சற்று முன்எமகாதகன் திரை விமர்சனம் !

தமிழ் சினிமா உலகில் புதுமுக நடிகர் நடிகைகள் நடிப்பில் எமகாதகன்.

கார்த்திக் ஸ்ரீராம் , ரஷ்மிதா ,  சதீஷ், மனோஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை இயக்குனர் கிஷன் ராஜ் இயக்கியுள்ளார். 


முன்னொரு காலத்தில் பாஞ்சாயி என்ற பெண் விடுத்த சாபத்தால் குடும்பத்தின் மூத்த ஆண் பிள்ளைகள் திருமணம் செய்துக் கொண்டால் இறந்து விடுகிறார்கள். பாஞ்சாயின் சாபத்தில் இருந்து தப்பிப்பதற்காக அவரை கடவுளாகவும் ஊர் மக்கள் வழிபடுகிறார்கள். அப்படி இருந்தும் அவர்களின் சாபத்திற்கு எந்த ஒரு தீர்வும் கிடைக்காமல், அவர்களின் நிலை அப்படியே தொடர்கிறது. அதே சமயம், சிலர் சாபத்தை நம்பாமல் திருமணம் செய்துக்கொண்டாலும் அவர்கள் சில நாட்களிலோ அல்லது  மாதங்களிலோ மர்மமான முறையில் இறந்து விடுகிறார்கள். ஊர் கட்டுப்பாடு என்று கூறி இத்தகைய மரணங்கள் பற்றி காவல்துறையிடமும் சொல்லாத இந்த விசித்திர கிராமத்தைச் சேர்ந்த நாயகன் கார்த்திக் ஸ்ரீராம், தான் காதலித்த நாயகி ராஸ்மிதா ஹிவாரியை ஊர் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்துக்கொள்கிறார்.

சாபத்தை சட்டை செய்யாமல் திருமணம் செய்துக்கொண்டு மகிழ்ச்சியாக வாழும் நாயகன் திடீரென்று ஊர் முச்சந்தியில் இறந்து கிடக்கிறார். அவரது மரணத்திற்கு பாஞ்சாயி சாபம் தான் காரணம், என்று ஊர் மக்கள் நம்பினாலும், நாயகி ராஸ்மிதா தனது கணவரின் மரணத்தில் ஏதோ மர்மம் இருப்பதை அறிந்துக்கொள்கிறார். அது பற்றி கண்டுபிடிப்பதற்காக களத்தில் இறங்கும் நாயகி அதில் வெற்றி பெற்றாரா?, சாமியின் பெயரால் நடக்கும் மர்ம மரணங்களின் பின்னணி என்ன? என்பதை  சொல்வது தான் ‘எமகாதகன்’ படத்தின் கதை.

கார்த்திக் ஸ்ரீராம் மிக நன்றாக நடித்துள்ளார் அவரது கதாபாத்திரம் சிறிது நேரம் வந்தாலும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை.

ரஷ்மிதா மிக அழகாக உள்ளார் நன்றாக நடித்துள்ளார் வீரமான பெண்மணியாக படத்தில் தோன்றியுள்ளார்.

சதீஷ் என் கதாபாத்திரம் நன்றாக உள்ளது.

இப்படத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் கொடுத்த வேலையை மிக கச்சிதமாக செய்துள்ளனர் அனைவரும் நன்றாக நடித்துள்ளனர்.

இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது.

பாடல்கள் சுமார்தான்.

இயற்கையின் காட்சிகள் கிராமப்புற வாசனையை திரைப்படம் மூலம் நம் காணலாம்.

இயக்குனர் கிஷன் ராஜ் நன்றாக இயக்கியுள்ளார்.

ஆக மொத்தத்தில் அனைவரும் பார்க்கக் கூடிய திரைப்படம்.

Rating : 3 / 5 

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை