சற்று முன்



வல்லவன் வகுத்ததடா திரை விமர்சனம் !

தமிழ் சினிமாவில் உலகில் புதுமுக நடிகர் நடிகைகள் நடிப்பில் வல்லவன் வகுத்ததடா’ .தேஜ் சரண்ராஜ், ராஜேஷ் பாலச்சந்திரன், அனன்யா மணி, சுவாதி மீனாட்சி, விக்ரம் ஆதித்யா, ரெஜின் ரோஸ் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.

இத்திரைப்படத்தை தயாரித்து இயக்கியுள்ளார் விநாயக் துறை.

நல்லது நினைத்தால் நல்லது மட்டுமே நடக்கும் எனச் சொல்வார்கள். எண்ணம்போலதான் வாழ்வு. நம்மைச் சுற்றி எப்போதுமே பாஸிட்டிவ் வைப்ரேஷன் இருந்தால், நாம் இயல்பாகவே அதிக முனைப்போடு ஒரு விஷயத்தைச் செய்வோம். பாஸிட்டிவாகவும், வித்தியாசமாகவும் சிந்தித்தவர்களே வெற்றிகளைக் குவித்திருக்கிறார்கள். அதனால் எப்போதும் நெகட்டிவாக யோசிக்காமல் தட்றோம், தூக்குறோம் எனக் களத்தில் இறங்குங்கள். வெற்றி மட்டும்தான் என்ற நோக்கத்தை வலியுறுத்தி 6 கேரக்டர்களை சுற்றி நடக்கும் கதையை ஹைபர் லிங்க் பாணியில் சொல்லி இருப்பவது தான் ‘வல்லவன் வகுத்ததடா’படம்.

பணம் மட்டுமே முக்கியம் என்று நம்பி சகலவித தகிடுத்தங்கள் செய்யும் ஐந்து பேர் பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் இருக்கிறார்கள். அதே சமயம், மற்றவர்களுக்கு உதவி செய்வதோடு, நேர்மையாக வாழ வேண்டும் என்று நினைக்கும் ஒருவர் வாழ்க்கையில் அனைத்தையும் இழந்தது அடுத்தடுத்து துன்பப்படும் நிலைக்கு தள்ளப்படுகிறார். இந்த ஆறு பேரும் ஒருவருக்கொருவர் தொடர்பில்லாதவர்கள் என்றாலும் பணம் இவர்களுக்கிடையே தொடர்பை ஏற்படுத்தி உள்ளத்தில் நல்ல உள்ளத்திற்கு ஒருபோதும் தாழ்வில்லை என்ற கருத்தைச் சொல்லி முடிப்பதுதான் இப்படத்தின் கதை .

 ஒவ்வொருவரும் அந்தந்த கேரக்டருக்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். அதிலும், போலீஸ் இன்ஸ்பெக்டர் நீதி மணியாக நடித்திருக்கும் ராஜேஷ் பாலச்சந்திரன் மாஸாக நடித்து தனிக் கவனம் பெறுகிறார்.

அவரது சிரிப்பு தான் இப்படத்தில் மிகப்பெரிய ஹைலைட்.

திரைப்படத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பாக உள்ளது.

இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது.

ஆக மொத்தத்தில் அனைவரும் பார்க்கக்கூடிய திரைப்படம்.

Rating : 3 / 5 

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை