சற்று முன்



தேசத்தின் டிரக் திருவிழா நிகழ்வில்வழங்கும் பணியில் டாடா மோட்டார்ஸ் !

 


தேசத்தின் டிரக் திருவிழா நிகழ்வில் 

பெரிய அளவிலான பிசினஸ் இலாபமீட்டலை சாத்தியமாக்க வாடிக்கையாளர்களுக்கு திறனதிகாரம் வழங்கும் பணியில் டாடா மோட்டார்ஸ்  

     டாடா மோட்டார்ஸ் – ன் டிரக்குகளது சமீபத்திய தொகுப்பின் மீது நேரடி அனுபவம்  

எரிபொருள் சிக்கனத்தை அதிகரிக்க, மொத்த இயக்க செலவைக் குறைக்க மற்றும் இலாபமீட்டலை உயர்த்த, நிபுணத்துவ வழிகாட்டல் 

சென்னை: 18 செப்டம்பர் 2024: இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக வாகன தயாரிப்பாளரான டாடா மோட்டார்ஸ்,2024 செப்டம்பர் 19 அன்று சென்னை தேசத்தின் டிரக் திருவிழா (Desh Ka Truck Utsav) என்ற பெயரில் ஒரு முழுநாள் நிகழ்வை நடத்தவிருக்கிறது.  டாடா மோட்டார்ஸ் – ன் டிரக்குகளது சமீபத்திய அணிவரிசை மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட சேவைகள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடிய சிறப்பான உள்நோக்குகள் மற்றும் நேரடி அனுபவத்தின் மூலம் சென்னை டிரக்கிங் சமூகத்திற்கு திறனதிகாரம் வழங்குவதே இந்நிகழ்வை நடத்துவதன் குறிக்கோளாகும்; டிரக் உரிமையாளர்களுக்கு இலாபமீட்டும் திறனை அதிகரிப்பதும் மற்றும் குறைவான மொத்த உரிமைத்துவ செலவுகளை (TCO) வழங்குவதே இந்நிகழ்வின் நோக்கமாகும்.  

இந்நிகழ்வின்போது, டிரக்குகளது செயல்திறனை அதிகரிப்பது, எரிபொருள் சிக்கனத்தை மேம்படுத்துவது மற்றும் அதிக இலாபத்தை அடைவது மீது நிபுணர்களின் வழிகாட்டலை பங்கேற்பாளர்கள் பெறுவார்கள்.  வாகனங்களின் செய்முறை விளக்க நடவடிக்கைகளும் மற்றும் டாடா மோட்டார்ஸ் வழங்கும் விற்பனைக்குப் பிந்தைய விரிவான ஆதரவு குறித்த தகவல்களும் பங்கேற்பாளர்களுக்கு பயனளிக்கும் விற்பனைக்குப் பிந்தைய ஆதரவில் வாகனது பராமரிப்பு செயல்திட்டங்கள், டிரக்குகளின் மேலாண்மைத் தீர்வுகள், வருடாந்திர பராமரிப்பு சேவை திட்டங்கள் மற்றும் சம்பூர்ணா சேவா 2.0 முன்னெடுப்பின் வழியாக 24/7 சாலையோர சர்வீஸ் உதவி ஆகியவை உள்ளடங்கும்.  அவர்களது டிரக்குகளின் மூலம் நீண்டகால வெற்றியை முன்னெடுத்துச் செல்வதற்கான விரிவான தகவலை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கென இந்நிகழ்வு வடிவமைக்கப்பட்டிருக்கிறது.  கூடுதலாக, இந்நிகழ்வின் ஒட்டுமொத்த அனுபவத்தை இன்னும் அதிக சுவாரஸ்யமானதாக ஆக்குவதற்காக நீண்டகால கூட்டாண்மை மற்றும் ஆதரவை வழங்கி வரும் முக்கிய வாடிக்கையாளர்களையும் டாடா மோட்டார்ஸ் பாராட்டி கௌரவிக்கும்.  

