பிதா திரை விமர்சனம் !
தமிழ் சினிமா உலகில் புதிய முயற்சியாக எடுக்கப்பட்டு இருக்கு படம் தான் பிதா ஒரே நாளில் 23:23 மணிக்குள் உலக சாதனையை முயற்சித்துள்ளார் இயக்குனர்.
இப்படத்தில் நடிகர் ஆதிஷ் பாலா, சாம்ஸ் , அனு கிருஷ்ணா , ஸ்ரீராம் சந்திரசேகர் , மாரிஸ் ராஜா , அருள்மணி , ரெஹானா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தை இயக்குனர் எஸ் குகன் இயக்கியுள்ளார்.
தொழிலதிபர் அருள்மணியை கடத்தி வைத்துக்கொண்டு அவரது மனைவியிடம் ரூ.25 கோடி பணம் பறிக்க முயற்சிக்கும் ஆதேஷ் பாலா, சாம்ஸ் மற்றும் மாரீஸ் ராஜா ஆகியோர் நாயகி அனு கிருஷ்ணாவையும் கடத்துகிறார்கள். காது கேளாத, வாய் பேச முடியாத 10 வயது சிறுவனான அனு கிருஷ்ணாவின் தம்பி ஆபத்தில் சிக்கியிருக்கும் தனது அக்காவை காப்பாற்ற முயற்சிக்கிறார். சிறுவனின் முயற்சி வெற்றி பெற்றதா?, ஆதேஷ் பாலா மற்றும் அவரது கூட்டாளிகள் முயற்சி வெற்றி பெற்றதா? என்பதை ‘படத்தின் கதை.
நடிகர் ஆதிஷ் பாலா மிக நன்றாக நடித்துள்ளார் அவரது கதாபாத்திரம் சிறப்பு.
நடிகர் அருள்மணி மறைவுக்குப் பிறகு இத்திரைப்படம் வெளியாகி உள்ளது அவரது கதாபாத்திரம் நன்றாக உள்ளது மிக நன்றாக நடித்துள்ளார்.
சாம்ஸ் நன்றாக நடித்துள்ளார் .அவரது காமெடி படத்திற்கு மிகப்பெரிய பக்கபலமாக அமைந்துள்ளது.
இப்படத்தில் மிகப்பெரிய கதாபாத்திரம் ரஹானா தான் மிக நன்றாக நடித்துள்ளார் அவர் கொடுக்கும் டுவிஸ்ட் கிளைமாக்ஸ் அனைவரையும் கவரும் மிக அழகாக உள்ளார் சிறப்பான நடிப்பு.
இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது.
திரைப்படத்தை ஒரு நாளில் எடுத்து வெற்றியாக்கிய இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
ஆக மொத்தத்தில் அனைவரும் பார்க்கக் கூடிய திரைப்படம்
Rating : 3 / 5
கருத்துகள் இல்லை