சற்று முன்



ஹரியானா சிட்டி எப்சி அணி ரோட் டு ஓல்ட் டிராஃபோர்ட் போட்டியின் தேசிய சாம்பியனாக முடிசூடப்பட்டது !

ஹரியானா சிட்டி எப்சி அணி ரோட் டு ஓல்ட் டிராஃபோர்ட் போட்டியின்  தேசிய சாம்பியனாக முடிசூடப்பட்டது !

இந்த வெற்றியின் மூலம மிகவும் புகழ்பெற்ற ஓல்ட் டிராஃபோர்ட் ஸ்டேடியத்தில் விளையாட வேண்டும் என்ற கனவு ஹரியானா சிட்டி எப்சி அணிக்கு நிறைவேறியுள்ளது.  

ரோட் டு ஓல்ட் ட்ராஃபோர்ட் என்பது மான்செஸ்டர் யுனைடெட் ஆதரவுடன் அப்பல்லோ டயர்ஸ் மேற்கொண்டுள்ள முன்முயற்சியான போட்டியாகும்.

சென்னை, ஏப்ரல் 07, 2024: சென்னையில் இன்று நடந்த பரபரப்பான இறுதிப்போட்டியில், ஹரியானா சிட்டி எப்சி அணி  அப்பல்லோ டயர்ஸ் ரோடு டு ஓல்ட் டிராஃபோர்ட் ஐவர் கால்பந்து போட்டியின் தேசிய சாம்பியன்களாக உருவெடுத்தது. முன்னணி டயர் தயாரிப்பு நிறுவனமான அப்பல்லோ டயர்ஸால் ஏற்பாடு செய்யப்பட்டு, மான்செஸ்டர் யுனைடெட்டின் ஆதரவுடன், இந்தியாவின் ஐந்துபேர் கொண்ட சிறந்த  கால்பந்து அணியை வெளிக்கொணர, இந்திய அளவில் பல கட்டங்களாக நடைபெற்ற இந்தப் போட்டியின் இரண்டாவது பதிப்பின்போது நாட்டின் பல்வேறு  பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றதை காணமுடிந்தது. 

சென்னை பெரம்பூரில் உள்ள ஹாட்ஃபுட் எஸ்பிஆர் சிட்டியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், தில்லியைச் சேர்ந்த ஹரியானா சிட்டி எஃப்சி, பதற்றமான இறுதிப் போட்டியில் பெனால்டி வரை சென்றபோதும், பெங்களூரைச் சேர்ந்த கன்னர்ஸ் எப்சி அணியை வீழ்த்தியது. நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் முடிவடைந்ததை அடுத்து, ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. அதில் நிதானத்தைக் கடைப்பிடித்த டெல்லி அணி, இறுதியில் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த செயல்பாட்டில், ஹரியானா சிட்டி எஃப்சி எந்தவொரு இந்திய கால்பந்து அணியும் வெல்லக்கூடிய மிகவும் விரும்பப்படும் பரிசுகளில் ஒன்றைப் பெற்றுள்ளது. அது என்னவென்றால் ஓல்ட் டிராஃபோர்டில் உள்ள புனிதமான புல்தரையில் விளையாடுவதற்கான வாய்ப்புதான். கால்பந்து விளையாட்டின் சில ஜாம்பவான்கள் சில ஆண்டுகளாக அங்கு விளையாடி  கால்பந்து ரசிகர்களை கவர்ந்துள்ளனர்.   தேர்வாகியுள்ள ஹரியானா சிட்டி எஃப்சி அணி பிரிட்டனில் உள்ள, மான்செஸ்டர் நகருக்கு சென்று தி தியேட்டர் ஆஃப் ட்ரீம்ஸ் என்றும் அழைக்கப்படும் பழம்பெரும் ஓல்ட் ட்ராஃபோர்ட் மைதானத்தில் விளையாடுவதற்கான வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பைபெற்றுள்ளது.இதற்கான செலவு முழுவதையும் அப்போலோ டயர்ஸ் நிறுவனம் ஏற்கிறது.  மான்செஸ்டர் நகரம் யுனைடெட் எஃப்சி அணியின் தாயகம் ஆகும். 'உலகளாவிய வெற்றியாளரைத்' தேர்வு செய்வதற்கான அப்பல்லோ டயர்ஸ் ரோடு ஓல்ட் டிராஃபோர்டுக்கான இறுதிப் போட்டி 2024  மே 31 ஆம் தேதி இந்த புகழ்பெற்ற ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.

இந்தாண்டு இரண்டாவது பதிப்பு போட்டியானது ஒரு பெரிய வடிவத்தில் நடத்தப்பட்டது.  ஆரம்பச்சுற்று போட்டிகள் டெல்லி, புனே, கொல்கத்தா, பெங்களூர், கொச்சி மற்றும் சென்னை ஆகிய ஆறு நகரங்களில் நடைபெற்றது. இதில் நகர அளவில் வெற்றிபெற்ற அணியினர் தேசியளவில் சென்னையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஒருவரையொருவர் எதிர்கொண்டனர்.  இதில் வளர்ந்து வரும் ஹரியானா சிட்டி எஃப்சி அணிஅணி சென்னையில் சாம்பியனாக உருவெடுத்தது. 