டாடா மோட்டார்ஸ் வர்த்தக வாகனங்கள் துறையின் டிரக்குகளுக்கான துணைத்தலைவர் மற்றும் பிசினஸ் ஹெட் திரு. ராஜேஷ் கவுல் பேசுகையில், “வாடிக்கையாளர்களது தேவைகளை புரிந்துகொள்ளவும் மற்றும் அவைகளுக்கு நல்ல தீர்வுகளை வழங்கவும் டாடா மோட்டார்ஸ் அர்ப்பணிப்புடன் செயலாற்றுகிறது.  அவர்களோடு நேரடியாக தொடர்பு கொள்வதற்கும் மற்றும் எமது சமீபத்திய டிஜிட்டல் தீர்வுகளை முன்னிலைப்படுத்துவதற்கும்  ஒரு முக்கியமான செயல்தளத்தை தேசத்தின் டிரக் திருவிழா எங்களுக்கு வழங்குகிறது.  எமது சிறப்பான டிரக்குகளின் தயாரிப்பு அணிவரிசை மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட சேவைகளை காட்சிப்படுத்துவதற்கு இது எங்களை அனுமதிப்பதுடன், வாடிக்கையாளர்களது நீண்டகால இலாபமீட்டல் நிலை மற்றும் வெற்றி மீது அவைகளின் நிஜ உலக தாக்கத்தையும் இந்நிகழ்வு எடுத்துக்காட்டும்.  எமது நவீன தீர்வுகள், வாடிக்கையாளர்களது பிசினஸ் செயல்பாடுகளை எதிர்காலத்திற்கு தயாரானதாக ஆக்குவதற்கெனவே வடிவமைக்கப்பட்டவை; மாறிவரும் பிசினஸ் செயல்தளத்தில் அவர்கள் எப்போதும் முன்னணி வகிப்பதை இவை உறுதி செய்யும்.  எமது ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் மற்றும் பகிரப்படும் வெற்றியை அடையவும் எமது வாடிக்கையாளர்களோடும், பார்ட்னர்களோடும் கலந்துரையாடி செயல்படும் இத்தருணத்தை நாங்கள் ஆவலோடு எதிர்நோக்குகிறோம்,” என்று கூறினார்.  


 LPT, அல்ட்ரா, சிக்னா மற்றும் பிரைமா உட்பட, கேபின் விருப்பத்தேர்வுகளுடன் டிரக்குகளின் விரிவான அணிவரிசையை டாடா மோட்டார்ஸ் வழங்குகிறது.  சந்தை சுமைகள், விவசாயம், சிமெண்ட், இரும்பு மற்றும் ஸ்டீல், கண்டெய்னர், பெட்ரோலியம், கெமிக்கல், வாட்டர் டேங்கர்கள், எல்பிஜி, எஃப்எம்சிஜி, கட்டுமானப்பணி, சுரங்கப்பணி மற்றும் நகராட்சி துப்புரவு செயல்பாடுகள் உட்பட, சரக்கு போக்குவரத்தின் மாறுபட்ட தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் விதத்தில் முழுமையாக கட்டமைக்கப்பட்ட பாடி விருப்பத்தேர்வுகளுடன் இந்த டிரக்குகள் கிடைக்கப்பெறுகின்றன.  திறன்மிக்க ஃபிளீட் மேலாண்மைக்கான டாடா மோட்டார்ஸ் – ன் இணைக்கப்பட்ட வாகன செயல்தளமான ஃப்ளீட் எட்ஜ் இத்தயாரிப்பு தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.  நீண்டகாலம் உழைப்பதற்காக நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டு, வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கென கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ள இவ்வாகனங்கள், டாடா மோட்டார்ஸ் – ன் விரிவான வலையமைப்பின் ஆதரவைப் பெற்றவை.  நாடெங்கிலும், 2500 டிரக் சர்வீஸ் முனைகளையும், தமிழ்நாட்டில் மட்டும் 220 அமைவிடங்களையும் கொண்டிருக்கும் இந்நிறுவனம், முழுமையான ஆதரவை உறுதி செய்வதன் வழியாக வாகனங்கள் அதிக நேரம் களத்தில் இயங்குவதற்கு வழிவகுக்கிறது. 


கருத்துகள் இல்லை