தமிழ்நாட்டின் சென்னை மாநகரில் தனது முதல் ஸ்டோரை தொடங்கியிருக்கும் ஐஎல்இஎம் ஜப்பான் !
தமிழ்நாட்டின் சென்னை மாநகரில் தனது முதல் ஸ்டோரை தொடங்கியிருக்கும் ஐஎல்இஎம் ஜப்பான் !
இந்நாட்டில் தனித்து செயல்படும் இரண்டாவது ஸ்டோர்-ஆக இது இருக்கிறது
Chennai, 11th மே, 2024: கலாச்சார செழுமையாக்கம் மற்றும் முழுமையான நலவாழ்வு என்ற இலக்கை நோக்கிய பயணத்தை மேற்கொண்டிருக்கும் ஐஎல்இஎம் ஜப்பான் (ILEM JAPAN), சென்னையில் அதன் ஸ்டோர் தொடங்கப்படுவதை பெருமையுடன் அறிவிக்கிறது. சென்னை மாநகரின் பிரபல அமைவிடமான பல்லாடியம் மால்-ல் தொடங்கப்பட்டிருக்கும் இந்த ஸ்டோர், இந்நிறுவனத்தின் வளர்ச்சி பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். இந்தியாவின் உயிரோட்டமான சூழலுக்குள் ஜப்பானிய நலவாழ்வு பாரம்பரியங்களை நேர்த்தியாக சங்கமிக்க செய்வதில் இந்த பிராண்டு கொண்டிருக்கும் வலுவான பொறுப்புறுதிக்கு இந்த ஸ்டோரின் தொடக்கம் ஒரு எடுத்துக்காட்டாகும். பூனே நகரின் முதல் ஸ்டோர் மற்றும் இந்தியா முழுவதிலும் கியாஸ்க்-கள் தொடங்கப்பட்டு சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் ஐஎல்இஎம் ஜப்பான் நிறுவனத்திற்கு இந்தியாவின் இரண்டாவது தனித்து செயல்படும் ஸ்டோராக சென்னையில் தொடங்கப்பட்டிருக்கும் இந்த ஸ்டோர் திகழ்கிறது.
Improve Longevity, Enhance Mindfulness என்பதன் சுருக்கமே ILEM என அழைக்கப்படுகிறது. நீண்டகாலம் வாழும் திறனை மேம்படுத்துவது, மனந்தெளிநிலையை மேம்படுத்துவது என்பதே இதன் அர்த்தமாகும். அசலான ஜப்பானிய அழகியல் அம்சங்களுடன் நவீன நேர்த்தியையும், நலினத்தையும் ஒருங்கிணைப்பதன் வழியாக நிகரற்ற ஷாப்பிங் அனுபவத்தை இப்புதிய ஸ்டோர் வழங்கும். ஜப்பானிய தேயிலை/தேநீரின் அழகான நுட்பங்களிலிருந்து ஜப்பானில் பரவலாக பயன்படுத்தப்படும் அழகான முகம், உடல் மற்றும் கேச பராமரிப்பு தயாரிப்புகள் வரை மாறுபட்ட பல்வேறு வகையினங்களின் கீழ் எண்ணற்ற பொருட்களை இந்த ஸ்டோர் காட்சிப்படுத்தும். இங்கு கிடைக்கும் ஒவ்வொரு தயாரிப்பு பொருளும் துன்புறுத்தல் இல்லாத, சுத்தமான மற்றும் இயற்கை உட்பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டதாகும்; நன்னெறி சார்ந்த மற்றும் நிலைப்புத்தன்மையுள்ள தயாரிப்பு செயல்முறைகள் மீது ஐஎல்இஎம் ஜப்பான் கொண்டிருக்கும் பொறுப்புறுதியையும், அர்ப்பணிப்பையும் இத்தயாரிப்புகள் பிரதிபலிக்கின்றன.
ஐஎல்இஎம் ஜப்பான் நிறுவனத்தின் நிறுவனரான இஷ்வானி பட்டேல், இந்த ஸ்டோர் தொடங்கப்படுவது குறித்து கூறியதாவது, “சென்னை மாநகரின் அறிவார்ந்த மக்கள் சமூகத்திற்கு எமது ஸ்டோரின் கதவுகளை நாங்கள் திறந்து வைக்கின்றபோது ஜப்பானிய நலவாழ்வு சாரத்தையும், அத்தியாவசிய அம்சங்களையும் உங்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியும், உற்சாகமும் கொள்கிறோம். ஐஎல்இஎம் ஜப்பான் நிறுவனத்தைச் சேர்ந்த நாங்கள், முழுமையாக வாழ்வதன் நிலைமாற்றத்திற்கான ஆற்றலில் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். மனந்தெளிநிலை மற்றும் நீண்டகாலம் வாழ்வது என்ற அம்சங்களில் வேர்களைக் கொண்டிருக்கும் ஒரு வாழ்க்கை முறையை ஏற்று செயல்படுத்த தனிநபர்கள் திறனதிகாரம் பெறுமாறு செய்வதே எமது செயல்திட்டமாகும். சென்னையில் எமது ஸ்டோர் இப்போது தொடங்கப்பட்டிருக்கும் நிலையில் ஜப்பானின் ஆன்மாவை பிரதிபலிக்கிற தொன்மையான பாரம்பரியங்கள் மற்றும் பிரீமியம் தயாரிப்பு பொருட்களை கண்டறிந்து பயன்படுத்துகிற ஒரு சுய, கண்டறிதல் பயணத்தை தொடங்க உங்களை நாங்கள் பேரன்புடன் அழைக்கிறோம்.
கருத்துகள் இல்லை