சற்று முன்



பிடி சார் திரை விமர்சனம் !


தமிழ் சினிமா உலகில் பல முகங்கள் கொண்ட இசையமைப்பாளர் பாடகர் நடிகர் என்று ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் பிடி சார்.

நடிகை அனிகா, காஷ்மீரா, பிரபு, பாண்டியராஜன், பாக்கியராஜ், தியாகராஜன், இளவரசு, தேவதர்ஷினி, பட்டிமன்றம் ராஜா மற்றும் பலர் நடித்துள்ளனர். திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் இயக்கியுள்ளார்.

இப்படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.

திரைப்படம் கொங்கு மண்டலத்தை சுற்றி எடுக்கப்பட்டுள்ள திரைப்படம்.

ஈரோட்டில் பிரபல கல்வி நிறுவனத்தில் பிடி வாத்தியாராக வேலை பார்க்கும் ஹிப் ஹாப் ஆதியை அவரது அம்மா நேரம் சரியில்லாத காரணத்தால் பொத்தி பொத்தி வளர்க்கிறார். தன் பள்ளி நிறுவனத்தில் மேஜிக் சுவர் எனும் சுவாரஸ்யமான விஷயத்தை மாணவர்களுக்கு மத்தியில் உருவாக்கி பாராட்டுகளைப் பெறுகிறார். ஆனால் இதே சுவரால், எதிர்வீட்டுப் பெண்ணான அனிகா சுரேந்திரன் மூலம் எதிர்பாராத பிரச்னை, அதுவும் அவர் வேலை பார்க்கும் கல்வி நிறுவனத்துக்குள்ளேயே ஏற்படுகிறது. விளையாட்டுத் தனமாய் இருந்த ஹிப் ஹாப் ஆதி சமூகப் பிரச்னையாய் மாறும் இந்த விஷயத்தை எப்படி டீல் செய்கிறார்? அவர் எதிர்கொள்ளும் போராட்டம், அனிகாவுக்கு நீதி கிடைத்ததா என்பதே படத்தின் மீதிக்கதை ? 

நடிகர் ஹிப்பாப் ஆதி தனது எதார்த்தமான நடிப்பை காண்பித்துள்ளார்.

நடிகர் பிரபு ஒரு தந்தையாக நன்றாக நடித்துள்ளார்.

நடிகர் இளவரசு முக்கிய கதாபாத்திரம் நடித்துள்ளார் ஒரு தந்தையாக வாழ்ந்துள்ளார் என்று கூறலாம்.

அனிகா மிக அற்புதமாக நடித்துள்ளார் அவரது கதாபாத்திரம் மிகச் சிறப்பு.

நடிகர் தியாகராஜன் நன்றாக நடித்துள்ளார்.

இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது.

ஆக மொத்தத்தில் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய திரைப்படம். 

Rating : 3 / 5 

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை