்டுள்ளது.  உண்மையான மரத் தளங்களின் மிகப்பெரிய வகைகளுடன், மிகாசா ஃபுளோர்ஸ், அவற்றின் உட்புற இடங்களுக்கு ஒருவர் கொண்டுள்ள கலைப் பார்வையை ஒளிரச் செய்வதற்கும், முழுமையாகக் கலப்பதற்கும் உதவுகிறது. M/s அரவிந்த் வருணா அசோசியேட்ஸ் நிறுவனத்தின் திருமதி வருணா ரங்கன் அவர்கள் இந்த ஷோரூமை திறந்து வைத்தார், M/s பிஎஸ்பி ஆர்க்கிடெக்ட்ஸைச் சேர்ந்த திருமதி பிரேர்னா பிரதான், M/s டிசைன் ஒர்க்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த திருமதி நான்சி சதீஷ் ஆகியோருடன் உட்புற வடிவமைப்பாளர்கள், டீலர்கள், மற்றும் வாடிக்கையாளர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். 

இத்தொடக்கம் குறித்து கிரீன்லாம் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தில் டெக்கரேட்டிவ் வூட் & அலைட், நாட்டின் விற்பனைத் தலைவர் எம்.பி.ராஜா பிரசாத் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார், "எங்கள் பிரத்யேகக் காட்சி மையத்தை அழகான சென்னை நகரத்திற்கு கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இக்காட்சி மையம் துவக்கத்தின் மூலம், வாடிக்கையாளர்கள் காண்கின்ற விதத்தை மாற்றியமைத்து, வாங்குதலை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்றி, இத்தொழில்துறைக்கு ஒரு புதிய அளவுகோலை அமைப்பதே எங்கள் நோக்கம். இந்த மையங்கள் எங்கள் மிகாசா உண்மையான மரத் தளங்களின் நடைமுறை அனுபவத்தை வழங்குவதற்காக  முழுமையாகத் தொடங்கப்பட்டுள்ளன, இதனால் நுகர்வோர் அவர்களின் தேவைகள் மற்றும் அவர்களின் இடங்களுக்கு அழகியல் ஆகியவற்றுடன் பொருந்தக்கூடிய தகவலறிந்த தேர்வை மேற்கொள்ள உதவுகிறது. இந்த மையத்தின் மூலம், வாடிக்கையாளர்கள் பல்வேறு வகையான புராடக்டுகளை ஒரே கட்டிடத்தில் அனுபவிக்க முடியும், எனவே, தடையற்ற,  விரைவான ஷாப்பிங் அனுபவத்தைப் பெற அவர்களுக்கு உதவுகிறது.”


கருத்துகள் இல்லை