பரபரப்பான இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு, வெற்றி பெற்ற ஹரியானா சிட்டி எஃப்சியின் கேப்டன் பிரணவ் சர்மா, கூறுகையில் “உண்மையாகச் சொன்னால், எங்களது நம்பிக்கை வீண்போகவில்லை! தகுதிச் சுற்றில் இருந்தே நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தோம், ஆனால் இந்தியாவில் உள்ள சிறந்த ஐவர் கால்பந்து அணிகளுக்கு எதிராக போட்டியிடுவது மற்றும் அப்பல்லோ டயர்ஸ் ரோடு டு ஓல்ட் டிராஃபோர்ட் போட்டியின் தேசிய இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றது மிகவும் உற்சாகமானது. மான்செஸ்டருக்குச் சென்று ஓல்ட் ட்ராஃபோர்ட்டில் உள்ள வரலாற்று புல்வெளியில் விளையாடுவதற்கு நாங்கள் இனியும் காத்திருக்க முடியாது; இது ஒரு சிறந்த அனுபவமாகவும், மிகப்பெரிய கவுரவமாகவும் இருக்கும், மேலும் எங்கள் கனவுகளை நிறைவேற்ற இந்த வாய்ப்பை வழங்கிய அப்பல்லோ டயர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி தெரிவிக்கிறோம்" என்றார்.

ரோட் டு ஓல்ட் ட்ராஃபோர்ட் மூலம், இந்தியாவில் கால்பந்தாட்டத்தின் மீதான ஆர்வத்தை கொண்டாடவும், திறமையான கால்பந்து வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குவதையும் அப்பல்லோ டயர்ஸ் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதுகுறித்து அப்பல்லோ டயர்ஸ் நிறுவனத்தின் விளையாட்டு சமூக ஈடுபாடு பிரிவின் தலைமை சந்தையிடல் அதிகாரி திரு ரெமுஸ் டி குரூஸ் கூறுகையில், "இந்த ஆண்டு ரோட் டு ஓல்ட் டிராஃபோர்ட் நடந்த ஆறு நகரங்களிலும் சில சிறந்த கால்பந்து வீர்ர்களையும் அவர்களது அற்புதமான திறமைகளையும் காண முடிந்ததாக கூறினார். மேலும் நான் தகுதியான வெற்றியாளர்களாக உருவெடுத்த ஹரியானா சிட்டி எப்சி அணிக்கு வாழ்த்து தெரிவிக்க விரும்புகிறேன்.. ஓல்ட் ட்ராஃபோர்டில் விளையாடுவதற்கான நேசத்துக்குரிய வாய்ப்பைப் பெறுவதற்கு போட்டி முழுவதும் அவர்களின் செயல்பாடு சிறப்பாக இருந்தது.  இது அவர்களுக்கு ஒரு மிகச்சிறந்த அனுபவமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். விளையாட்டு வீர்ர்களிடையே ஆர்வத்தைத் தூண்டி, இந்திய இளம் கால்பந்து வீரர்கள் வெற்றியின் உச்சத்திறகு செல்லவும், அவர்களின் விளையாட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் அப்பல்லோ டயர்ஸ் இது போன்ற முயற்சிகள் மூலம் ஒரு சிறந்த தளத்தை வழங்க முயற்சிக்கிறது என்றார். 

இந்த போட்டியில் 112 அணிகள் ஒருவருக்கொருவர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி உற்சாகம் நிறைந்த மற்றும் பரப்பரப்புக்கு குறைவில்லாத போட்டியை உருவாக்கின. ஆறு நகரங்களில் இருந்தும் ஒவ்வொரு சிறந்த அணி தேர்வு செய்யப்பட்டு தேசியளவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இறுதிப்போட்டியில் ஹரியானா சிட்டி எஃப்சியின் அணி வெற்றி பெற்றது. 

கடந்தாண்டு நடைபெற்ற போட்டியில் மும்பையை சேர்ந்த கலினா ரேஞ்சர்ஸ் அணி வெற்றிபெற்றது. அந்த அணி பிரிட்டன் செல்லும் இந்திய அணிக்கான வாய்ப்பையும் பெற்றது. அவர்களுக்கு எதிராக மான்செஸ்டர் யுனைடெட் அணியின் முன்னாள் நட்சத்திரம் டிமிடர் பெர்படோவ், வெஸ் பிரவுன் மற்றும் ஆண்டி கோல் ஆகியோருடன் இந்திய கால்பந்து ஜாம்பவான்களான ரெனெடி சிங், ஜெஜே லால்பெக்லுவா, ராபின் சிங் மற்றும் டான்வி ஹான்ஸ் ஆகியோர் அடங்கிய லெஜண்ட்ஸ் அணி விளையாடியது.


கருத்துகள் இல்லை