சற்று முன்



ஏ ஆர் எம் திரை விமர்சனம் !

தமிழ் சினிமா உலகில் பேன் இந்திய படங்கள் வந்து கொண்டிருக்கின்றன அந்த வரிசையில் டோவினோ தாமஸ் நடிப்பில் ஏ ஆர் எம். 

இது மலையாளத் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை இயக்குனர் ஜித்தின் லால் இயக்கியுள்ளார் 

டோவினோ  தமஸுக்கு  50வது திரைப்படம் ஆகும் 

 மற்றும்  கீர்த்தி செட்டி , ஐஸ்வர்யா ராஜேஷ், பாசில் ஜோசப் , ரோகினி , ஹரிஷ் உத்தமன் ,  அஜு , ஜெகதீஷ் , கபீர் துவான் சிங் மற்றும் பலர் நடித்துள்ளனர். 


கதையின் ஆரம்பமே:

 விண்ணிலிருந்து விண்கள் சியோதிகா கிராமத்திற்கு வந்து விழுகிறது

அந்த விண்கல்லை ஒரு மன்னன் எடுத்துச் செல்கிறான். பஞ்சபூதங்களை அடக்கக்கூடிய சக்தியாக ஒரு விளக்கை உருவாக்குகிறார். 

அந்த மன்னனுக்கு ஒரு சிறிய பிரச்சனை ஒரு வடநாட்டுக்காரருடன் ஒரு போரில் தோல்வி அடையசமயம் அப்பொழுது அந்த மன்னன் எப்படி தப்பிக்க வேண்டும் என்று ராஜதந்திரத்துடன் சிந்திக்கும் பொழுது ஒரு கல்வனை வரவேற்கின்றனர் அவன் அதில் வெற்றி பெறுகிறான் அந்த மன்னனை காப்பாற்றுகிறான். 

அவன் கேட்ட பரிசு .

அவனுக்கு கொடுத்த வாக்கினால் அந்த விளக்கு சியோதிகா கிராமத்திற்கு வந்து அடைகிறது. 


இச்சமயத்தில் சீயோதிகாவில் கிராமத்தில் மனியன் என்ற திருடன் இருந்தான் அவன் அந்த விளக்கை திருடி சென்றபோது மக்களிடையே பிடிபடுகிறான் அவனை கொன்று விடுகிறார்கள். 

இதனால் ஊர்மக்கள் அந்த குடும்பத்தை திருட்டு குடும்பம் என்று ஒதுக்கி வைக்கிறார்கள். 

மணியின் பேரன் அஜயன் இதை எப்படி கையாளுகிறான். 

மணியன் திருடி சென்ற விளக்கு நிஜமா அது உண்மையான விளக்கு எது என்பதை மிக சுவாரஸ்யத்துடன் இயக்குனர் கூறியுள்ளார் அந்த திருட்டு பழியில் இருந்து மணியன் வம்சம் மிண்டதா அஜயன் அதில் வெற்றி பெற்றானா அவரது கவுரவத்தை காப்பாற்றினானா என்பதே  இப்படத்தின் கதை  ?


டோவினோ தாமஸ் நடிப்பு பிரமாதம் மிக அழகாக நடித்துள்ளார் மூணு  விதமான  கதாபாத்திரம்  ஆரம்பம் முதல் மிக அற்புதமாக நடித்துள்ளார். 

ஐஸ்வர்யா ராஜேஷ் சிறிது நேரம் வந்தாலும் அவரது கதாபாத்திரம் நன்றாக உள்ளது. 

கீர்த்தி செட்டி மிக அழகாக உள்ளார் அவரது கதாபாத்திரம் நன்றாக உள்ளது இவரது காதல் காட்சிகள் அனைத்தும் உணவுப்பூர்வமாக  உள்ளது.

பாசில் ஜோசப் மிக நன்றாக நடித்துள்ளார் படத்திற்கு மிக உறுதுணையாக பக்க பலமாக கதாபாத்திரமாக அமைந்துள்ளது. 

நடிகை ரோகினி ஒரு தாயாக வாழ்ந்துள்ளார் கதாபாத்திரமாகவே மாறி உள்ளார். 

மற்ற நடிகர் நடிகைகள் அனைவரது கதாபாத்திரம் மிக நன்றாக உள்ளது அவர்கள் கொடுத்த வேலையை மிகக் கச்சிதமாக செய்துள்ளனர். 

இத்திரைப்படம் ஒரு ஆன்மீக சார்ந்து வியக்க கூடிய ஒரு அற்புதமான திரைப்படம்.

திரைப்படத்தை இயக்குனர் மிக நன்றாக இயக்கியுள்ளார். 

ஆக மொத்தத்தில் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய திரைப்படம்.

Rating : 3 / 5 

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை