Multiple Sclerosis, என்பது ஒரு விசித்திரமான நோயாகும் !
Calcutta I’m Sorry
Banner- Pepper Watcher Productions
Multiple Sclerosis, என்பது ஒரு விசித்திரமான நோயாகும். இது முதுகுத் தண்டு மற்றும் மூளையின் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது, இது தனிநபரின் வாழ்க்கையை மிகக் கடுமையான அளவிற்கு பாதிக்கிறது. ஒரு சிலர் மட்டுமே நிலைமையை ஏற்றுக்கொண்டு முன்னேறுகிறார்கள்.
Multiple Sclerosis Society of India பாதிக்கப்பட்டவர்களுக்கு மகத்தான சேவையை செய்து வருகிறது, மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்த எல்லா முயற்சியையும் எடுக்கிறது; பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குகிறது!
மிகவும் பாராட்டப்பட்ட திரைப்படமான Calcutta I’m Sorry, Harry MacLure திரைக்கதை மற்றும் இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. Conoor - இல் இசை ஆசிரியையாகப் பணிபுரியும் Amanda Wright என்ற ஆங்கிலோ-இந்தியப் பெண்ணுக்கு Multiple Sclerosis இருப்பது கண்டறியப்பட்டது. !
Multiple Sclerosis நோயினால் பாதிக்கப்பட்ட அத்தகைய நபர்கள் எவ்வாறு தங்கள் வாழ்க்கையை நகர்த்துகிறார்கள் மற்றும் தொடர்கிறார்கள் என்பதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, MSSI அமைப்பு, திரைப்படத்தின் திரையிடலுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
Ms. Shreya P. Singh, IAS (Exec. Dir., TN Corporation for Development of Women, State Mission Director, National Urban Livelihoods Mission, TN. Govt.), சிறு உரை நிகழ்த்தி திரையிடலை துவக்கி வைத்தார்.
MSSI கெளரவ செயலாளர் AnnGonzalvez மற்றும் எழுத்தாளர்/இயக்குனர் Harry MacLure உடன் இருந்தனர்.
குன்னூரில் இருந்து சென்னைக்கும் (தனது மகளைச் சந்திக்க) கல்கத்தாவுக்கும் (அவரது பேத்தியைச் சந்திக்க) அமண்டா சைக்கிளில் செல்லும் நீண்ட பயணத்தை விவரிக்கிறது திரைக்கதை.
மனித இனம் தன் வாழ்க்கைப் பயணத்தில் சவால்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும், எப்படிச் சமாளிக்க வேண்டும் என்பதை கற்றுக் கொடுக்கும் பாடம்தான், இப்படம்!
CREDITS
Written and Directed by Harry MacLure
CAST - பிரிசில்லா கார்னர் அமண்டாவாகவும், கில்லியன் பின்டோ, மகள் சப்ரினாவாகவும், கில்லியன் வில்லியம்சன், பேத்தி கல்கத்தா- வாகவும் நடித்துள்ளனர்.
இசை மற்றும் ஒலி வ டிவமைப்பு -கணேஷ் ராமண்ணா
ஒளிப்பதிவு & எடிட்டிங் - நிக்கோலஸ் மோசஸ்.
கருத்துகள் இல்லை