சற்று முன்



ஜெர்மனியின் நியூமன் ரெக்கார்டிங் சாதனங்களுடன் இசை அமைப்பாளர்களின் சொர்க்கம் சோனிக் சான்க்டம் ஸ்டுடியோஸ்!

ஜெர்மனியின் நியூமன் ரெக்கார்டிங் சாதனங்களுடன் இசை அமைப்பாளர்களின் சொர்க்கம் 

சோனிக் சான்க்டம் ஸ்டுடியோஸ்

சென்னை, மே 2-

நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மிகப் பிரமாண்டமாக இருந்த இசை ஸ்டூடியோக்கள் தற்போது சுருங்கி சிறிய இடங்களுக்கு வந்துவிட்டன. அந்த வகையில் அனைத்து நவீன தொழில்நுட்பங்களுடன் ஜெர்மனி நாட்டின் நியூமன் நிறுவனத்தின் மைக்ரோபோன்கள் உள்ளிட்ட அனைத்து ரெக்கார்டிங் கருவிகளுடன் இசை அமைப்பாளர்களின் சொர்க்கமாக சென்னையில் உள்ள சோனிக் சான்க்டம் ஸ்டுடியோஸ் விளங்கி வருகிறது.

இசையின் மீது ஆழ்ந்த ஞானமும் ஆர்வத்தாலும் தூண்டப்பட்ட புகழ்பெற்ற வயலின் கலைஞரும் இசையமைப்பாளருமான வி. சஞ்சீவ் அவர்களால் சோனிக் சான்க்டம் ஸ்டுடியோஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் சென்னையில் துவக்கப்பட்டது. இந்த ஸ்டூடியோ இசை ரெக்கார்டிங்கிற்கான அனைத்து தொழில்நுட்ப வசதிகளுடன் இசை அமைப்பாளர்களின் சொர்க்கமாக திகழ்கிறது. இங்கு திரைப்படங்கள் மற்றும் விளம்பரப் படங்களுக்கான இசை ரெக்கார்டிங்குகள் நடைபெறுகின்றன. இந்த ஸ்டூடியோ நவீன முறையில் துல்லியமாக ஒலியை பதிவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள ஒவ்வொரு சிறப்பு அம்சங்களும் தொழில்நுட்ப கலைஞர்கள் விரும்பும் வகையில் உள்ளன. இங்கு உலகத் தரம் வாய்ந்த உபகரணங்கள் மற்றும் ரெக்கார்டிங் கருவிகள் உள்ளன. இதில் நியூமன் ஸ்டுடியோ மைக்ரோபோன்கள் மற்றும் ஸ்டுடியோ மானிட்டர்கள் ஆகியவை மிகவும் சிறப்பு வாய்ந்தவையாகும். 

இது குறித்து நிறுவனர் சஞ்சீவ் கூறுகையில், ஸ்டுடியோவிற்கான தத்துவத்தின் அடிப்படையிலும், இசை அமைப்பாளர்களுக்கு அர்ப்பணிக்கும் விதத்திலும் இந்த ஸ்டுடியோவிற்கு "சோனிக் சான்க்டம்" என்று பெயரிடப்பட்டுள்ளது. "இசை என்பது ஒவ்வொருவருக்கும் மிகவும் பிடித்தான ஒன்றாகும். பலர் ஒருங்கிணைந்தால் மட்டுமே அதை சிறப்பாக உருவாக்க முடியும். அந்த வகையில் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் ஒலி பொறியாளர்களின் திறமையான ஆற்றலை வெளிக்கொண்டு வருவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு சோனிக் சான்க்டம் ஸ்டுடியோஸ் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எங்கள் ஸ்டூடியோவில் அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறோம். தரத்தில் எந்தவித சமரசமற்ற உறுதிப்பாட்டை பராமரிப்பதன் மூலம், இளம் தலைமுறை இசை அமைப்பாளர்களை உருவாக்குவதை நாங்கள் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளோம், மேலும் இந்த துறையில் தனித்துவமான ஒலி அனுபவங்களையும் ஏற்படுத்தி வருகிறோம் என்று என்று சஞ்சீவ் தெரிவித்தார்.

சிறந்த தொழில்நுட்பம்

சோனிக் சான்க்டம் ஸ்டுடியோவில் அடியெடுத்து வைப்பது என்பது ஒரு சோனிக் வொண்டர்லேண்டிற்குள் நுழைவதைப் போன்றதாகும். இந்த ஸ்டுடியோ 2.1 அமைப்பைக் கொண்டுள்ளது, இங்கு கேஎச் 420 மிட்ஃபீல்ட் ஸ்டுடியோ மானிட்டர்கள் இடது மற்றும் வலது பக்கம் 2 ஸ்பீக்கர்கள் மற்றும் ஒரு கேஎச் 750 டிஎஸ்பி சப்வூப்பர் ஆகியவை உள்ளன. இங்கு TLM 103, TLM 67, KM 184, M 147 போன்ற நியூமன் மைக்ரோபோன்கள் உள்ளன, மேலும் ஆம்பியோ வி.ஆர் மைக்ரோபோன் உட்பட சென்ஹைசர் மைக்ரோபோன்களும் உள்ளன. தேவைகளைப் பொறுத்து, அது முற்றிலும் குரல் அல்லது கருவியாக இருந்தாலும் சரி, அவற்றை ரெக்கார்டிங் செய்வதற்கு அதற்கேற்ற வகையில் வெவ்வேறு விதமான மைக்ரோபோன்கள் இங்கு பயன்படுத்தப்படுகின்றன.

தனது ஸ்டூடியோவில் சமீபத்தில் சேர்க்கப்பட்ட கேஎச் 420 ஸ்பீக்கர்கள் குறித்து தனது தனிப்பட்ட அனுபவத்தை சஞ்சீவ் கூறுகையில், எனது ஸ்டூடியோவில் இந்த ஸ்பீக்கர்களை புதிதாக நிறுவிய பிறகு, ஆடியோவில் என்னால் உடனடியாக வேறுபாட்டை உணர முடிந்தது.

மிக முக்கியமாக, இந்.த ஸ்பீக்கர்கள் வெவ்வேறு தொகுதிகளில் சிறந்த சமநிலையையும் துல்லியத்தையும் கொண்டுள்ளது, நீண்ட நேரம் ஸ்டூடியோவில் அமர்ந்து ரெக்கார்டிங் செய்யும்போது ஏற்படும் சோர்வை இது வெகுவாக குறைக்கிறது. உண்மையில் இந்த ஸ்பீக்கர்கள் எனது ஸ்டூடியோவில் ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார்.

சென்னையில் குறிப்பாக கர்நாடக இசையில், ஒலி தரம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் புரிதல் இல்லாதது குறித்து சஞ்சீவ் தனது கருத்தை கூறுகையில், எங்களின் ஸ்டூடியோ நல்ல வளர்ச்சி அடைந்து வருவதால் இந்த துறையில் சிறப்பானதொரு நிலையை உருவாக்க முடியும் என்று நான் நம்புகிறேன். என்றாவது ஒரு நாள் இந்தியா இசை தயாரிப்பில் சர்வதேச தரத்தை எட்டும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். நவீன ரெக்கார்டிங், மிக்சிங் மற்றும் மாஸ்டரிங் சேவைகளை வழங்குவதன் மூலம் இந்த இடைவெளியைக் குறைப்பதில் எங்களின் சோனிக் சான்க்டம் ஸ்டூடியோஸ் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்பதே எனது லட்சியம் ஆகும் என்றும் அவர் தெரிவித்தார்.


கருத்துகள் இல்லை