சற்று முன்



உலக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தினத்தை முன்னிட்டு தோல் தானம் குறித்து சிம்ஸ் மருத்துவமனை விழிப்புணர்வு நிகழ்ச்சி !

உலக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தினத்தை முன்னிட்டு தோல் தானம்  குறித்து சிம்ஸ் மருத்துவமனை விழிப்புணர்வு நிகழ்ச்சி..!


சென்னை- ஜூலை 25.  2024.  உலக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 15 ஆம்  தேதி கொண்டாடப்படுகிறது.  சிகிச்சையில் நவீனத்தை கடைப்பிடிப்பதோடு  சிகிச்சை பற்றிய விழிப்புணர்வையும் மக்களிடம் கொண்டு செல்வதில் முனைப்போடு செயல்பட்டு வருகிறது சிம்ஸ் மருத்துவமனை. அந்த வகையில் இந்த ஆண்டு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊட்டும் வகையில் ஜூலை 15 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைத்துறை மற்றும் நோயாளிகளின் பராமரிப்பில் இதன் முக்கிய பங்கு குறித்த விழிப்புணர்வை  மேற்கொண்டது.

இவற்றில் நோயாளிகளுக்கு இலவச ஆலோசனைகள், அறுவை சிகிச்சை நடைமுறைகள், முதன்மை மருத்துவர்களுக்கான மருத்து வசிகிச்சை திட்டங்கள் மற்றும்  ஜூனியர் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான பயிற்சி முறைகள் போன்றவை மேற்கொள்ளப்பட்டன.  

 சிம்ஸ் மருத்துவமனை தோல் தானம் பற்றிய விழிப்புணர்வை மேலும் அதிகரிக்கும் வகையில்   சிம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு வினாடி -வினா போட்டி நடத்தியதோடு முன்று பிரிவுகளின் கீழ் பரிசுகள் வழங்கியது. 

விழிப்புணர்வை அதிகரிக்க தோல் தானம் குறித்த  சுவரொட்டி அதாவது போஸ்டர்  போட்டிகள் வைத்து அதன் மூலம் 3 வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகளை பெற்றனர். 

மேலும் சிம்ஸ் மருத்துவமனை   மற்ற மருத்துவ கல்லூரி மாணாக்கர்களுக்கும் இந்த தோல் தானம் குறித்த விழிப்புணர்வு மேம்படுத்தும் பொருட்டு குறும்பட போட்டியையும் அறிவித்திருந்தது.   இந்த குறும்பட போட்டிகள் இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டன. ஒன்று சிம்ஸ் மருத்துவமனை ஊழியர்கள், இரண்டாவது  பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை முதுகலை பட்டதாரிகள் ஆவர்.  ஊழியர்களுக்கான குறும்பட போட்டிகளில் 10 அணிகள் பங்கேற்று 4 அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.  முதுகலை பட்டதாரிகளில் 6 அணிகள் கலந்து கொண்டு இரண்டு அணிகள் பரிசுகளை பெற்றன. 

இவர்களுடன் சிம்ஸ் ICAPS  குழு, நிறுவனர் டாக்டர். கே. ஸ்ரீதர், இயக்குநர் டாக்டர். ஆர். கிருஷ்ணமூர்த்தி மற்றும்  இப்பிரிவில் இயங்கும் அனைவரு ஒன்றிணைந்து இணைந்து தோல் தானம் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்தினர். 

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வுகளுக்கு பிறகு பிரபல பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் பேராசிரியர்  டாக்டர் ஜி. கார்த்திகேயன் சிறப்புரை ஆற்றினார் இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது  வழங்கப்பட்டது. 

உலக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தினம் முன்னிட்டு ஒரு வாரம் வரை நடைபெற்ற இந்த விழிப்புணர்வு விழா துணைத்தலைவர் டாக்டர். ராஜூ சிவசாமி, மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் சங்கீதா, தலைமை செயல்பாட்டு அதிகாரி திரு.  சூரஜ் மற்றும் மருத்துவமனை ஊழியோர்கள் ஆகியோர் தலைமையில் இனிதே நிறைவடைந்தது.  இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் மற்றும் இயக்குநர் ரமேஷ் கண்ணா வெற்றிபெற்றவர்களை பாராட்டினார்.   சிகிச்சையிலும் விழிப்புணர்வை எடுத்து செல்வதிலும் சிம்ஸ் எப்போதும் முன்னோடியாக செயல்படுகிறது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை