சற்று முன்கவுதம் மேனனின் புதிய படைப்பில் யோகி பாபு ? என்னவாக இருக்கும் ரசிகர்கள் ஆவல் ? !


கவுதம் மேனனின் புதிய படைப்பில்  யோகி பாபு ? என்னவாக இருக்கும் ரசிகர்கள் ஆவல் ? !! 

"வாரணம் ஆயிரம்", "காக்க காக்க", "மின்னலே", "விண்ணைத்தாண்டி வருவாயா", "வேட்டையாடு விளையாடு" போன்ற காலத்தால் அழியாத கிளாசிக் படைப்புகளைத் தந்த இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபுவுடன் இருக்கும் விடியோவை பகிர்ந்து, தனது அடுத்த படைப்பு குறித்து மறைமுகமாக ஒரு குறிப்பை எழுதியுள்ளார்.

மம்முட்டியுடன் கௌதம் மேனன் இணையும், அவரது முதல் மலையாளத் திரைப்படம் தாமதமாவதாக வந்த தகவல்களைத் தொடர்ந்து, தற்போது இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. இயக்குநர் கௌதம் மேனன் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு சுவாரஸ்யமான வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவில், கௌதம் மேனன், யோகி பாபு மற்றும் சோஷியல் மீடியா இன்புளுயன்சர் பால் டப்பா ஆகிய மூவரும், ஒரு படப்பிடிப்பு தளத்தில் காரில் அமர்ந்துகொண்டு வைப் செய்கின்றனர். 1986 ஆம் ஆண்டு கமல்ஹாசனின் "விக்ரம்" திரைப்படத்திலிருந்து "வனிதாமணி" என்ற இசைஞானி இளையராஜா இசையில் உருவான கிளாசிக் பாடலுக்கு மூவரும் வைப் செய்யும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. யாரும் எதிர்பாராத இந்த மூவர் கூட்டணி குறித்து, ரசிகர்கள் தங்கள் உற்சாகத்தைப் பகிர்ந்து, ஆவலுடன் பல கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.


https://www.instagram.com/reel/C8bXQ25yrAO/?igsh=YXFlbGcyYTJvb29m


கருத்துகள் இல்லை