சற்று முன்கல்கி திரை விமர்சனம் !


இந்திய சினிமாவில் உலகில் பேன் இந்திய படமான கல்கி இப்படத்தில்  பிரபாஸ், கமலஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் , ஷோபனா, பசுபதி நடித்துள்ளனர்.

மற்றும் சிறப்பு தோற்றத்தில் விஜய் தேவர்கொண்டா , இயக்குனர் ராஜமவுலி நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தை  இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கியுள்ளார்.


படத்தின் ஆரம்பத்திலேயே மகாபாரதப் போரை காண்பிக்கிறார்கள். அதில் மகாபாரதப் போரில் கௌரவர்கள் சார்பாக பாண்டவர்களை எதிர்த்து துரோணாச்சாரியாரின் மகன் அஸ்வத்தாமா போரிடுகிறார். அவர் தன்னிடம் இருக்கும் மிகப்பெரிய ஆயுதமான பிரம்மாஸ்திரத்தை வைத்து பாண்டவர்களுக்கு பிறக்க இருக்கும் குழந்தையை வயிற்றிலேயே கொல்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணன், அஸ்வத்தமாவிற்கு சாகாத வரத்தை கொடுத்து விடுகிறார்.


பின் உடல் முழுவதும் ரத்தம் வழிந்து நான் கலியுகத்தில் ஒரு தாயின் வயிற்றில் பிறக்கும் போது என்னை நீ காப்பாற்ற வேண்டும். அப்போது தான் உன்னுடைய சாபம் நீங்கும் என்று கிருஷ்ணன் கூறுகிறார். இப்படி இந்த மகாபாரதப் போர் முடிந்த 6000 ஆண்டுகள் பிறகு தான் கல்கி படத்துடைய கதை துவங்குகிறது. உலகத்தின் முதலும் கடைசி நகரமாக மிஞ்சி இருப்பது காசி. மக்கள் அனைவரும் சுப்ரீம் யாஸ்கினின் கமலஹாசனின் கொடுங்கோல் ஆட்சிக்கு அடிபணிந்து வாழ்கிறார்கள்.

இன்னொரு பக்கம் கங்கை நதி வற்றி பஞ்சத்திலும் பசியிலும் மக்கள் வாழ்கிறார்கள். மறு பக்கம். அதிகாரம் செல்வம் படைத்த மக்கள் மட்டும் செல்வ செழிப்பாக, தங்களுக்கான உலகத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த இடத்திற்குள் புகுந்து தனக்கு தேவையான பணத்தை சேர்ந்து தானும் சந்தோசமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று ஹீரோ பிரபாஸ் நினைக்கிறார். கமலஹாசனின் அரசை அளித்து மீண்டும் உலகத்தில் அமைதியை நிலைநாட்ட மக்களிடம் இருக்கும் ஒரே நம்பிக்கை கல்கி.

கல்கி ஆக பிறக்கும் குழந்தையை தான் தீபிகா படுகோன் சுமக்கிறார். எப்படியாவது அந்த குழந்தையை அளித்து ப்ராஜெக்ட் கே என்ற தன்னுடைய குறிக்கோளை அடைய வேண்டும் என்று கமலஹாசன் துடிக்கிறார். ஆனால், அந்தக் குழந்தையை காப்பாற்றி தன்னுடைய சாபத்தை போக்கிக் கொள்ள வேண்டும் என்று பல ஆண்டு காலமாக அஸ்வத்தாமா காத்துக் கொண்டிருக்கிறார். அந்தக் குழந்தையை கண்டுபிடித்து அதன் மூலம் தன் கனவை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்று பிரபாஸ் நினைக்கிறார்.

இறுதியில் அஸ்வத்தாமா தனது சாபத்திலிருந்து மீண்டாரா? கமலஹாசனின் ப்ராஜெக்ட் கே திட்டம் என்ன? பிரபாஸின் கனவு நிறைவேறியதா? என்பதே படத்தின் மீதி கதை.

அஸ்வத்தாமன் ஆக அமிதாப்பச்சன் நடித்துள்ளார்.

கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார் அவரது நடிப்பு இப்படத்திற்கு மிகப்பெரிய பக்கபலமாக அமைந்துள்ளது.

தீபிகா படுகோன் ஒரு தாயாக வாழ்ந்துள்ளார்.அழகாக உள்ளார்.

பிரபாஸ் நன்றாக நடித்துள்ளார் அவரது கதாபாத்திரம் நன்றாக உள்ளது.

கமலஹாசன் அவர்களது நடிப்பு சிறப்பு கிளைமாக்ஸ்சில் வரும் காட்சிகள் அற்புதம்.

இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது.

வி எப் எக்ஸ் காட்சிகள் நன்றாக பயன்படுத்தி உள்ளனர் மிக அற்புதமாக உள்ளது.

இத்திரைப்படம் மகாபாரதத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.

ஆக மொத்தத்தில் அனைவரும் பார்க்கக்கூடிய திரைப்படம்.

Rating : 3.5 / 5 

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை