சற்று முன்



எலக்சன் திரை விமர்சனம் !

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகரான உறியடி விஜயகுமார் நடிப்பில் எலக்சன் மற்றும்  பாவல், ஜார்ஜ் மரியான், திலீபன், ப்ரீத்தி அஷ்ராணி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தை இயக்குனர் தமிழ் இயக்கியுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலால் ஒரு ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களுக்குள் என்ன மாதிரியான விஷயங்கள் நடைபெறுகின்றது, ஒரு ஊருக்குள் எவ்வளவு சிக்கல்கள் ஏற்படுகின்றது என்பதை மையமாக வைத்து படத்தின் கதை நகர்கின்றது. மொத்தம் நான்கு தேர்தல்கள் படத்திற்குள் வருகின்றது. இந்த தேர்தலில் அரசியல் என்றாலே என்னவென்று தெரியாத கதாநாயகன் எப்படி உள்ளே வருகின்றான், அதனால் அவன் எதிர்கொள்ளும் விளைவுகள் என்னென்ன, கதாநாயகனின் அப்பாவே கதாநாயகனுக்காக பிரச்சாரம் செய்யாமல் போனதற்கான காரணம் என்ன? என்பதை இயக்குநர் காட்சிப்படுத்தியுள்ளார். எலக்‌சன் படத்துக்கு வேலூர் மாவட்டம் கதைக்களமாக உள்ளது. 

நடிகர் விஜயகுமார் மிக யதார்த்தமான நடிப்பை நடித்துள்ளார்.

கதாநாயகியும் மிகச் சிறப்பாக நடித்துள்ளார் .

பாவல் என் கதாபாத்திரம் மிகச் சிறப்பு கதையின் கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார்.

ஜார்ஜ் மரியான் மிக அற்புதமாக நடித்துள்ளார் ஒரு தந்தையாக வாழ்ந்துள்ளார்.

இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது.

பாடல்கள் சுமார் தான்.

இத்திரைப்படம் முழுக்க முழுக்க அரசியல் பின்புறத்தை சுற்றி நகர்கிறது.  

ஆக மொத்தத்தில் அனைவரும் பார்க்கக் கூடிய திரைப்படம்.

Rating : 3 / 5 

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை